Saturday, January 30, 2016

தேசப்பிதாவும் ஒரு தமிழனும்

டியர் தேசப்பிதாவே...

Ahmedabad, January 15, 1916 _ Gandhi's letter to VOC, whose draft reply is seen below Gandhi's signature.

உங்கள் நினைவு நாளில் உங்களைப் போற்றவில்லை என்றால்
நான் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்படலாம்.
எனவே..
போற்றி போற்றி
தேசப்பிதாவைப் போற்றி
போற்றி போற்றி
மகாத்மாவைப் போற்றி..
போற்றி போற்றி
எப்போதும் லேட்டாகவே
விழித்துக்கொள்ளும்
மகாத்மாவின் உள்ளுணர்வைப் போற்றி..
போற்றி போற்றி போற்றி..
வாழ்க தேசப்பிதா.

இதெல்லாம் இருக்கட்டும்.
ரூ 394 & 12 அணா தொகை
தென்னாப்பிரிகாவில் வாழும் தமிழர்
கப்பலோட்டிய வ உ சிக்கு திரட்டிய நிதி..
வாங்கி வந்த நீங்கள்
வ உ சி கேட்காமலேயே அவருக்குத் திரட்டிய தொகையை
கொடுத்திருக்க வேண்டும்.
அல்லது நீங்கள் சென்னை வந்திருந்தப்போது
1915 மே மாதத்தில் வ உ சி உங்களைச் சந்திக்க வந்திருந்தப்போதே
எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால்.. நீங்களோ.. 6 மாத காலம் எடுத்துக் கொண்டீர்கள்.
அதுவும் வ உ சி பலமுறை கெஞ்சியும்
பணம் பெறுவதற்கான உரிமையைக் கோரியும்
நீங்கள் காலம் தாழ்த்தினீர்கள்.
வாங்கி வந்த தொகை எவ்வளவு என்று தெரியாது
என்று சொன்னீர்கள்.
தென்னாப்பிரிகாவிலிருந்து அவர்கள் ரசீதுகள்/கணக்கு ஏடு
அனுப்பும் வரை காத்திருக்க வைத்தீர்கள்..

சரி.. எபபடியோ..
ரூ 394,& 2 அணாவை
நீங்கள் திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள்!
அதற்காகவே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

நீங்கள் கணக்கு விஷயத்தில் இவ்வளவு கறாராக
இருந்தது சரிதான். ஆனால் அத்தொகை உங்களிடம் சிலகாலம்
இருந்ததால், அதற்குரிய வட்டிப்பணத்துடன் நீங்கள் திருப்பிக்
கொடுத்திருந்தால் .. இன்னும் கூட இரண்டு போற்றி போற்றி
கூடுதலாகப் போட்டிருப்பேன்.

அது எப்படி.. உங்கள் சத்தியசோதனையில்
இந்தக் கணக்கு மட்டும் கழிக்கப்பட்டது?

மகாத்மாஜி..
உங்களுடன் உங்கள் பரிவாரத்தில் இருந்த
கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதுதான்
இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.
"To keep Gandhiji in Poverty , the congress party has to spend
millions of rupees"

நன்றி: வ உ சிக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பதிப்பித்து
உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆ.இரா.வேங்கடாசலபதி
அவர்களுக்கு..



4 comments:

  1. இது எனக்கு புதிய செய்தி!

    (எனது வலையில் காந்திஜி பற்றிய பதிவு: http://nizampakkam.blogspot.com/2012/01/gandhiji.html )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்க்ள் வ்லைத்தளம் வாசிக்கிறேன்.

      Delete
  2. இது ஏற்கனவே முகநூலில் வந்த செய்தி.....வ.உ.சி. கடனில் தவித்த போது இந்தப் பணம் கிடைக்கவில்லை. வரலாற்றில் இது போல் மறைக்கப்பட்டவைஂஏராளம்.

    ReplyDelete
    Replies
    1. பலர் பல இடங்களில் இச்செய்தியைப் பேசி இருந்தாலும் கடிதங்களை வாசித்தப்போது உண்மை ரொம்பவே சுட்டது.நன்றி

      Delete