இந்தியாவில் எனக்கும் ஒரு ஒட்டு.
சாலை ஓரத்தில்வ் வாழும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை
இத்தியாதி எந்த அடையாள அட்டையும் இல்லாதவனுக்கும் ஒரு
ஓட்டு. அம்பானிக்கும் ஒரு ஓட்டு.
அதாகப்பட்டது ஒவ்வொரு குடிமகனுக்கு இருக்கும் பாராளுமன்ற
அதிகாரம் ஒன்றுதான். ஒரே ஒரு ஓட்டு.
அப்போ... நானும் அம்பானியும் சம் உரிமை உள்ளவர்களா?
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது எபதை ஒத்துக் கொள்கிறோம்.
அப்போது, 1947ல் 200 கோடிக்கு அதிபர்களாக இருந்த இந்தியாவின்
டாப் 10 முதலாளிகளின் இன்றைய சொத்து மதிப்பு 168,000 கோடி.
ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்கள் தொகை
50% மேலாக இருக்கிறது.
எல்லோரும் இருக்கும் அதிகாரம் ஒரே ஒரு ஓட்டு தான்.
எங்கேயே கணக்கு இடிக்கிறதே. !
உலகம் முழுவதும் இருக்கும் ஆட்சி அதிகாரத்திற்கு
எந்தப் பெயரும் இருக்கலாம்.
மக்களாட்சி, ராணுவ ஆட்சி, பாசிச ஆட்சி, முடியாட்சி.
ஆனால் திரைமறைவில் உருவாகி இருக்கும் உண்மையான அரசு
முதலாளி வர்க்கம் தான். அனைத்து அரசுகளின் நீதி, நிர்வாகம்,
ராணுவம், போலீஸ் எல்லாம் முதலாளிகளுடன் தொடர்பே
இல்லாதது போல மக்கள் நம்பும் விதமாக ஒரு விலக்கமுடியாத
திரைப் போடப்பட்டிருக்கிறது.
1956ல் ஆவடியில் நடந்தக் காங்கிரசு மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசு
கட்சியின் இலட்சியம் சோசலிஷம் தான் என்று சொன்னார்கள். அன்றைய
பிரதமர் பண்டித் ஜவஹர்லால் நேருவும் அடிக்கடி சோசலிஷம் பேசினார்.
பேசினார், பேசினார். அவ்வளவுதான். சோசலிஷம் வரவில்லை.
காங்கிரசு பேசிய சோசலிஷத்தால் நாடு முன்னேறவில்லை
அதனால் இனி தனியார்மயமாதலை ஊக்குவிப்போம் என்று
சொல்லும் பிஜேபிக்கும் தெரியும் காங்கிரசு பேசிய சோசலிஷம்
என்னவென்று. முதலாமவர் சோசலிஷம் பேசினார். இரண்டாமவர்
பேசவில்லை. மற்றபடி இருவருமே ஒரே பொருளாதரக் கொள்கை
உடையவர்கள் தான். நம் ஜனநாயகத்திற்குப் பெயர் முதலாளித்துவ
ஜனநாயகம்.
இத்தருணத்தில் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
அதிமுக ஆரம்பித்த நேரம். அண்ணாயிசம் தான் தங்கள்
கட்சியின் கொள்கை என்று அறிவித்திருந்தார். லண்டன் பிபிசி
எம்ஜியாருடன் நேர்காணல் நடத்தியது.
அண்ணாயிசம் என்றால் என்ன? என்று பிபிசி நிருபர் கேட்டதற்கு
எம்ஜியார் சொன்னார் பதில்:
"கேபிடலிசம், சோசலிசம், கம்யூனிசம் மூன்றும் சேர்ந்ததுதான்
அண்ணாயிசம்"..(!!!!!! ?????!!!!!!)
முதாளித்துவ ஜனநாயகத்தில் ஊடகங்கள் - பத்திரிகை, சினிமா,
மெகாதொடர்கள், தொலைக்காட்சி, இணையதளம்...- எல்லாம்
சேர்ந்து மக்களின் மனங்களை முதலாளித்துவத்திற்கு சாதகமாக
பண்படுத்துகின்றன.
ஆண்டவன் உலகத்தில் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி- எம்ஜியார் பாட்டு.
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி - ரஜினிகாந்த் பாட்டு
எங்க முதலாளி நல்ல முதலாளி - விஜயகாந்த் பாட்டு.
உடம்பால் தொழிலாளியாக இருக்கும் நாம்
உள்ளத்தால் முதலாளிக்கு ஆதரவாக அனைத்து தரப்பிலிருந்தும்
செம்மையாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்..
நம்மை அறியாமலேயே...
"காகிதப்பூ மணக்காது காங்கிரஸ் சோசலிசம் இனிக்காது" என்றார் அண்ணா. ஒரு வாத்திற்கு நன்றாக இருக்கிறது. உண்மையில் அவரும் அவருக்குப்பின்னால் வந்த கலைஞர், எம்ஜியார் போன்றவர்களும் கூட சோசலிசத்தின் அர்த்தம் தெரியாமல் ஆண்டு போனார்கள். கொள்கையில் மாண்டு போனார்கள்
ReplyDeleteஉண்மைதான் சகோதரியாரே
ReplyDelete