Sunday, May 16, 2021

காதலும் கம்யுனிசமும் ( தோழர் கவுரியம்மாவை முன்வைத்து)

 காதலும் கம்யுனிசமும் இரண்டும் மிகவும் நெருக்கமானவை.

ஒவ்வொரு இட துசாரிக்குள்ளும் ஒரு தீவிரக்காதல்

உள்ளம் காதலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு பெண்ணின் அரசியல் வாழ்வும் அவள் காதல் வாழ்வும்
இரண்டும் இணைந்து பயணிக்க முடிவதில்லை!
கவுரிக்கும் அதுதான் நடந்த த து.
கம்யுனிஸ்டு கட்சி CPI , CPM என்று இரண்டாகப் பிரிந்த நிலையில்
கவுரியம்மாவின் கணவர் டி.வி. தாமஸ் CPI கட்சியிலேயே
தங்கிவிட கவுரியம்மா மட்டும் CPM புதிய கட்சியில் இணைகிறார்.
அவர் அரசியல் பயணம் தொடர்கிறது.
அதில் தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள்,
ஏமாற்றங்கள்
நிரகாரிப்புகள்..
ஒரு சூழல் வருகிறது. கணவர் தாமஸ் புற்று நோயால்
பாதிக்கப்பட்டு பம்பாய் மருத்துவமனையில் உயிருக்காகப்
போராடிக் கொண்டிருக்கிறார்.
கவுரி … அவரைச் சந்திக்க தன் கட்சியின் அனுமதியைப் பெறுகிறார்.
அனுமதி பெற்று சந்திக்கிறார். இரு வாரங்கள் அவருடன் இருக்கிறார்.
தாமஸ் கண்ணீருடன் விடை கொடுக்க தன் கட்சிக்கு திரும்புகிறார்.
அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு!!!!
கவுரியின் படுக்கை அறையில் கவுரியும் தாமஸும்
இணைந்து வாழ்ந்த காலத்தில் எடுத்தப் புகைப்படங்களும்
அவர்களின் பொதுவுடமைக் கட்சி
முன் நின்று நட த்திய திருமண நிகழ்வும் புகைப்படங்களாக
அப்பெண்ணுடன் கடைசிவரை வாழ்ந்திருக்கின்றன.
அரசியல் இணைந்து வாழ தடையாக இருந்திருக்கிறது.
ஆனால் நினைவுகளில் வாழ்ந்துவிட யார் தடை செய்ய
முடியும்? எந்த இயக்கத்திற்கு அந்த சக்தி இருக்கிறது!.
கம்யினிசம் ஆண் பெண் உறவில் இருவரும் ஒரே குழுவில்
இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்கிறதா ?
ஆண் பெண் உறவு நிலையில் பொதுவுடமை அரசியல்
முன்வைக்கும் ஒழுங்குமுறைகள் என்ன?
இதை இன்னும் விரிவாக பேச வேண்டி இருக்கிறது.
அதற்கு கவுரியம்மாவின் வாழ்க்கை ஓர் உதாரணமாக
இருக்கிறது.
பொதுவுடமை அரசியலில் இருந்து விலகி தனிக்கட்சி
ஆரம்பித்த கவுரியம்மாவால் அக்கட்சியை முன் நிறுத்தி
பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. அவருடைய
சாதனைகள் என்று அவர் மறைவுக்குப் பின் பேசப்பட்டவை கூட
அவர் CPM அரசியலில் இருந்து செயல்பட்ட காலத்தின்
செயல்பாடுகளாகவே இருக்கின்றன.
இதையும் பெண்ணிய அரசியல் நோக்கில் உரையாட
வேண்டியதாக இருக்கிறது.
நேற்று 1990 களில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் பார்த்தேன்.
அதில் கவுரியம்மா, டி. கே தாமஸ், வர்க்கீஸின் காதல்
எல்லாமும்

கட்சியின் பின்புலத்துடன் இணைந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
மலையாள கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு ,
கவுரியம்மா குறித்து
1995 களில் எழுதிய கவிதை வரிகள்..
கவுரி அழமாட்டாள் கலங்கமாட்டாள்
அவள் பத்ரகாளி
அவள் கதைகளைக் கேட்டே வளர்ந்தோம்
எங்கள் பயங்களை நாங்கள் துறந்தோம்..
Karayatha Gouri, thalaratha Gouri
Kalikondu ninnal aval bhadrakaali
Ithukettu konde cherubalyam ellam
Pathivayi njangal bhayamaatti vannu
கவுரி தாமஸ் காதலும்
அவர்கள் இருவரும் பொதுவாழ்வில்
ஏற்றுக்கொண்ட அரசியல் சித்தாந்தமும்
கவுரி என்ற பெண்ணின் அகமும் புறமுமாக
முரண்பாடுகளுடன் பயணித்திருக்கிறது.

3 comments:

  1. கௌரி அம்மாவின் இழப்பு கேரளம் தாண்டியும் பேசப்படுவது தான் அவரது பெருமை! அவருக்கான சிறந்த அஞ்சலி செலுத்திய உங்கள் பதிவுக்கு எனது வணக்கம். உங்கள் தலைப்பு கேள்வியும் ஏற்கனவே கேட்கப்பட்டது தான். தாய் நாவலை படித்து முடித்த லெனின் கார்த்தி இடம் கேட்டது..! "மார்க்சியர்கள் இன் போராட்டத்தில் காதலுக்கு இடம் இல்லை என்றா நினைக்கிறீர்கள் கடைசிவரை கதாநாயகன் பவுலை ஏன் காதலிக்க நீங்கள் விடவில்லை?!"

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார். ஒரு புதினத்தை விட ரத்தமும் சதையுமாக நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த தோழர் கவுரி யின் சரித்திரம் இன்னும் நெருக்கமாக இருக்கிறது. வருகைக்கு நன்றி சார்

      Delete
  2. கார்க்கி எனும் குரல் பதிவை, கூகுள் கார்த்தி ஆக்கிவிட்டது!

    ReplyDelete