Friday, May 2, 2014

குண்டு வெடிப்புக்குப் பின்...








சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு..

குண்டு வெடிப்பு செய்திகளைப் பார்த்துக் கொண்டே சாப்பாடு
மேசையில் இப்போதெல்லாம் எங்களால் சாப்பிட முடிவதில்லை.
ஏனேனில் மும்பையில் வாழும் நாங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு
வகையில் இதனால் பாதிக்கப்பட்டோம், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாதிப்பின் அழுதக் கண்ணீரின் சுவடுகளும் இன்னும்
காய்ந்துவிடவில்லை.. தமிழகத்தில் வாழும் உங்கள் அனைவருக்கும்
சொல்ல விரும்பவதெல்லாம்.....


> பலியானவர்களின் ரத்தத்தின் மீது எவரும் அரசியல் நடத்த'
இடம் கொடுத்துவிடாதீர்கள்.

> எந்த ஒரு தனிப்பட்ட இனம், மதம் குறித்தும் பரப்பப்படும்
ஊகங்களும் ஊடகங்களின் பரபரப்பான செய்திகளுக்கும்
இரையாகிவிடாதீர்கள்.

> ரயில் நிலையங்கள் போன்ற பொதுஜன நடமாட்டம் அதிகமிருக்கும்
இடங்களில் இன்னார் நினைத்தால் தடுத்திருக்கலாம் என்றெல்லாம்
வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நம்பாதீர்கள்.

> ஆளும் அரசையோ காவல்துறையையோ கண்டிப்பதாலோ அவர்களின் கவனக்குறைவால் நடந்ததாகவோ பேசுவதைத் தவிர்க்கவும்.
நடைமுறை சாத்தியக்கூறுகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

> பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியுடன், ரத்ததானம், உறவினர்களுக்கு
அறிவித்தல் இத்தியாதி நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதில்
கவனம் செலுத்துங்கள்.

> மொத்தத்தில் எவரும் இம்மாதிரியான களத்தில் நின்று கொண்டு அரசியல் நடத்துவதை அனுமதிக்காதீர்கள். இதை நடத்திக் காட்டினால் தான்
இம்மாதிரியான நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் ஆபத்தான
அரசியலை முறியடிக்க முடியும்.




2 comments:

  1. சரியான நேரத்தில் மிகச்சரியான எச்சரிக்கை. அவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாதபோது, எந்த மதம் என்னும் ஆராய்ச்சி அரசியல் லாபங்களுக்கு மட்டுமே பயன்படும். நக்குற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன? ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்னும கதையாக யாரோ ஏதோ கணக்குப் போடுகிறார்கள் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டிய நேரமிது. பதற்றப் பட்டால், குண்டுபோட்ட அழிவைவிடவும் அதுதான் அவர்களின் வெற்றியாகிவிடும். நல்ல பதிவு மாதவி. நன்றி.

    ReplyDelete