Wednesday, May 10, 2017

புத்தம் சரணம் கச்சாமி






புத்தம்  சரணம் கச்சாமி

நினைச்சது நடக்கனுமா
இதோ இந்தக் கலர் கலர் ரிப்பனை வாங்கி
கோவில் வாசலில் கட்டுங்கோ…
புத்தம் சரணம் கச்சாமி



இறந்தவர் சொர்க்கலோகம் போக                                                             
எளிய வழி.. கட்டணத்திற்குட்பட்டது.
இறந்தவரின் சாம்பலை பணம் கட்டி
கோவிலில் வைத்திருக்க வேண்டும்.
சித்தார்த்தன் காவலில்
அவர்கள் பத்திரமாக புண்ணியம்
தேடிக்கொள்ளமுடியும்.
புத்தம் சரணம் கச்சாமி.

பெளத்தம் மதமல்ல, 
அது புத்தன் போதித்த வாழ்க்கை முறை.  ..
ஆனால்  நடைமுறையில் பெளத்தம்  அப்படி இல்லை.
ரோகிணி நதி நீர்ப்பங்கீடு காரணமாக எழுந்த
சச்சரவில் சாக்கிய குழுவின் கட்டளைக்குட்பட்டு
தன் நாட்டைவிட்டு வெளியேறியவனை
நரை திரை மூப்பு இறப்பு காரணமாக
 ஓரிரவில் தன் காதல் மனைவியிடம்
கூட சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனவனாக இன்றுவரை
எழுதியும் பேசியும் கற்பித்தும் வரும் இந்திய மண்ணில்
சித்தார்த்தா… நீ அசோக சக்கரத்தின் பல்லிடுக்குகளில்
குற்றுயிராய் மாட்டிக்கொண்டு …
சித்தார்த்தா… நீ பிறந்த பவுர்ணமி இரவில்
கடற்கரையில் தனித்து நிற்கிறேன்.
புத்தன் சிரிக்கிறான்.
ரகசியங்கள் உடைகின்றன.
எங்கள் அறிவியல் கூடத்திலிருந்து
அணுகுண்டுகள் வெடிக்கின்றன.
இப்போது நீ விஷ்ணுவின் அவதாரமாகிவிட்டதாக
அவர்கள் சொல்கிறார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி



4 comments:

  1. புத்தம் சரணம் கச்சாமி....

    நல்லதோர் கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. புத்தரைப் பற்றிய உங்கள் தகவல்களின் அடிப்படையில் இனிமேல்தான் ஆழமாகப் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆனால் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றல்லவா அவர் கூறினார்! பயமாகவும் இருக்கிறது...

    இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
  3. சொர்க்கத்துக்கு சுலபமாக செல்ல புத்த மதமும் வழி சொல்கிறதா!
    //ரோகிணி நதி நீர்ப்பங்கீடு காரணமாக எழுந்த சச்சரவில் சாக்கிய குழுவின் கட்டளைக்குட்பட்டு தன் நாட்டைவிட்டு வெளியேறியவனை...//
    இப்போது தான் இதை அறிகிறேன். தகவலுக்கு நன்றி.

    புத்த ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள நமது பிரதமர் இன்று ஸ்ரீலங்கா செல்கிறார்.
    http://currentaffairs.gktoday.in/prime-minister-attend-vesak-day-celebrations-sri-lanka-05201744566.html

    ReplyDelete
  4. எனக்குப் புதிய தகவல்
    கவிதை நன்று

    ReplyDelete