Tuesday, March 5, 2013

அந்தக் கதை

மராத்தி கவிஞர் கவிதா மகாஜன் எழுதிய  the story
கவிதையின் தமிழாக்கம்.

அவள்
சூரிய வெளிச்சத்தை
உணர்ந்த தருணங்களின் கதையிது.

மண்ணில் அந்த வீடு
விரைவாகவும் உறுதியாகவும்
எழுந்து நின்றது.
கதவுகளும் சன்னல்களும
நம்பமுடியாமல்
வாய்ப்பிளந்து நின்றன.
சுவர்கள் பெருமூச்சுவிட்டபடியே
அவசரமாகக் கண்களை மூடும்போது
அவள்
பிரகாசமான 
சூரிய வெளிச்சத்துண்டுகளை
தன் நாக்கில் வைத்துக் கொண்டாள்.

தலைவன் அவளிடம் கேட்டான்:
உன் வசீகரமான மேனி
சிவந்த உதடுகள்
குளிர்ந்த விழிகள்
எல்லாம் என்னவாகும்?

கண்களில் மின்னும் ஆசைகளுடன்
கைகளைப் பொன்னூஞ்சலாக்கி
அவன் நிழல்
அவளை நெருங்கும் ஆசையில்..
ஆனால் அவளோ
சிரித்துக் கொண்டே இருந்தாள்
பொன்னிறமாக ஒளிவீசும்
சூரிய வெளிச்சத்தை
விடாமல் பிடித்துக் கொண்டே.

3 comments:

  1. நன்றி தனபாலன்.
    மராத்தி பெண்கவிஞர்களில் கவிதாமகாஜன் என் தோழி. அவருடைய
    20க்கும் மேற்பட்ட கவிதைகளை தமிழ் மொழியாக்கம் செய்திருக்கிறேன் அவருடைய உதவியுடன். நாவல், சிறுகதை, பெண்ணியக்கட்டுரைகள், காட்சி ஊடகத்தில் அவர் தயாரிக்கும் அவருடைய நாவல்.. என்று பல்வேறு தளங்களில் தன் காத்திரமான பங்களிப்பைக் கொடுத்திருப்பவர். விருதுகள் பரிசுகளின் குவியலுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருப்பவர் என்றாலும் நம்ம தமிழகத்து அலட்டல் அவரிடம் கிடையாது!

    ReplyDelete
  2. நன்றி தனபாலன்.