கம்பன் நின்ற இடமும் சிலம்பை வென்ற இடமும்
பேசப்படுவதில்லை.
இதுவும் இலக்கிய அரசியல் தான்.
இதுவரை பேசியதெல்லாம்
முழு உண்மையும் அல்ல.
முழு பொய்யும் அல்ல.
“கம்பரசம் “ வாசித்தவர்களில் , வாசித்து சிலாகித்தவர்களில் நானும் ஒருத்தி. இதெல்லாம் சொல்லித்தான் இதையும் சொல்லியாக வேண்டி இருக்கிறது.!!
வடமொழியில் எழுதப்பட்டதையும் வடமாந்தர்களையும் தமிழுக்கு கொண்டுவரும் போது கம்பனின் மொழி மட்டுமல்ல, உள்ளமும் தமிழாகவே இருந்திருக்கிறது. ஆனால் தமிழ் மாந்தர்களை தமிழ் நாட்டு களத்தை எழுதிய இளங்கோவடிகளின் உள்ளம் மட்டும்
ஏனோ தமிழரின் வாழ்வியலை மறந்து அவனை மேனிலையாக்க உத்தியாக பார்ப்பனிய சடங்குகளைக் கொண்டுவந்து புகுத்தி இருக்கிறது!
இளங்கோ காட்டும் கண்ணகி கோவலன் திருமணம், மதுரை எரியும்போது விதிவிலக்களிக்கப்படும் பார்ப்பனர்கள்.. செங்குட்டுவன் கதை, சிலம்பில் வரும் சென்ற பிறவிப்பயன் தொடரும் பக்கங்கள்.. இப்படியாக பல உண்டு.
கம்பனுக்கோ.. ராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்பு சந்திக்கும் புதியதொரு காட்சியை அவன் தமிழரின் களவியல் அத்தியாயத்திலிருந்து எடுத்துக் கொள்கிறான். அவன் உள்ளத்தில் தோய்ந்திருக்கும் தமிழர் வாழ்வியலின் பல்வேறு கருத்துகள் வடமொழி காப்பியத்தை தமிழுக்கு கொண்டுவரும்போதும் உயிர்ப்புடன் இருந்திருக்கின்றன..
என்ன செய்வது…?
அவரவருக்கு அவரவர் அரசியல்..
யாரும் முழு உண்மையை சொல்வதுமில்லை.
சொன்னதெல்லாம் முழு பொய்யுமல்ல..
இது கவனத்திற்குரிய ஓரிடம். இளங்கோ ஒற்றுமைக் காப்பியமாய்ப் படிக்கவேண்டும் எனும் முனைப்பில் பார்ப்பனியத்தைக் கேள்விகளற்று வரைகிறது. மணிமேகலையில் பார்ப்பனிய எதிர்ப்பை நேரடியாகவே காண முடியும்.
ReplyDeleteகம்பர் தன் தமிழுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே வடக்குப் பண்பாட்டைத் தெற்கின் நோக்கில் மாற்றிக் காட்டுகிறார்..
முழு உண்மையும் முழுப் பொய்யுமற்ற மெய்ம்மையின் தன்மை நம்மை நாம் விமர்சனப் படுத்திக்கொள்ள பேருதவி ஆகிறது..
ஒற்றுமைக் காப்பியமாய்ப் படைக்க வேண்டும்
Delete