Monday, July 24, 2017

அத்வானியின் அரசியல் குற்றம்


modi-advani-kovind-1.jpg (660×440)
அத்வானி ஏன் பிஜேபியால் ஓரங்கட்டப்பட்டார்?
அவருக்கு திறமை இல்லையா?
அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையா?
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கலவரம் மட்டும்தான்
அத்வானியின் அரசியல் தகுதிக்கு களங்கம் கற்பித்ததா?
அத்வானிக்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை?
அத்வானி செய்த தவறுகள் என்ன?
1) அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை.

2) அத்வானி தன் குஜராத் ரதயாத்திரையில் இனம் கண்ட
     நரேந்திரமோதி என்ற தேரோட்டி கிருஷ்ண பரமாத்மா

3) தேரோட்டி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு வரக்கூடும்
    என்பதை யும்
     மகாபாரதக் கதையில் இம்மாதிரி திருப்பங்கள் ஏற்படலாம்
   என்பதையும்     அறியத்தவறிய அத்வானி.

4) குஜராத் கோத்ரா மதக்க்கலவரத்திற்குப் பின் ராஜதர்மப்படி
     அன்றைய பிரதமர் வாஜ்பாய் தண்டனை கொடுக்க முன்வந்ததையும்
     நரேந்திரமோதியை கட்சியை விட்டு விலக்கி வைக்க முன்வந்ததையும்
   ஆதரிக்காமல் மவுனம் சாதித்து மோதிக்கு ஆதரவாக இருந்த  அத்வானியின்
   ராஜதர்ம குற்றம்.

5) அரசியலுக்கு அவருடைய வாரிசுகள் வருவதற்கு விருப்பம்
 தெரிவித்தப்பின்    " நான் உயிருடம் இருக்கும் வரை அது நடக்காது, நான்  வாரிசு அரசியலுக்கு     எதிரானவன் " என்று அவர்களைத் தடை செய்தது.

6) இவை எல்லாவற்ரையும் விட அவர் செய்த மன்னிக்க முடியாத குற்றம்
     (பிஜேபி & சங்பரிவார் பார்வையில் )
     தான் பிறந்த மண்ணைப் பார்க்க பாகிஸ்தான் பயணித்தப்போது
    'முகமதுஅலி ஜின்னா - மதசார்பற்றவர் " என்று சொன்னது.


4 comments:

  1. இருக்லாம் ஆனால் இது மட்டுமல்ல!உள் குத்து வேறு!

    ReplyDelete
  2. கடைசி பாயிண்ட் ரொம்ப சரியானது ...மேலும் , அவர் சுதீந்திர குல்கர்னி என்ற ஒரு ஆளை , ஆலோசகராக , உதிவியாளராக வைத்து கொண்டது தான் ... அவர் செய்வதும் , சொல்வதும் , எழுதுவதையும் பார்த்தால் , அத்வானி காட்சியிலேயே இருக்க முடியாது ...என்ன ஓரமாய் குந்த வேண்டியது தான் . அப்படித்தானே இருக்கார்

    ReplyDelete
  3. 'முகமதுஅலி ஜின்னா - மதசார்பற்றவர் "

    மத அடிப்படையில் பாகிஸ்தான் என்கின்ற நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னா மதசார்பற்றவர் என்றால், இந்தியாவை பிளவுபடுத்தி மத அடிப்படையில் ஒரு நாட்டை அமைக்கும் அந்த முயற்சியை கடுமையாக எதிர்த்த அபுல் கலாம் ஆசாத்தை எப்படி அழைக்கலாம்?

    ReplyDelete
  4. நல்ல, வேறு கோணத்துப்பார்வை....

    ReplyDelete