காந்தி சொல்லித்தான் கடிதம் எழுதினாரா சவார்க்கர்.?
ஒன்றிய அரசின் அமைச்சர் ராஜ்நாத் சிங்க்
என்ன சொல்ல வருகிறார்? எப்போதும் உண்மையை மறைத்து அதனூடாக எந்த
வரலாற்றைக் கட்டமைக்க போகிறார்கள்?
சவார்க்கர் அந்தமான் சிறையிலிருந்து தன்னை விடுவிக்க ஆங்கிலேய
அரசுக்கு அனுப்பிய கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. 1911ல் சற்றொப்ப 6
கடிதங்கள்/ மனுக்கள் எழுதி அனுப்புகிறார் சவார்க்கர். அப்போது காந்தி தென்னாப்பிரிகாவில்
இருந்தார். 1915ல் காந்தி இந்தியா வந்தப் பிறகும் சவார்க்கர் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஆனால் அதற்கும் காந்திக்கும் தொடர்பில்லை.
தொடர்பு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் சவார்க்கரின் தம்பி மும்பையில் வாழ்ந்த
நாராயண் காங்கிரசில் இருந்தவர் தான் காந்திக்கு கடிதம் எழுதி தன் இரு சகோதர ர்களின்
விடுதலைக்கு எதாவது செய்ய முடியுமா என்று உதவிக் கேட்கிறார். காந்தி அவருக்கு எழுதிய
பதில் கடித த்தில் விவரமாக தன் போராட்டங்கள் அனைத்து அரசியல் சார்புடையவை (their revolutionary
acts had been purely political in nature) என்று விவரமாக கடிதம் எழுதும்படி அறிவுரை
வழங்குகிறார்.
காந்தியின் இக்கடித த்தின் சில வரிகளை cut paste செய்து வழக்கம் போல வரலாறு திரிக்கப்படுகிறது.
சவார்க்கர் எழுதி 1928ல் வெளிவந்த அவர் புத்தகம் “ சிறையில்
என் வாழ்க்கை” (My life in prison) புத்தகத்தில் காந்தியைப் பற்றி எதுவும் எழுதப்படவில்லை.
சவார்க்கர் எழுதாத தை அவர் தொண்டர்கள் ஏன் எழுத நினைக்கிறார்கள்?
அந்தமான் சிறைக்கு இப்போது போனாலும் நெஞ்சம் பதைக்கிறது. கலாபானி… சுற்றிலும் கருங்கடல்.. சிறையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.. இச்சுழலில் எந்த ஓர் அரசியல் கைதியும் விடுதலைக்கேட்டு மனு கொடுப்பதால் மட்டுமே இழிந்தவராகிவிட மாட்டார். இப்படி மனு கொடுத்த பல அரசியல் கைதிகள் இந்திய வரலாற்றில் உண்டு. சவார்க்கரின் அரசியல், இந்து தேசத்துடன் முரண்படுபவர்களுக்கும் இப்புரிதல் உண்டு.
இதைக் கூட புரிந்து கொள்ளாமல் இவர்கள்
செய்யும் அரசியலுக்கு என்ன பெயர் சரவணா?!!
No comments:
Post a Comment