லா.ச.ராவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே வாசித்த கதைகள் தான் என்றாலும்
எப்போது வாசித்தாலும் என்னை வசீகரிக்கும் மொழிநடை ..
லா.ச.ரா ஒரே கதையைத்தான் வெவ்வேறு விதமாக
சொல்லிக்கொண்டே இருக்கிறாரோ என்று தோன்றும். ஆனாலும் அலுப்புத்தட்டாது.
அந்த நதிக்கரை, நுரைப்பொங்கி ஓடும் ஆற்றுவெள்ளம், ,
குளத்தங்கரை , கிணற்றங்கரை, துணி துவைக்கும் கல், வீட்டு கொல்லைப்புறத்தில் வாழை மரம், மணக்கும் காஃபியும்
வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
லா.ச.ராவின் படைப்புலத்தை.
அந்த கதைக்களம் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையுடன்
பயணித்த தருணங்கள் உண்டு.
கதை மாந்தர்கள் மட்டுமின்றி இப்படியாக கதை நமக்குள்
இன்னொரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டே இருக்கும்.
இம்முறை இந்த மீள்வாசிப்பில் எனக்குத் திடீரென
இன்னொரு பெரிய்ய்ய்ய்ய கவலை வந்து விட்டது.
. லா.ச.ரா சிருஷ்டித்திருக்கும் படைப்புலகின் களம் பற்றி
எதுவுமே அறியாத எம் பிள்ளைகள் லா.ச.ராவை எப்படி அணுகுவார்கள்?
வெறும் கதையும் கதைமாந்தர்களின் உரையாடலும்
மட்டுமா லா.ச.ரா??
அதிலும் லா.ச.ரா அடிக்கடி பட்டுக்குஞ்சம் பற்றிப் பேசுவார்,
மென்மைக்கும் பளபளப்புக்கும் பட்டுக்குஞ்சம் வந்துவிடும்
அவர் கதைகளில். பட்டுக்குஞ்சம்
சடையில் கட்டி ... ம்ம்ம்.. இதெல்லாம் எம் பொண்ணுக்கோ அவள் பொண்ணுக்கோ தெரியாதே..
லா.ச.ரா இம்முறை எனக்குள் இம்மாதிரி ஓர் இனம்புரியாத
கவலையின் அலைகளை எழுப்பிவிட்டார்.
மழைக்காலத்தின் அலைகள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக
தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன.
என்னை மன்னித்துவிடுங்கள் லா.ச.ரா.

நியாயமான கவலை தான்...
ReplyDelete