இந்தியாவின் தலைநகரம் டில்லி கல்லறைகளின் நகரம்.
மன்னராட்சி காலத்தின் அடையாளமாய் முகலாய சாம்ராஜ்யத்தின் அரசர்களின் கல்லறைகள் டில்லியைச் சுற்றி இருக்கின்றன. .
அக்கல்லறைகளுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நம் நாட்டின் மக்களாட்சி தந்த
தலைவர்களின் சமாதிகள்.. டில்லி" ராஜ் கட் " சுற்றி. நம் தலைநகரின் 245 ஏக்கர் நம் தலைவர்களின் சமாதிகள் தான் ஆக்கிரமித்திருக்கின்றன.
இப்படியே போனால் பாராளுமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் எங்கே வைத்திருப்பது என்ற அச்சத்தில் நம் அரசு விழித்துக்கொண்டது. அதனால்
தற்போது எந்த ஒரு தேசியத் தலைவரின் மறைவுக்கும் தனி இடம் ஒதுக்கப்போவதில்லை என்றும் தேசியத் தலைவர்களின் இறுதிச்சடங்கை மறைந்த ஜனாதிபதி ஜெயில்சிங் கல்லறைத் தோட்டத்தில் நடத்துவது என்பதை அமுலுக்கு கொண்டுவந்திருப்பதாக
அறிவித்திருக்கிறார்கள்.
*
"நான் இறந்தப் பிறகு எனக்காக சிலை எழுப்பப்போகும் அன்பர்களே..
உங்களை ஒன்று கேட்கிறேன். யாருக்கு வேண்டும் சிலை?
உங்களை வேண்டுவதெல்லாம் இதுதான். தெய்வம் இல்லை என்று கூறிவந்த என்னைத் தெய்வமாக்கி இழிவுப் படுத்தாதீர்கள்"

-சிலிக் கவிஞன் பாப்லோ நெருடா.
**
**
மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மீது அந்த நாட்டு மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர்.
அவரது மறைவுக்கு பின்னர் அங்குள்ள சாலைகள், தெருக்கள், முக்கிய இடங்களுக்கு அவரது பெயர் சூட்டும் முயற்சியில் மக்கள் ஈடுபடக்கூடும் என்பதால்
‘‘எனது சகோதரர், தான் இறந்த பிறகு தனது பெயர் எந்தவொரு நிறுவனத்துக்கும், தெருவுக்கும், பூங்காவுக்கும் அல்லது இன்னபிற இடங்களுக்கும் சூட்டப்படுவதை விரும்பவில்லை. எனவே அவருடைய பெயரை சூட்டுவதற்கு தடை விதித்து பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும்’’ என்று இப்போதைய அதிபர் ராவுல் காஸ்ட்ரோ சொன்னதாக
அண்மையில் வாசித்த செய்தி நினைவுக்கு வருகிறது.

***
உலகிலேயே மிக அழகான கடற்கரைகளில் நம் சென்னையின் மரீனா கடற்கரையும் ஒன்று.
இந்தியாவின் மிக நீளமான கடற்கரையும் கூட. அதுவும் பாறைகள் நிறைந்த எம் மும்பை கடற்கரை போன்றதல்ல மரீனா கடற்கரை. அழகான மணற்பாங்கான
இயற்கையின் கொடை மரீனா பீச். .
***
தமிழ்ச் சமூகத்தில் தெய்வ வழிபாடு... தனிமனித வழிபாட்டின் வரலாறுதான்.
அதைப் பகுத்தறிவுடன் அணுகி சமூக உளவியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய திராவிட இயக்கம்... தமிழ்ச் சமூகத்தில் தலைவர்களின் துதிபாடல்களையும்
தனி மனித வழிபாடுகளையும் தலைமையின் பிம்ப வழிபாடுகளையும் வளர்த்தெடுத்ததில் முன்னணியில் இருந்தது. பொதுவுடமை பேசியவர்களும் சரி, காந்தியம் பேசியவர்களும் சரி.. இந்த தனிமனித வழிபாட்டுகளின் கோஷத்தில் மயங்கி அவர்களே கவியரங்க துதுபாடிகளாக மாறிப்போன அவலம் நடந்தது. எல்லாம் விருதுகளுக்காகவும் அங்கீகாரங்களுக்காகவும் என்பதையும் தாண்டி இருத்தலின் அடையாளமாகவும் ஆகிப்போன அவலம் நடந்தது. நடக்கிறது.. !

#"பகுத்தறிவு பேசிய பராசகதி
அண்ணாமலையாகி ஆருடம் சொன்னது
நடந்துவிட்டது... சுபம் . "#
#"பகுத்தறிவு பேசிய பராசகதி
அண்ணாமலையாகி ஆருடம் சொன்னது
நடந்துவிட்டது... சுபம் . "#
தெய்வம் இல்லை என்று கூறிவந்த என்னைத் தெய்வமாக்கி இழிவுப் படுத்தாதீர்கள்
ReplyDeleteஇவரல்லவா மாமனிதர்