India, that is Bharat, shall be a union of STATES
- அரசியல் சட்டக்கூறு 1.
இந்தியாவின் மொழிவழித் தேசிய இன மா நிலங்களை
ஆங்கிலத்தில் “ஸ்டேட்” என்று குறிப்பிடுகிறோம்.
ஸ்டேட் என்பது ஓர் அரசியல் சொல்.
அதை மொழியாக்கம் செய்து நாம் பயன்படுத்தும்
மாநிலம் என்ற சொல் அரசியல் சொல் அல்ல.
ஸ்டேட் என்பதன் நேரடி அரசியல் சொல் தமிழில்
“நாடு” என்றே பொருள்படும்.
சுதந்திரமாக இருக்கக்கூடிய இறையாண்மையுள்ள
நாட்டைத்தான் உலக அளவில் “ஸ்டேட்” என்றழைப்பார்கள்.
ஆனால் இந்தியாவில் மொழிவழிப்பிரிந்த
இறையாண்மையுள்ள துணை தேசியங்கள்,
அதிகாரமிக்க அரசியல் உறுப்பினராக இல்லாமல்
குறைந்த அதிகாரங்கள் கொண்ட நிர்வாகப்
பிரிவுகளாகவே இருக்கின்றன.
இந்திய விடுதலைக்கு முன், இந்தியாவின் நிர்வாகப்பிரிவுகள் ‘மாகாணங்கள்” என்றழைக்கப்பட்டன. இன்று “மா நிலங்கள்” என்றழைக்கப்படுகின்றன. அவ்வளவுதான்!
அரசியலமைப்பு அவையில் பங்கேற்ற மகாராட்டிராவின்
எச். வி. படாஸ்கர்
“இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, உண்மையான
அதிகாரங்களை உள்ளடக்கிய முழுமையான கூட்டாட்சியை
உருவாக்க நினைத்திருந்ததால்தான்
‘மாகாணங்கள்” என்ற சொல்லைக்
கைவிட்டு
‘ஸ்டேட்’ என்ற
சொல்லை ஏற்றார்கள்”
என்றும்
“ஆனால், மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும்
வெட்டப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு,
மாநிலங்கள் வெறும் நிர்வாகப் பிரிவுகளாக ஏற்படுத்தபட்டுவிட்ட நிலையில் “ஸ்டேட்” என்பதே பொருந்தாதப் பெயர் ஆகிவிட்டது”
என்றும் குறிப்பிடுகிறார்.
-
No comments:
Post a Comment