Saturday, April 4, 2015

கிரிராஜ் சிங்கின் FAIR AND LOVELY

‘ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கருப்பின பெண்ணை) திருமணம் செய்து கொண்டிருந்தால், அவர் ஒரு வெள்ளை நிற பெண்மணியாக இல்லாது இருந்தால், காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா’’ என கேள்வி எழுப்பினார். இதை ஒருநிருபர் தனது ‘ஸ்மார்ட் போன்’ மூலம் பதிவு செய்து, அது டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மந்திரி கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும்
நைஜீரிய தூதரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.





இது செய்தி:

இச்செய்தியை காங்கிரசு கட்சி மற்றும் நைஜீரிய பெண் என்ற இரண்டு லென்சுகளையும் கழட்டி வைத்துவிட்டு நிதானமாக யோசித்துப் பார்த்தால்
கிரிராஜ் சிங்க் சொனனது தான் யதார்த்தம். பாவம் அவர்.. அதை
அலங்கார வார்த்தைகளால் சொல்லாமல் ரொம்பவும் வெளிப்படையாகச் சொல்லி மாட்டிக்கொண்டுவிட்டார், அவ்வளவுதான்.

மெட்ரிமோனியல் பக்கத்தைப் புரட்டுங்க்ள்.. FAIR looking girl is most wanted.
இது இல்லை என்று எவரால் மறுக்கமுடியும்? நம் செய்திகள் வாசிக்கும்
பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள்.. மாங்கொழுந்து நிறத்தில் இருக்கும்
கண்ணகிப்போல ஒரு பெண் செய்திவாசிப்பவராகவோ அல்லது
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ ஏன் காட்டப்படவில்லை?
ஏர் இந்தியாவில் ஒரு விமானப்பணிப்பெண் கூட ஏன் நம்மவீட்டு
கறுப்பு/மாநிறத்தில் இல்லை?
பாட்டி, அம்மா, அத்தை, அக்கா, தங்கை என்று த்ன் வாழ்க்கையில்
தன்னைச் சுற்றி கறுப்பு நிறத்தில் பெண்கள் இருக்க, நம் இளைஞ்ர்களுக்கு
மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் பெண் பார்த்துக்கொண்டு அலைகிறோம்?
நம் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகிகள் மட்டுமல்ல,
துணைப்பாத்திரங்களிலிருந்து வேலைக்காரி, வில்லி கதை மாந்தர்கள் வரை
கறுப்பு நிறத்தில் காட்டப்படுவதே இல்லையே, ஏன்?
ஆசியாவில் மட்டும் கறுப்பு நிறத்தை வெள்ளையாக்கும் அழகுச்சாதனங்கள்
உற்பத்தியும், அதன் சந்தை மதிப்பும் பலகோடி டாலர்களாக இருப்பது
ஏன்?
நம் குழந்தைகளுக்கு வாங்கும் செரிலாக், அமுல் குழந்தை உணவு டப்பாக்களில் எப்போதும் வெள்ளை/சிவப்பு நிறக்குழந்தைகள் மட்டுமே
சிரித்துக்கொண்டிருக்கிறார்களே, எப்படி? கறுப்பு நிறக்குழந்தைகள் சிரிப்பதில்லையா?
கறுப்பு தான் எனக்குப் பிடிச்சக்கலரு.. என்ற பாடலில் சூப்பர் ஸ்டாரும்
கறுப்பு தான் என்று வரும். அட.. அதே சூப்பர் ஸ்டார் திரையில் வரும்போது
இவ்வளவு மேக்கப் போட்டு வட நாட்டு கதாநாயகிகளில் கலருக்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக்கொண்டு மட்டுனே நடிக்க வேண்டி இருப்பது ஏன்?
கறுப்பு தான் எனக்குப் பிடிச்சக் கலரு என்ற பாடலை இதே சூப்பர் ஸ்டார்
ஒரு கறுப்பு நிற கதாநாயகியைப் பார்த்துப் பாடுவது மாதிரி.. ம்ம் கற்பனை செய்ய முடிகிறதா நம்மால்..!

சரி.. இதை எல்லாம் விட்டுவிடலாம்.. காங்கிரசுக் கட்சி நேற்று வந்த அக்கட்சியில் சேர்ந்த குஷ்பு அவர்களுக்கு ஊடக செய்தி தொடர்பாளர் பதவியைக் கொடுத்தது எதற்காக? குஷ்புவுக்கு அக்கட்சியில் இருக்கும்
மற்ற பெண்களை விட அதிகமாக கட்சியைப் பற்றியும் அரசியல் பற்றியும் தெரியும் என்ற காரணத்தினாலா..!! அல்லது.....
(திமுக என்ன காரணத்தினால குஷ்புவை வைத்திருந்தார்களோ அதே
காரணம்தான் காங்கிரசு குஷ்புவைப் பயன்படுத்தும் காரணமும் , ஒரு சில
வித்தியாசங்களுடன்)

இதற்கெலலம் காரணம் நம் மனதில் நம்மை அறியாமல் இருக்கும் சில
கருத்துருவாக்கங்கள். வெள்ளை, சிவப்பு இந்த இரண்டுக்கும் எதிர்மறை
கறுப்பு. வெள்ளை புனிதத்தின் தூய்மையின் அடையாளம். மென்மையின்
அடையாளம். அப்படியானால், அந்த எதிர்மறையான கறுப்பு எதிர்மறை அடையாளமாக எழுதப்ப்டாத பிம்பமாகிறது.
வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்று
நம் வடிவேலு அண்ணன் சொல்லும் நகைச்சுவைக்கூட வெள்ளை என்பது
நேர்மையின் அடையாளம் என்ற கருத்துருவாகத்திலிருந்து எழுவது.
அதன் எதிர்மறை கறுப்பு?
வெள்ளை/சிவப்பு நிறக்காரார்கள் வ்ளமையிம் செல்வச்செழிப்பின் அறிவின் அடையாளம். கறுப்புநிறக்காரர்கள் வறுமையின், உடல் உழைப்பின்
அடையாளம்.
அமெரிக்கனுக்கு அடிமையாக வேலைப்பார்க்கும் ஒரு வொயிட்காலர்
கம்ப்யூட்டர் காலனி நாட்டின் அடிமைக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும்
நம் சமூகத்தில் வயலில் உழைப்பவனுக்கும் பனைமரத்தில் ஏறுபவனுக்கும் மீன்விற்பனுக்கும் இருப்பதில்லை.!
உடல் உழைப்பை இழிவாகக் கருதும் சமூகத்தில் கிரிராஜ சிங்க் சொன்னது
உண்மை. பொய்யல்ல. 

1 comment: