Sunday, April 21, 2024

நான் கறுப்பி


 நான் கறுப்பி

கறுப்பு என் நிறமட்டுமல்ல

அது என் உரம் திறம்  வலி 

உன் அழகியல் தோற்றுப்போன சுழி.

கறுப்பு என் கம்பீரத்தின் அடையாளம்.

வெள்ளை எலிகளும் வெள்ளைப் பன்றிகளும்

உலாவரும் உன் தேசத்தில்

பச்சையமாய் உயிர்த்திருக்கும்

மழைத்துளியின் கருவறை.

கறுப்பி..

உன் கற்பனைக்கு எட்டாத வானம்

உன் கவிதைகள் தொடாதக் காதலி.

வெண்மை புனிதம்

கருமை இருமையென 

எவன் சொன்னான்?

ஏன் சொன்னான்?

போடா போ..

ஆத்தாவும் அப்பனும்

கறுப்பாக இருப்பதை 

வெளியில் சொல்லாதே.

ஃபேர் அண்ட் லவ்லி தேவதைகளைத்

தேடிக் கண்டுப்பிடி.

பசுவின் பால் மட்டுமே

வெண்மையாக்கும்.

எருமைப்பால்

கறுப்பாக இருக்கும்.

நம்பு.

சொர்க்கலோகத்தில் சிவப்பிகளுடன்

ஆடிப்பாடு.

உன் பிறவிப்பயன் கிட்டும்.

தாகமெடுக்கும் போது

தண்ணீர் குடிக்காதே.

கார்மேக  நீர்த்துளி

கறுப்பின் அடையாளம்.

சிவப்பு வெள்ளையின் மூத்திரம் குடி.

போடா போ.

நான் கறுப்பி.

கறுப்பு என் நிறம் மட்டுமல்ல.


- புதியமாதவி.

நன்றி நங்கை இதழ். இலங்கை.


#புதியமாதவி_20240422

#புதியமாதவி_கவிதை

#puthiyamaadhavi_poems

4 comments:

  1. சினிமா பாடல் ஓன்று நினைவுக்கு வருகிறது கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு……
    இதழின் பெயரும்அழகு👌

    ReplyDelete
  2. வணக்கம் சிறப்பு வாழ்த்துகள் மாதவி

    ReplyDelete
  3. Very much true even our complexion and skin tone strong. Prof Rajalakshmi

    ReplyDelete