Tuesday, April 30, 2024

இளையராஜா vs தலித் அரசியல்

 

இளையராஜாவை வைத்துக் கொண்டு இசையின் உன்னதங்களை

இசையில் அவர் தொட்ட உச்சங்களைப் பேசலாம்.

இசைக் கலைஞராக

அவருடைய பங்களிப்பை

எவரும் மறுக்கவில்லை.

ஆனால் 

தமிழ்நாட்டில் அவரே மறந்துவிட்ட

அவருடைய பிறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு

அவரைத் தங்களுக்கு நெருக்கமானவராக

மானசீகமான

இசைத் தெய்வமாக

தலித் இளைஞர்கள்

வணங்கலாம்.

நாக்கில் அலகு குத்திக்கொண்டு

இளையராஜா

உற்சவங்களில்

தேரிழுக்கலாம்.

இதை எல்லாம்

நாமும் ரசிக்கலாம்.

ஆனால்...

நாம் புரிந்து கொள்ள வேண்டியது: 

தலித் அரசியல்,

ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்கான போராட்டம்

சமத்துவம்...இதிலெல்லாம்

நேரடியாகவும்

மறைமுகமாகவும்

எந்தப் பங்களிப்பும்

செய்யாதவர் இளையராஜா.

இளையராஜாவை வைத்துக் கொண்டு

" தலித் அரசியல், 

தலித் உரையாடல்" 

நிகழ்த்துவது

தலித் அரசியலைத் திரைத் திருப்பும்.

தலித் உரையாடல்களை

பரபரப்பான ப்ரேக் நியூஸ் ஆக்கி இரண்டொரு நாள் சலசலப்பில்

தின்று துப்பிவிடும்.


தன்னை " தலித் சமூகத்தின் அங்கமாக எந்த இடத்திலும் நிறுத்திக் கொள்ள மறுக்கும் தனிமனிதர் இளையராஜா.

இல்லை இளையராஜாவை மையமாக்கி அரசியல் உரையாடல் நிகழ்த்துவோம் என்று சொல்பவர்கள் முதலில் இளையராஜா என்ற தனிப்பட்ட நபரின் அங்கீகாரமும் புகழும் மோதியை அம்பேத்காரோடு

ஒப்பிடுவதற்கு பயன்பட்ட ஓர் ஆயுதமாக இருந்தது இருக்கிறது என்பதை முதலில் பேசுங்கள்.🙏


தென்றல் யாருடைய இசைக்கும் கட்டுப்பட்ட தல்ல!

ராசாவே என்று அவர் இசையில் ஒலிப்பதெல்லாம்

அவராக மட்டுமே

இருந்து விட்டுப் போகட்டும்.

அதில் ஒடுக்கப் பட்டவன் தன்னை இருத்திக் கொள்ள நினைப்பது ரசனையோடு நிற்கட்டும்.

அதைத் தாண்டி

ஒரு ம_ _ அளவும் கூட

அதை வைத்துக் கொண்டு 

எதையும் பிடுங்க முடியாது.


#இளையராஜா_தலித்அரசியல்

#Ilaiyaraja_dalithpolitics


1 comment:

  1. ராசா தனித்துவம்மான மனிதர் இசையில் அவர் சாதித்தது உள்ளபடியே அனைத்து மக்களுள் பாராட்டப்பட்டவர்.எந்த சூழ்நிலையிலும் தன்னை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தி கொண்டது கிடையாது. ஆனாலும் சில நிர்ப்பந்தத்தில்
    அவர் பேசப்பட்டு பெரிய விமர்சனத்திற்க்குள் தள்ளப்பட்டார். எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் உடம்பில் ஈட்டி பாய்ந்து கொண்டோதான் இருக்கும்.இதில் இரிந்து வெளிவருவது மிகவும் கடினம்.

    ReplyDelete