Tuesday, March 26, 2013

திருமண அழைப்பிதழ்







மேற்கண்ட திருமண  அழைப்பிதழை இன்றைய தினகரன்\மும்பை பதிப்பு
நாளிதழின் கடைசிப் பக்கத்தில் பார்த்தேன். நானும் ஒரு மும்பை வாசியாக
இருப்பதால் உங்கள்அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள
\விரும்பி அழைப்பது என் கடமையாகிவிட்டது.

வருக வருக அனைவரும் வருக.

இத்திருமண அழைப்பிதழில் குடும்பத்தில் மூத்தவன் என்கிற
முறையில் மூத்த சகோதரனின் பெயரை தங்கள் நல்வரவை
விரும்பும் என்றாவது அச்சிட்டிருக்கலாமே என்று
உங்களில் பலர் யோசிப்பது எனக்குப் புரிகிறது.
எனக்கும் அதே எண்ணம் தான் வந்தது.

தலைவரிடம் கேட்டால் தனக்கு எதுவுமே தெரியாது என்பார்.

எல்லாம் பக்தரடித் தொண்டர்களின் வேலை என்று அறிக்கைவிடுவார்.
.
யார் பெயரைப் போடலாம், போடக்கூடாது என்பதை
பொதுக்குழு தீர்மானிக்கும் என்பார்.

பாவம் மூத்தவன்! என்ன செய்வாரோ தெரியவில்லை,
தலவலி, வயத்தவலி என்று ஏதாவது காரணம் சொல்லி
நிகழ்வுக்கு வராமல் இருப்பதைவிட வேறு ஏதாவது
வழி இருக்கிறதா என்ன?

இச்செய்தியை சமகால அரசியல் நிகழ்வுகளுடன்
தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.



2 comments:

  1. கண்டிப்பா இத சம கால அரசியலுடன் தொடர்பு படுத்தனும் !!!

    ReplyDelete
  2. தேவானையா இல்ல தேவசேனவா????
    இந்திரனுடைய மகள் பெயர் என்ன ???

    ReplyDelete