இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குஜராத் குமாரா..
இதற்குத்தானே... ஆஹா..
தூய்மை இந்தியா திட்டத்தின் அடையாளமாக இந்திய தேசப்பிதா
மகாத்மா காந்தியை பிஜேபி அரசு தூசி தட்டி கழுவி ஏற்றிய போதே
தெரியும்.. இப்படி எல்லாம் காந்தியை அவர்கள் கொண்டுவந்து நிறுத்துவார்கள் என்பது!
கேட்டால் காந்தி தானே சொன்னார்..
"இறைத்தன்மைக்கு அடுத்தது தூய்மைநிலை " 'cleanliness is next to godliness'
விளைவு... ..???
குப்பைத் தொட்டி, குப்பை லாரி, கழிவறை,
அரசின் கட்டணக் கழிவறை...
இத்தியாதி இடங்களில் எல்லாம் மகாத்மா காந்தியின்
கண்ணாடியும் மொட்டைத்தலையும்
கைத்தடியும்.. ராட்டையும்..
(சினிமா தியேட்டரில் ஆண்- பெண் கழிவறை அடையாளத்திற்கு கவுண்டமணி, மற்றும் அவர் மனைவியின் போட்டோவைப் போட்டு அடிவாங்கும் செந்தில் நகைச்சுவை காட்சியை கொஞ்சம் ப்ஃளாஸ்பேக் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்)
இதைக் கண்டு அரசியல் கட்சிகளோ காங்கிரசோ கண்டணம் தெரிவிக்கவில்லை.
The judgment comes following a public interest litigation field by Badruddin Qureshi at Chhattisgarh High Court.
பொதுஜன நலம்விரும்பி தொடுத்த வழக்கில் சத்தீஸ்கர் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
இம்மாதிரியான இடங்களில் காந்தியின் அடையாளங்கள்
தவிர்க்கப்பட வேண்டும் என்று.
தீர்ப்பு இன்னும் நடைமுறைக்கு வந்துவிட்டதா தெரியவில்லை. மாநகராட்சியும் மாநில அரசும் எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குஜராத் குமாரா..
கட்சிகள் தனக்கு சாதகமெனில் குரல் கொடுக்கும்
ReplyDelete