Sunday, September 28, 2014

முன்னாள் முதல்வர் ஜெ.. தீர்ப்புக்குப் பின்









செல்வி ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஓரளவு
ஊடகக்காரர்கள் ஊகித்தது போலவே இருந்தது. தமிழ் நாட்டில் அதிமுக
தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து அனைத்து
தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருந்தன.

இந்த தீர்ப்பின் மூலம் , நாட்டில் அரசியல் வாழ்வில் குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்படுவார் என்பதை ஒரு பாடமாக
பிற அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தலைவர்களின் வாரிசுகளும் (தலைவர்களின் வாரிசுகள் என்பது நான் சேர்த்துக்
கொண்டது!) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சில நீதிமான்கள்
அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்திகள் எதுவும்
அதிர்ச்சி தரவில்லை. ஆனால் இந்த தீர்ப்புக்குப் பின் சொல்லாத
சேதியாக இன்னொரு செய்தியும் இருந்தது.
அது தான் பிஜேபி அரசியல்.
புதிய தலைமுறை நேரலையில் தொலைபேசி தொடர்பில் வந்த
தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் " பிஜேபி நீதித்துறையில்
தலையிடவில்லை என்பதற்கு இந்த தீர்ப்பு ஓர் உதாரணம்"
என்கிறார்.
இன்றைக்கு அதிமுக தொண்டர்கள் அழுகிறார்கள், நாளை
திமுக தொண்டர்கள் அழுவார்கள் என்கிறார் இன்னொரு
பிஜேபிக்காரர்
.60 கோடிக்கு 4 வருடம், 100 கோடி அபராதம் என்றால்
200 கோடிக்கு எத்தனை வருடம்? எவ்வளவு அபராதம?
திமுகாவுக்கும் இந்த தீர்ப்பு இனிப்பு வழங்கி கொண்டாடப்
பட வேண்டிய தீர்ப்ப அல்ல. இனி, அவர்களுக்கும்
தலைவலி தான்.

வழக்கை கொண்டுவந்த சுப்பிரமணிய சாமி
"திமுகவும் அதிமுகவும் .. இரண்டும் ஒன்றுதான். இதுதான்
தமிழ்நாட்டில் பிஜேபி வளர்வதற்கான சரியான நேரம்"என்கிறார்.
சுப்பிரமணிய சாமி சொன்னதையும் இந்த தீர்ப்பின் முடிவையும் தொடர்பு படுத்தாமல் இருக்க முடியவில்லை.
சுப்பிரமணிய சாமி இதுவரை எத்தனையோ வழக்குகளை
இந்திய தலைவர்கள் பலர் குறித்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். போபர்ஸ் பீரங்கி வழக்கு நினைவுக்கு வருகிறது.
அதிலெல்லாம் காட்டாத முனைப்பு இந்த வழக்கில் காட்டப்பட்டதும்
ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறது. ( நான் அதிமுக அனுதாபி
கூட கிடையாது.)
திராவிட அரசியலுக்கு மாற்று பிஜேபி அரசியல் அல்ல
என்பதை தமிழகம் எப்படி உணர்த்தப் போகிறது?

இடதுசாரிகளும் பெரியாரியக்கங்களும் இச்சூழலை எப்படி
கையாளப் போகிறார்கள்? தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடு
என்ன?

(My yesterday 27/9/14 facebook page)

No comments:

Post a Comment