Saturday, August 20, 2011

காக்கைகள்






விழித்திருக்கும் போதும்
தூக்கத்திலும்
என்னைத் துரத்துகின்றன
காக்கைகள்.
தனியாகவோ கூட்டமாகவோ.

விழித்திருக்கும் போது
சிறகுகளை விரித்து
என்னைச் சிறைப்பிடிக்க வருகின்றன.
தூக்கத்திலோ என் கபாளத்தைப் பிளந்து
நினைவுகளின்
ஒவ்வொரு ரகசிய அறைக்குள்ளும்
பூட்டுகளை உடைத்துக் கொண்டு
புகுந்துவிடுகின்றன.
அணுஅணுவாய்க் கொத்திக் குதறி
சிடுக்களை மேலும் சிடுக்குகளாக்கி
நரம்பு மண்டலத்தை நாசப்படுத்திவிடுகின்றன.
என் செயல்பாடுகள் என் கட்டுப்பாடுகளை
இழந்துவிடும் அச்சத்தில்
கனவுகளை விலக்கி வைக்க நினைத்து
தோற்றுப் போகிறேன்.
என் தோல்வியைத்
தன் வெற்றிக்கு அடையாளமாக்கி
விழா எடுக்கின்றன காக்கைகள்.

என் முப்பாட்டி காக்கைப்பாடினிக்கு
விருந்தினர் வருகையை
அறிவித்தக் காக்கைகள்
ம்ம் ம்ம்...
மாறியது மனிதர்கள் மட்டுமல்ல
காக்கைகளும்தான்.

1 comment:

  1. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.htm

    ReplyDelete