Wednesday, March 4, 2015

பிபிசி ஆவணப்படமும் இந்திய அரசும்
திகார் சிறையில் குற்றவாளியாக இருப்பவனின் பேச்சு
நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதைவிட
அதிர்ச்சியாக இருப்பது அந்த முகேஷ் சிங்கிற்காக
வாதிடும் வக்கீலின் பேச்சு.

lawyer AP Singh, who defended the gang in court
echoed his views on women:
"If my daughter or sister engaged in pre-marital activities
and disgraced herself and allowed herself to lose face and character
by doing such things, I would most certaintly take this sort of sister
or daughter to my farmhouse, and in front of my entire family,
I would put petrol on her and set her alight."

ஒரு குற்றவாளி மட்டுமல்ல, சட்டம் படித்த ஒரு
வக்கீலின் மனநிலையும் குற்றவாளியின் அலைவரிசையில்
தான் இருக்கிறது.

பிபிசியின் ஆவணப்படத்தைப் பற்றி எதுவும் காட்டக்கூடாது
என்று மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்க் இந்தியாவின் அனைத்து
தொலைக்காட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
திகார் சிறையில் சொன்னது குற்றவாளியின் குறுக்குப்புத்தி என்றால்
அவனுக்காக வாதிடும் இந்த வக்கீல் சொன்னதை எதில் சேர்ப்பது.

திகார் சிறைச்சாலையில் மட்டுமல்ல, நம் நீதிமன்ற வாசலில்
நடமாடும் சட்டம் பயின்ற வழக்குரைஞர் பேசியதை என்ன
செய்யப்போகிறார்? இப்பேச்சு ஒரு வழக்கறிஞ்ர் தன்
கட்சிக்காரருக்காக பேசிய பேச்சு மட்டுமா?

இம்மாதிரி ஆவணப்படங்கள் உலக அரங்கில் இந்தியாவை
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடாக அடையாளப்படுத்தும்
என்று நீங்கள் அச்சப்படுவதில் அர்த்தமிருக்கிறது என்றாலும்
அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. நீங்கள் ஒரு கதவை
மூடினால் பல கதவுகள் திறந்துவிடும். குனன் போஸ்போராவில்
நம் இராணுவமே காஷ்மீர் பெண்களை பாலியல் வங்கொடுமை
செய்தது முதல் கோவா, உ.பி, என்று அனைத்து மாநிலங்களின்
புள்ளிவிவரங்களும் மறைத்துவிடக்கூடியதல்ல.

இன்றைய கூகுள் யுகத்தில் எதையும் இந்தியாவில் தடை
செய்வதால் மட்டும் எதுவும் ஆகிவிடாது. எப்படியும்
எல்லோரும் பார்க்கத்தான் போகிறார்கள். எனவே, காரணங்களை நேருக்கு நேர்
நாம் சந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.


இன்றைக்கு அமெரிக்க இராணுவத்தில் பணிபுரியும் பெண்கள்
அவ்ர்களின் இராணுவ அதிகாரிகளால் பாலியல் வன் கொடுமைக்குள்ளாகி
இருக்கிறார்கள். அதுவும் அப்படி பாதிக்கப்பட்ட பெண், அதே காரணத்திற்காக
இராணுவத்திலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறாள்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண் நூரிஸ் சொல்கிறார்

" I WANTED TO DIE BECAUSE I BASICALLY FEEL I GOT FIRED FOR BEING
RAPED"

IT IS A WEAPON OF WAR என்ப்தை இன்று உலகமே அறியும்.
சமத்துவம், சம உரிமை இல்லாத எவ்விடத்தும் இந்த
யுத்தம் நடந்துக்கொண்டே இருக்கும். ஆண் - பெண் சமத்துவம்,
சம உரிமை குறித்து காத்திரமான உரையாடல்களை, புரிதல்களை,
அடிப்படை கல்வியை, விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்குத் தடையாக இருக்கும் உங்கள் மதம், சடங்கு, நம்பிக்கைகளை
கொண்டாடிக்கொண்டு பிபிசி மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை.
இம்மாதிரி தடை செய்வதால் இப்பிரச்சனைக்கு எந்தத் தீர்வும்
ஏற்படப்போவதில்லை.

3 comments:

 1. தேவையான கோபத்துடன், சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை. என் தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் - நன்றி.

  ReplyDelete
 2. ஏற்கெனவே இந்த விசயம் அனைவருக்கும் தெரிந்து தானே இருக்கிறது..
  நீங்கள் சொல்வது போல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இப்படித் தடை போட்டு என்ன பயன்?
  வழக்கறிஞர் இப்படிப் பேசலாமா என்று கோபம் வந்தது..ஆனால் இந்த வழக்கில் குற்றவாளிகள் பக்கம் ஆஜர் ஆவதே அவர் அசிங்க மனத்தைக் காட்டுகிறது. நல்ல கட்டுரை.

  ReplyDelete
 3. ஒரு வழக்கறிஞரின் பேச்சு அதிர்ச்சியை அல்லவா அளிக்கிறது
  அருமையான கட்டுரை

  ReplyDelete