Friday, October 6, 2023

பெரியாரியம் > காந்தியம் > கலை இலக்கியம்

 தமிழ் மண்ணில் பெரியாரியம் எந்தளவுக்கு

தமிழ் கலை இலக்கிய வடிவமாக வெளிவந்திருக்கிறது ?

ஏன் பெரியாரியம் மேடைப்பேச்சுகளுடன் ஆரம்பித்து

அதிலேயெ தேங்கி அதைவிட்டு வெளியில் வரமுடியாமல்

மூச்சுத்திணறுகிறது?

இக்கேள்வியை முன்வைத்தவுடனேயே என் தோழர்கள்
கொதித்தெழுவார்கள். சும்மா பொங்குவதால்
அடுப்புத்தான் பழுதடையும்.
இப்படிப் பொங்கிப் பொங்கியே அடுப்பிலிருக்கும்
பாத்திரமும் காலியாகும். வேறென்ன கண்டோம்?
இத்தனைக்கும் திராவிட அரசியல் தலைவர்கள்
னிமா துறையில் கதை வசனம் எழுதியவர்கள்
என்பதும் அதன் ஊடாக அவர்கள்
எதை மேடைகளில் பேசினார்களோ அதையே அவர்களின் கதைப்பாத்திரங்களையும் பேச வைத்தார்கள், அவ்வளவுதான்.
அதைத்தாண்டி பயணிக்கவில்லை.
இதெல்லாம் நேற்று "பரிணயம்" மலையாள திரைப்படம்
பார்த்த முடித்தப்பின் உறுதியானது.



இத்திரைப்படம் 1994ல் வெளிவந்திருக்கிறது.
தங்கள் சமூகத்தில் பெண்களின் பரிதாபமான நிலையை
அவள் உணர்வுகளை ரொம்பவும் துல்லியமாக
கதைப்போக்கில் காட்டி இருப்பார்கள்.
கதைமுடிவில் அப்பெண் தன்னைக் கர்ப்பினி ஆக்கியவனே
அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அவன் தான் தகப்பன் என்பதை ஒத்துக்கொள்ள
வரும் காட்சியில்
"இவனில்லை என்பாள் அவள்.
என் பிள்ளைக்கு தகப்பன் தேவை என்றால்
ஒரு நளனோ பீமனோ தகப்பன் என்று
சொல்லிக்கொள்கிறேன்" என்பாள்.
(கதைப்போக்கில் கதகளி ஆடிய மாதவன்
அந்த வேடத்தில் வந்துதான் அவளோடு இருந்தான். )

அதன்பின், அப்பெண் இராட்டையில் நூல் நூற்பதோடு
திரைப்படம் முடியும்.
அவள் காந்தியம் பேசவில்லை,
ஆனால் இக்காட்சி கொடுத்த அழுத்தமும் வீரியமும்
விளக்கமும் அவள் எவ்வளவு வசனங்கள்
பேசி இருந்தாலும் வராது.
இப்படியான வெளிப்பாடுகளை
பெரியாரியமும் கொடுத்திருக்க வேண்டும். ..

சம் திங்க் இஸ் மிஸ்ஸிங்க்.

1 comment:

  1. இத்திறைப்படத்தை பார்கவில்லை🙁🙁

    ReplyDelete