Saturday, April 15, 2023

மயிர் வெறும் மயிரல்ல

 மயிர் வெறும் மயிரல்ல



மயிருக்கு வரலாறு உண்டு.
அதை வைத்துக்கொண்டு மயிர்ப்பிடுங்கும்
கலாச்சார மயிராண்டிகள் செய்த அட்டகாசங்கள்
கணக்கில்லாதவை.
இன்றைக்கு “மீசை என்பது வெறும் மயிரு”
என்று சொல்வதற்குள் மயிரு என்ன
பாடுபட்டிருக்கிறது என்பது
மயிரின் நீண்ட வரலாறு.
பாதாதி கேச, கேசாதி பாத வரையறைக்குள்
இதை அடக்கிவிட முடியாது.

அந்த வரலாற்றின் எச்சமாகத்தான்
பழனியும் திருப்பதியும் மொட்டைகளுடன்
இன்றும் காட்சி அளிக்கின்றன.
“உயிரைக்கொடுத்த சாமிக்கு
மயிரைக்கொடுப்பது”
ஆகச்சிறந்த காணிக்கையாக கருதப்பட்ட து
ஏன்?
இது வெறும் சடங்கல்ல,
அதிலும் பெண்ணுக்கு மயிர் என்பது
அவள் உயிர்
அவள் கற்புடே.
அது அவள் தலைவனுக்கு மட்டும்ம்ம்மேஏ..
சொந்தம்.
“கூந்தல் கறுப்பு ,
குங்குமம் சிவப்பு
கொடுத்தவள் முகமோ
தாமரைப்பூ..”
இப்படியாக கூந்தல் ரொம்ப முக்கியம்.
சங்ககாலம் முதல்
இன்றைய கணினி காலம் வரை.
அது இல்லைனா
அழகில்லை.
காதலும் இல்லை, உறவும் இல்லை
உறவில் ஈர்ப்பும் இல்லைனு
சொல்ற அளவுக்கு
மயிரு மனுஷனை ஆட்டிப்படைச்சிருக்கு.
அவன் செத்துப்போயிட்டா
அவனோட சாகணும்.
அதுமுடியாட்டி அவனுக்குப் பிடித்தமான
அவனுக்கு உரிமை உடைய
மயிரைக் கழியணு,ம்.
இந்த மொட்டை அடிச்சி முக்காடு போட்டு
பெண்ணை கைம்பெண் ஆக்கியதற்கு
ஆரியப்பண்பாடு காரணம் என்று
ஒரே போடா போட முடியாது.
இந்தக் கருமம், கண்ட்ராவி எல்லாம்
சாட்சாத் நம்மாளுக வச்சிக்கிட்டதுதான்.
இதனோட செல்வாக்கைப் பார்த்திட்டு
அவர்களும் தங்கள் பெண்களுக்கு
மொட்டையைக் கட்டாயமாக்கினார்கள்
என்பது இன்னொரு வரலாறு.
(ஆதாரம்: சங்க இலக்கிய மறுவாசிப்பு,
சமூக மானுடவியல் ஆய்வுகள் நூலில் 'சங்கப் பண்பாட்டில்
கூந்தல் களைதல்' கட்டுரை பக் 156)

யூதர் சமூகத்தில் திருமணமான பெண்களின்
கூந்தலை கணவனைத் தவிர அடுத்த ஆண்கள்
காண்பது அவளுக்கு இழுக்கு.
கூந்தல் மீது கொண்ட மோகம்
இப்போதும் குறையவில்லை.
அது வெவ்வேறு வடிவங்கள் எடுக்கிறது.
ஆணுக்கு மீசை இருந்தா கருப்பசாமி;
மீசை இல்லாட்டி கிருஷணசாமி
இரண்டு சாமியும் பெண்களின்
ரசனைக்கேற்றபடி ஓகே ஆகிவிடுவார்கள்.
ஆனா பாருங்க..
இன்னிக்கு வரைக்கு
பெண்ணுக்கும் கூந்தலுக்குமான
தொடர்பு அறுபடவில்லை.
இந்த மயிரில் என்னடே இருக்குனு
அம்புட்டு எளிதா
கடந்துப்போக முடியாமல்
சரவணா..
நாங்களும் தான் “டை” அடிக்கிறோம்.
ச்சே..

1 comment:

  1. ஒரு முடியிலிருந்தும் ஒருவரின் DNA சோதனைகள் செய்து அவர்களின் வேர்களையே அறியமுடியும். முடியை வைத்து சுற்றிபோடுவது., ஆபிச்சாரக் கர்ம்மங்கள் செய்து பயமுறுத்துவது என ஏகப்பட்ட சோலிகளும் உண்டல்லோ.. அவதார் படத்தில் அவர்கள் முடி வழியாகத்தான் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புக்கொள்கிறார்கள்

    Contemporary political view ல இருக்கும் உங்கள் எழுத்து அருமை. பெரியார் சொல்லியிருக்காரே முடி கத்தரித்து அழகை குறைத்து கொள்ளுங்கள் என்று. சூப்பர் மாதவி. ❤

    ReplyDelete