எனக்கு அவர்கள் ஓர் ஆடையை அணிவித்தார்கள்.
அவர்களும் அணிந்து கொண்டார்கள்.
அவர்கள் ஆடையில் வண்ண வண்ணப் பூக்கள்
பூக்களைச் சுற்றி பட்டாம் பூச்சிகள்.
ஏக்கத்துடன் கழிந்தது என் இரவுகள்.
ஓர் அமாவசை இரவில் அவர்கள் கொடுத்த ஆடைகளைத் துறந்து
அம்மன (ண)ம் ஆன பொழுதில் ...
பவுர்ணமி வெளிச்சத்தில் பட்டாம் பூச்சிகள்
கொலை செய்யப்பட்டன.
எரிக்கப்பட்டது என் ஆடைகளும்.
இப்போதெல்லாம்
ஆடைகளைக் கழட்டுவதோ மாற்றுவதோ
கனவில் கூட வருவதில்லை.
என் வாரிசுகளையும் அவர்கள் கொடுத்த
ஆடைகளுடனேயே பிரசவிக்க சம்மதமே.
No comments:
Post a Comment