Saturday, September 6, 2014

சாதி வளர்க்கிறதா நம் கல்வி?


சாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..
மகாகவி பாரதி இவ்வளவு பெரிய்ய்ய பொய்யை
ஒரு குழந்தைக்கு சொல்லியிருக்க கூடாது.
அப்படி அவர் சொன்ன பொய்யை வெறும்
மனப்பாடமாக வாசித்து தேர்வு தாள்களிலும்
மேடைகளிலும் வாந்தி எடுக்கும் போது
பாரதி பெருமையுடன் பேசிய தமிழின் 
 பெருமையும் தமிழனின் பெருமையும் 
நாற்றமடிக்கிறது !
தந்தை பெரியார் வாழ்ந்த மண்ணில், தொடர்ந்து
திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்
மண்ணில் நடந்த சம்பவம் இது என்பது
அவமானம்!.
இந்த நாட்டில் ஒரு தலித் மாணவன் கையில்
வாட்ச் அணிந்து செல்வது கூட குற்றம், அதற்குத்
தண்டனை தருவது  அவனுடன் படிக்கும் அதே
பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் தான் 
என்பதையும் கவனத்தில் கொண்டால் இந்த 
நாட்டின் கல்வி என்ன சாதித்திருக்கிறது என்பது
தெரியும்! 
இதற்காக வெட்கப்படவோ குறைந்தது தங்கள்
வேதனையை வெளியில் கொட்டவோ கூட
ஆசிரியர்கள் முன்வரவில்லை. 
இந்த ஆசிரியர்களின் தினம் ஆசிரியர்கள் 
தினமாகக் கொண்டாடப்பட்டால் என்ன?
"குரு உத்சவ் " என்று சொன்னாலும் தான்

என்ன? என்ன குடிமுழுகிப்போய்விடும்?


இந்தக் கொடுமையை எதிர்க்க,

தமிழ் உணர்வாளர்கள் முன்வரவில்லை.
எப்போதும் அதிர்ச்சி செய்திகளுக்காக
அலையும் ஊடகங்கள் கூட இதைக் கண்டு 
கொள்ளவில்லை. 

நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
என்று சொன்ன பெரியாரின் மொழியொடு
சேர்த்து இப்போது பெரியார் வாழ்ந்த தமிழ்
மண்ணிலிருந்து அரங்கேறி இருக்கிறது
" நம் கல்வி சாதிக் காப்பாற்றும் கல்வி"
இது ரொம்பவும் ஆபத்தானது, நம் முப்பத்து
முக்கோடி கடவுள்கள், அவர்தம் தேவியர்,
அவர்களின் மதம், மதக்குருமார்கள், பூசாரிகள்,
நம் புராண இதிகாசங்கள்... இவை அனைத்தும்
வளர்த்திருக்கும் சாதியை விடக் கொடியது
இந்த மாணவர்கள் நடுவில் வாழ்ந்து 
கொண்டிருக்கும் சாதியும் அதை 
வளர்த்திருக்கும் நம் கல்வியும்.

வெட்கப்படுங்கள் ஆசிரியர்களே..




TN dalit boy's seniors slash his wrist for wearing watch


wrist
Ramesh at the Sivakasi government hospital.
MADURAI: A 16-year-old dalit boy was allegedly attacked and his wrists slashed by his non-dalit seniors in Tamil Nadu's Virudhunagar district on Wednesday night because he wore a wrist watch to school.

Police said P Ramesh, a plus one student of the Government Boys Higher Secondary School in Thiruthangal village, was confronted by his seniors when he wore the watch to school on Monday. They forcibly removed it from his wrist and threw it away. The boy fought with his seniors over the issue, and tension prevailed on the school premises.

Two days later, on Wednesday night, the boy was walking near the Thiruthangal railway station when a gang of about 15 boys, including his seniors, waylaid him and slashed his wrists with knives. Ramesh managed to escape from them and received first aid at a private hospital. He was later admitted to the Sivakasi Government Hospital. 

2 comments:

  1. இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு வெட்கப்படத்தான் வேண்டும் சகோதரியாரே
    அதுவும் ஆசிரியர் என்ற முறையில் அதிக வேதனைப்படுகின்றேன்

    ReplyDelete
  2. வெட்கம்தான் வேதனைதான் இதை எதிர்த்துத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம் கவிஞரே
    எனது “தமிழ்ப்பாடங்களில் தமிழ்“http://valarumkavithai.blogspot.in/2011/02/blog-post_23.html எனும் கட்டுரையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி உமிழ்ந்த எச்சில் மிச்சம்தான் இப்போதும் நடக்கிறது.. பாடத்திட்டமே அப்படித்தானே தயாரிக்கப் படுகிறது! அதிர்ச்சியில் உறைந்து, எழுத்துகளை மறைக்கும் அளவிற்கு உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து எழுத்தாயுதத்தை ஏந்துங்கள்..

    ReplyDelete