ஸ்காட்லாந்தில் அபிர்டீன் பகுதியில் இருக்கும் செயின்ட் ஜாண்
ஆலயமும் சையத் ஷா முஸ்தபா ஜெம் மஜித் பள்ளிவாசலும்
அருகருகே இருந்தன. பள்ளிவாசல் சிறிதாக இருந்ததால்
தொழுகை நடத்தும் இசுலாமியர்கள் திறந்தவெளியில்
உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள்.
பனிப்பொழியும் நேரம், உறைகள் அணியாத கைகள்,
குளிரில் நடுங்கும் கால்களுடன் அந்த இசுலாமிய சகோதரர்கள்
திறந்த வெளியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொழுகை
நடத்துவதை எல்லோரையும் போல வேடிக்கைப் பார்க்கவில்லை
ஐசக் பூபாலன்.
ஐசக் பூபாலன் செவிலியர் வேலைக்குப் படித்தவர். இலண்டனில்\
கிறித்தவ ஆலயத்தில் போதகராக இருக்கிறார். சம்பந்தப்பட்ட
ஆலய நிர்வாகத்தினரிடம் முறையாகப் பேசி வெள்ளிக்கிழமைகளில்
சர்ச்சில் எதுவும் நடப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அனுமதி வாங்கினார்
வெள்ளிக்கிழமைகளில் இசுலாமியர்கள் சர்ச்சுக்குள் வந்து ஐந்து முறை
தங்கள் தொழுகையை நடத்தலாம் என்றார்.. ஆரம்பத்தில் இசுலாமியர்களிடம்
தயக்கம் இருந்ததாம். ஒன்றிரண்டு பேராக வர ஆரம்பித்திருக்கிறார்கள்,
இப்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இசுலாமியர்களின்
தொழுகை இடமாக சர்ச் .
ஐசக் பூபாலன் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பது
நமக்குப் பெருமை தரும் செய்தி.
(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 21/3/13 )
ஐசக் பூபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி...