Wednesday, May 26, 2021

மகாத்மா காந்தி.. India's first corporate Agent


 

இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஏஜெண்ட்

என்று மகாத்மா காந்தியைப் பற்றி அருந்ததிராய்

கிண்டலடிக்கிறார்.

காந்தியை மகாத்மாவாகக் கொண்டாடுபவர்களுக்கு
அருந்ததிராயின் வாசகம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
காந்தியை மனிதனாக மதிப்பவர்களுக்கு அவர்
பிர்லாவுடனும் வைத்திருந்த உறவு
இன்னும் சில புரிதல்களை ஏற்படுத்தும்.
காந்தி பேசிய கிராமப்புற பொருளாதரம் முதல்
அவருடைய சத்தியாகிரக போராட்டம் வரைக்கும்
பிர்லாவின் பணம் தேவைப்படுகிறது.
வெறும் கையால் முழம்போட முடியாது என்ற
யதார்த்தம் அறிந்தவர் தான் காந்தி.
பிர்லாவின் மாளிகையில் தங்கிக்கொண்டே பிர்லாவுடன்
கருத்து முரண்பாடுகளையும் தொடர்ந்து வைத்தவர்.
பிர்லாவின் எந்த ஓர் அரசியல் ஆலோசனைகளையும்
காந்தி தன் அரசியலில் ஏற்றுக்கொள்ளவில்லை.
காந்தியின் சுதேசி இயக்கம் இந்திய உற்பத்திகளுக்கு
ஆதரவாக இருக்கும் இந்திய தொழில் முனைவோரின்
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பது
பிர்லாவின் எதிர்ப்பார்ப்பாக இருந்தாலும்
அவை முழுமையடையவில்லை.
பிர்லா டில்லியில் கட்டிய லஷ்மி நாராயண் கோவிலை
1938ல் காந்திதான் திறந்துவைத்தார்.
- (பிர்லா கட்டிய கோவில்கள் எல்லாம் கடவுளின் பெயரால்
அழைக்கப்படாமல் இன்றும் அவர்கள் கட்டுகிற
கோவில்கள் எல்லாம் பிர்லா கோவில்கள் தான்!)

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகள் ஒருபக்கம்
இருந்தாலும் பிர்லாவுக்கு அதில்தான் லாட்டரி அடித்தது
என்றுதான் சொல்லவேண்டும். பிர்லா, டாடா , பஜாஜ்
என்று அன்றைய கார்ப்பரேட்டுகள் அனைவரும்
காந்தியுடன் தொடர்புடையவர்கள்.
காந்தி இவர்களுடன் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே
இவர்களின் நிதி உதவியுடன் செயல்பட்டார் என்ற முரண் ..
அன்றைய பொதுவுடமைவாதிகளுக்குப் புரியாதப்
புதிராக இருந்தது.
Mukund Iron and steel works கம்பேனி நஷ்டத்தில் ஓடியது.
கம்பேனி உரிமையாளர் முகுந்த லாலாவுக்கு காந்தி
உதவ நினைத்தார். பஜாஜ் கம்பேனி முதலாளியின்
5வது மகனிடம் நஷ்டத்தில் ஓடும் கம்பேனியை வாங்கச்
சொன்னார். காந்தியின் சொல்லைத் தட்டமுடியாமல்
பஜாஜின் மகன் , முகுந்த் அயர்ன் ஸ்டீலை வாங்கினார்.
இப்படியாக காந்தி அன்றைய கார்ப்பரேட் உலகத்தின்
மெய்க்காப்பாளராக செயல்பட்டிருப்பது தெரிகிறது.
காந்தி பல்வேறு அறக்கட்டளைகளின் பணத்தை
பஜாஜ் வங்கியில் தான் ( நாக்பூர் வங்கி )போட்டுவைத்திருந்தார்.
பஜாஜ்க்கு நிதி நிலை மோசமானதும் சிலர் அந்த
வங்கியிலிருந்து பணத்தை எடுத்துவிடும்படி
காந்திக்கு ஆலோசனை சொல்லியும் காந்தி
அதற்கு செவிமடுக்கவில்லை.காரணம்,
பஜாஜ் மீது காந்தி வைத்திருந்த நம்பிக்கை தான்.
இன்று நாம் பேசும் corporate social responsiblities என்ற
கருத்துருவாக்கத்தை காந்தி அவர் காலத்தில்
வாழ்ந்த கார்ப்பரேட்டுகளுக்கு எழுதிய கடித த்திலிருந்து
பிழிந்து எடுத்துக்கொள்ளலாம்.
பிர்லா மாளிகையில் தங்கினார்.
பிர்லாவின் புல்வெளியில் மாலை தியானங்கள்
நடத்தினார். பிர்லா கொடுப்பதாக சொன்ன பணம்
தமாதமானால் ஏன் கொடுக்கவில்லை இன்னும் என்று
விசனப்பட்டுக்கொண்டார்.. பிர்லாவின் கார்ப்பரேட்
உலகத்தில் காந்தி இப்படித்தான் தாமரை இலைத் தண்ணீராக .. முரண்பட்டுக்கொண்டே...
விந்தைகள் நிறைந்தது காந்தியின் உலகம் மட்டுமல்ல
காந்தியின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு வளர்ந்த
இந்திய முதலாளித்துவ உலகமும் தான்.

5 comments:

  1. செய்திகள் அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  2. அருமையான செய்தி முரண்ணபடுவதுதான் காந்தியின் வழக்கம்.

    ReplyDelete
  3. காங்கிரசார் இதுபடிக்கவேண்டியது

    ReplyDelete
  4. அம்மணி / ஐயா,இதில் முரண்பாடு ஏதுமில்லை; ( மோஹன்தாஸ் கரம்சந்த் ) காந்தி சொல்வதெல்லாம் வெறும் குரைப்பு தான்; அது கடிக்காது என்று இந்திய முதலாளியத்துக்கு நன்கு தெரியும்; இது முதலாளியத்துக்கு தெரியும் என்பதும் மோஹன்தாஸ் ஸுக்குத் தெரியும். சும்மா, மக்களை ஏமாற்றுவதற்காக சொல்வது தானே என்பது நன்றாகத் தெரிந்திருந்ததால் தான் இந்திய முதலாளியத்தின் முன்னோடிகள் அதற்கு பணம் கொடுத்தனர், தொடர்ந்து பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர் !

    ReplyDelete