காலநிர்ணய் என்ற தமிழ் நாட்காட்டி எம்மைப் போன்று
வெளிமாநிலத்தில் வசிக்கும் பலருக்கும் தமிழ் மாதத்தின் சிறப்பு நிகழ்வுகளையும் நம் பண்டிகைகளையும் அறிந்து
கொள்வதற்கு பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டி/காலண்டர்.
பெரிதாக அதைப் பார்த்து தான் எதையும் செய்கிறோம்
என்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட
ஆங்கில மாதத்தின் நாட்களுக்கு இணையான தமிழ்
மாத நாட்களை அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக
இருந்து வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி என்று என் காலநிர்ணய் அந்த நாள் 22/10/2017 ஞாயிறு கிழமை என்று காட்ட நானும் ஒப்புதல் கொடுத்துவிட்டேன். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்.
ஆனால் இப்போது ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை
அதாவது 23/10/2017 என்பதே சரியானது என்று அறிகிறேன்.
காரணம் தமிழ் காலநிர்ணய்
ஆனி மாதத்திற்கு 32 நாட்கள் என்று கணக்கிடாமல் 31 நாட்கள்
என்று ஒரு நாளைக் குறைத்து கணக்கிட்டிருப்பதால்
ஆனி மாதத்திற்குப் பின் வரும் தமிழ் மாதங்களின் நாட்களும்
ஆங்கில மாத நாள் கிழமைகளும் குளறுபடி ஆகின்றன.
காலநிர்ணய் என்ற நாட்காட்டி சற்றொப்ப 200,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் நாட்காட்டி. என்பதும் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும்நாட்காட்டி என்பதும்
இதன் தனிச்சிறப்பு.
தமிழ் மாத நாட்காட்டியின் ஆசிரியராக இருப்பவர் என் இனிய
நண்பர் மும்பை சரவணன் என்பதும் நினைவில் வருகிறது.
எப்படியோ ... சரவணா.. இந்த 30 நாள், 31 நாள், 32 நாள், 28 நாள் , 29 நாள் கணக்கெல்லாம் கொஞ்சம் பார்த்து போடுங்கப்பா..
எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
24 மணி நேரமும் நல்ல நேரமே..
என்று வாழும் என்னைப் போன்றவர்களுக்கு பரவாயில்லை.. !
ஆனால் நீங்கள் நாட்காட்டியில் காட்டும் இந்த
நாளும் பொழுதும் கிழமையும்
பார்த்து பார்த்து காரியமாற்றும் பொதுஜனங்களின்
நிலையை எண்ணிப் பாருங்கள்.

நேரம் இருப்பின் :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_21.html
நேரமிருப்பின் என்று என்ன பின்ன்ன்ன்.. உடனே வாசிச்சுட்டேன் நண்பா. சூப்பர். அதுவும் பாடலை ஓடவிட்டு வாசிக்கும் போது ரசனையுடன்..
ReplyDelete