பட்ஜெட் ..
பட்ஜெட் என்றவுடன் ஒரு டென்ஷன் வந்துவிடுகிறது.
டென்சனாகித்தான் என்னக் கிழிச்சிடப்போறோம்..
பட்ஜெட் பத்தி
சுவராஸ்யமா எதையாவது எழுதலாம்னு தான்
இப்படி ஒரு கூகுள்
தொகுப்பு..
1) 1) உலகத்திலேயே
பெரிய பட்ஜெட் இந்தியாவின் பட்ஜெட் தானாம்.
இந்தப் பெரிய என்பது இதன் பக்க அளவைக் குறிக்கிறதா அல்லது
பற்றாக்குறையை
குறிக்கிறதா… !
2) 2)பட்ஜெட்
என்ற சொல் BOUGETTE என்ற பிரஞ்சு சொல்லிலிருந்து
வந்தது. இதன் பொருள் சின்ன பை… /சின்ன சூட்கேஸ்.
கிழக்கிந்திய
கம்பேனி வெளியிட்ட பட்ஜெட். இங்கிலாந்து அரசியிடம்
சமர்ப்பித்த
பட்ஜெட். ஸ்காட்லாந்து பொருளாதர நிபுணரின்
உதவியுடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது.
முதல் பட்ஜெட் ஏப்ரலில் வந்ததைக் காரணமாக வைத்து இனிமேல் பட்ஜெட்டை 01 ஏப்ரலுக்கு மாற்றினால் என்ன? எப்படிப்பார்த்தாலும் நம்மை முட்டாள் ஆக்குகிற பட்ஜெட் தானே!
4) 4)சுதந்திர
இந்தியாவின் முதல் பட்ஜெட் 26 நவம்பர் 1947 ல் வந்த து.
NO
TAX BUDGET.
5) 5) 1950 வரை பட்ஜெட் ராஷ்டிரபதி பவனிலிருந்து அச்சிடப்பட்டு
வெளியானது. அதன் பின் மிண்ட் ரோட் அச்சகத்திற்கு மாறியது. 1980ல் அரசு அச்சகத்திற்கு
மாற்றப்பட்டது.
ஏன் பட்ஜெட் பிரிண்டிங்க் அட்ரஸ் மாறிக்கிட்டே
இருந்திச்சினு கேட்காதீங்க. வெளியே சொன்னா
வெட்கக்கேடு.. ராஷ்டிரபதிபவனிலிருந்து பட்ஜெட்
லீக் ஆயிடுச்சி.. அதைக் கண்டுப்பிடிக்க முடியாம
நம்ம ஆட்கள் ப்ரிண்டிங்க் பிரஸ்ஸை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். இதுதான் ரகசியம்.
6) 6) 1955
வரை பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது. 1955=56 பட்ஜெட் இந்தியிலும் வெளிவர ஆரம்பித்தது.
இந்தியிலா…
அப்படின்னு யாரும் கேட்கலை. காரணம் கணக்கு விவரம் தானேனு நினைச்சிருப்பாங்களோ… என்னவோ.
7) 6) அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜிதேசாய். 10 முறை. அடுத்து ப. சிதம்பரம் 9 முறை, பிரணாப்முகர்ஜி – 8 முறை,
யஷ்வந்த்
சிங்கா – 8 முறை. மன்மோகன்சிங்க் 6 முறை.
இன்றுவரை இந்த ரிகார்ட் பிரேக் ஆகலை!
8) 7) இந்திய
பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் இந்திராகாந்தி. 1970-71. இரண்டாவது
பெண் நிர்மலா சீதாராமன்.
9) 8) யஷ்வந்த்
சிங்க் தாக்கல் செய்த பட்ஜெட் 1973-74 “கறுப்பு பட்ஜெட்”
என்றழைக்கப்படுகிறது.
ஜஸ்ட்
ஒரு ரூ 500 கோடி பற்றாக்குறை பட்ஜெட் போட்ட தால்
அந்த பட்ஜெட்டை black budget என்றவர்கள்.. இன்னிக்கு வரும்
பட்ஜெட்டுகளுக்கு blank budget என்பார்களா?!!
10) பட்ஜெட்டுகளுக்கு சில சிறப்பு பெயர்கள் கொடுத்தார்கள்.
மன்மோகன்
சிங்க் பட்ஜெட் 1991-92க்கு EPOCHAL BUDGET என்றழைத்தார்கள்.
காரணம்
இந்தப் பட்ஜெட் இந்திய தேசத்திற்கு பொருளாதர விடுதலையைக் கொடுத்ததாம்.. economic
liberation to Nation..
என்ன
விடுதலை அதுனு கேட்காதீங்க..
11) ப.சிதம்பரம் பட்ஜெட் 1997-98 கனவு பட்ஜெட்
என்றழைக்கப்படுகிறது.
குறைந்த
வரிவிதிப்பு பட்ஜெட் என்றார்கள்.
12) யஷ்வந்த் சிங்கா பட்ஜெட் 2000 -2001 மில்லினியம்
பட்ஜெட்.
ஐடி
செக்டருக்கு முக்கியம் கொடுத்த பட்ஜெட் இது என்பதால்.
13) பட்ஜெட் தொடரில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம்
..2014ல் அதிக நேரம் பேசிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.
14) பட்ஜெட்டில் மிக அதிகமான சொற்களைப் பயன்படுத்தியவர்
மன்மோகன் சிங்க். அவர் பயன்படுத்திய சொற்கள் 18,650.
இதை எல்லாமா கணக்கு வைக்கிறாங்கா… பின்னே வரவு
செலவு பட்ஜெட்னா சும்மாவா..
15) இந்திய ரயில்வே பட்ஜெட் தனியா வந்த தை நிறுத்திட்டு
2017 முதல்
ஒரே
பட்ஜெட்டா கலந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
**
பட்ஜெட் ஒரு குட்டி அலசல்
ஒவ்வொரு ஆண்டும் வரி வசூல் அதிகரித்து வருகிறது,
செலவினம் அதிகரித்து வருகிறது,. கார்ப்பரேட் வரி விகிதத்தை 30% முதல் 25% வரை குறைத்த பின்னர், கார்ப்பரேட்
வரி வசூல் , அதாவது அரசுக்கான
வருமானம் குறைகிறது. தொடர்ந்து இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை, கடன் தொகை, அதற்கான வட்டி எகிறிக்கொண்டிருக்கிறது...
ஆதலால்,
1) வளர்ச்சியும் பற்றாக்குறையும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும் போது
அது என்ன பொருளாதாரம்னு யாராவது சொல்லுங்க!
4) நிதி பற்றாக்குறை ரூ .15,06,812 கோடி. இதுக்கு எங்கே எல்லாம் கடன்வாங்கப்போறோம்?
இதை
எல்லாம் எழுதினா மட்டும் பட்ஜெட் நமக்கானதாக மாறிவிடுமா என்ன?
எல்லாம்
பட்ஜெட் தீர்மானிக்கிறது. இருந்தாலும் பட்ஜெட் பற்றிப்
பேசி
எழுதி அவரவர் பொருளாதர அறிவைக் காட்டிக்கலாமே தவிர
வேற
எதுவும் செய்ய முடியாது. அரசு சொல்கிற வருமான வரியை
ஒழுங்காகக்
கட்டி தன் தேசபிமானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்
பொதுஜனக்கூட்டத்தில்
நானும் ஒருத்தி.
நல்லாவே கூகுளில் சர்ச் செய்து இருக்கீங்க. குட்
ReplyDelete