Tuesday, January 17, 2012

உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.



உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநிலத்தில் இருக்கும் யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்
யானை என்பதால் இந்த உத்தரவு. எல்லாம் சரிதான்... உத்திர பிரதேசத்தில் யாரும்
கை அசைத்து டட்டா காட்டுவதோ கையை தூக்கி காட்டுவதோ எப்படி சரியாம்?
அதையும் தடை செய்திருக்க வேண்டாமோ? கை காங்கிரசு சின்னம் ஆயிற்றே!

எனவே, இனி உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.
கை முட்டியை ஒரு வெள்ளை துணியால் கட்டி வைத்துக்கொண்டு தான் வெளியில் வர வேண்டும்.
தேர்தல் முடியும் வரை சாப்பிட கூட யாரும் முட்டியை விரித்து வெளி இடங்களில் சாப்பிட
கூடாது. தேர்தல் முடியும் வரை எந்த பயன்பாட்டுக்கும் கைகளை தூக்குவதோ
அசைப்பதோ விரிப்பதோ சட்டப்படி குற்றம்!

5 comments:

  1. அக்கா நாங்கள் காங்கிரஸ் தலைவர்களின் சிலைகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் சின்னத்தை இழுத்து தேர்தல் கமிஷனின் தலையில் தட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. sadayan sabu
    Schedule cleanup
    To tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of sadayan sabu (sadayan.sabu@gmail.com)
    Sent: 18 January 2012 13:44PM
    To: tamil_ulagam@googlegroups.com


    அப்படியா சங்கதி

    லாலு ப்ரசாத் கட்சி தேர்தலில் நின்றால் ஏழை எளியவர்கள் வீட்டில் லாந்தர் எரிக்க முடியாது. தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்

    மரம் வெட்டும் தொழிலை அய்யா ராமதாசுக்கு பதிலாக தேர்தல் ஆணையம் சேய்து விடும். மரத்தில் இரட்டை இலை இருக்கிறதே

    மாம்பழத் தோட்டம் அம்பேல் ராமதாசின் சின்னம்

    சிறுவர்கள் தெருவில் பம்பரம் விட முடியாது வை கோ வின் சின்னம்

    உதய சூரியனை என்ன செய்வாங்க என்ன செய்வாங்க என்ன செய்வாங்க (வடிவேலு தொனியில் படியுங்கள்)
    --

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. Sivam Amuthasiva​m
    Schedule cleanup
    To tamil_ulagam@googlegroups.com
    லாந்தர், மாம்பழம் என்றெல்லாம் ஆராய்ந்தீர்கள் - ஆனால் முக்கியமான ஒன்றை விட்டுட்டீங்களே!

    எவரும் ‘ கை ‘ யுடன் நடமாட முடியாது.

    காங்கிரசின் சின்னத்தை அனைவரும் வெட்டிவிட வேண்டியதுதான்.lol


    --
    நட்புடன்
    சிவம் அமுதசிவம்

    ReplyDelete