2014 ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பாகிஸ்தானின் மலாலாவும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கிறார்கள். எல்லையில் இரண்டு நாடுகளிலும் தொடர்ந்து அத்துமீறல்களும் துப்பாக்கி சூடும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் "விட்டேனா பார்" என்று இரு நாட்டின் பிரதமர்களும் வீரவசனங்களைப் பரிமாறிக்கொண்டிருக்கும் சூழலில்
இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. என்ன மாதிரியான முரண் இது!
மலாலா:
2008ல் மலாலா வாழ்ந்தப் பகுதி தாலிபானின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. சற்றொப்ப 400 பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. அங்கிருந்து இடம் பெயர்ந்த அவர்கள் குடும்பம். தன் 11 வயதில் மலாலா தாலிபான்களை நோக்கி ஒருகேள்வியை வைக்கிறாள்.
"இந்த தாலிபான்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் எங்கள் கல்வி பெறும் உரிமையை பறிப்பார்கள்?How Dare the Taliban Take Away My Basic Right to Education?”
09 அக்டோபர் 2012ல் தான் மலாலாவைச் சுட்டார்கள் தாலிபான் ஆட்கள்.அவள் தலையில் குண்டு பாய்ந்தது. அந்த மரணத்தின் வாசலைக் கடந்து வந்த மலாலா 9 மாதங்களுக்குப் பின் ஐ.நாவில் பேசினாள். "அவர்கள் நினைத்தார்கள், துப்பாக்கியின் குண்டுகள் எங்களை ஊமையாக்கிவிடும் அமைதியாகிவிடுவோம் என்று. ஆனால், அவர்கள் தோற்றுப்போனார்கள்!
அந்த அமைதியிலிருந்து தான் ஆயிரக்கணக்கான குரல்கள் எழுந்தன. எங்கள் பலகீனம், பயம், கையறுநிலை முடிந்துப்போனது. வலிமை, எழுச்சி. வீரம் பிறந்தது.:
என்று முழங்கினார்.
சரியாக 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று அதே அக்டோபர் 9ல் அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிற்து, வாழ்த்துவோம் ,நாமும் நம் மலாலாவை, நம் நாடுகளின் எல்லைகளைக் கடந்து, சிநேகம் வளர்க்கும் புன்னகையுடன்.
கைலாஷ் சத்யார்த்தி
-------------------------------
குழந்தைத் தொழிலாளர்கள் என்பது சாதாரண பிரச்சினை அல்ல, பொருளாதாரப்
பிரச்சினை மட்டும் அல்ல, சட்டப் பிரச்சினையும் அல்ல. அது பல்வேறு விதமான
சமூகப் பிரச்சினைகளின் கலவையாகும்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இதுபோன்ற குற்றங்களை,
சமூக அவலத்தை தடுக்க முடியாமல் இருப்பது மிகவும் சோகமான விஷயம்.
பெரும்பாலான குழந்தைகள் கொத்தடிமைப் பெற்றோர்களுக்குப் பிறக்கின்றன.
பிறந்ததுமே அதுவும் கொத்தடிமை முறைக்குள் வந்து விடுகிறது. இது மிகக்
கொடுமையானது.
குழந்தைகள் கடத்தல் அதிகம் நடப்பது டெல்லி, மும்பை, கொல்கத்தா,
ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களில்தான். இதேபோல பிற பெருநகரங்களிலும்
உள்ளன
சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான விஷயமாகும். இதை முற்றாக அழிப்பதே எனது லட்சியம்.
இதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் பச்பன் பச்சாவ் அந்தோலன் - குழந்தைகளைக் காப்போம் என்ற அமைப்பு. இதுவரை 80,000 குழந்தைகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது இந்த அமைப்பு.
வாழ்த்துவோம் நம் கைலாஷ் சத்யார்த்தியை.
கொடுமைகளைக் கண்டும் காணாது போகிறார்கள் பலர்.
சிலர் மட்டும் அந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்கிறார்கள்.
அவர்களிலும் ஒரு சிலர் தான் ஓர் இயக்கமாகவே மாறுகிறார்கள்.
வாழ்த்துவோம்,
சிலர் மட்டும் அந்தக் கொடுமைகளைக் கண்டு மனம் கொதிக்கிறார்கள்.
அவர்களிலும் ஒரு சிலர் தான் ஓர் இயக்கமாகவே மாறுகிறார்கள்.
வாழ்த்துவோம்,
கொண்டாடுவோம் அவர்களை.
இருவரையும் வாழ்த்துவோம் போற்றுவோம்
ReplyDeleteஇருவரோடு சேர்ந்து இதைப் பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு தங்கச்சி இருந்தா,
ReplyDelete.........................................
யுத்த சூழ்நிலையில் பிறந்தவள் என்றதால் அவளால் பாடசலைக்கு சென்று படிக்க முடியவில்லை. அத்தோடு அந்த சமூகம் பெண்கள் கல்வி கற்பதை ஒரு போதும் ஏற்கவில்லை.இதனைப் பொறுக்க முடியாத என் அருமைத் தங்கை அவளது 9 வயதில் ஒரு வலைப் பூவைத் துவங்கி பெண்கள் கல்வி பெறுவதற்கு தடையாக இருந்த சடவாத அமைப்பு பற்றி சாடி பதிவுகளை இட்டால்(அந்த வலைப் பூ எவ்வளவு தேடியும் கண்ணில் படவில்லை).. இந்தப் பதிவுகளால் ஆத்திரம் கொண்ட அவர்கள் அவள் 14 வயதாகும் போது தங்ககையை கொலை செய்ய முயற்சித்தனர்.. நல்ல வேலை ஜரோப்பியர் கையில் சிக்கியதால் நோபல் பரிசையே பெற்றுக் கொண்டால்...
எழுத்தறிவு வீதம் 99 % இருக்குற நம்ம நாட்டுலயே 10 வயது பிள்ளைகள் தான் புலமைப் பரிசில் பரீட்சையே எழுதுவாங்க.. 50%க்கும் குறைந்த எழுத்தறிவு வீதம் கொண்ட அதுவும் தினமும் குண்டு வெடிக்கும், பெண்களை ஒடுக்கும் நாட்டில் வசித்து விரல் சூப்பும் வயதில் வலைப்பூ உருவாக்கி.......
போங்கடா நீங்களும் ஒங்க நோபலும்...
-Rafi Sharifdeen