சினிமா சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா?
அல்லது
சமூகம் சினிமாவைப் பிரதிபலிக்கிறதா?
என்ற தலைப்பில் .
சாலமன் பாப்பையா மற்றும் லியோனி பட்டிமன்ற
வகையறாவிலிருந்து சற்று மாறுபட்ட பட்டிமன்றம் என்பதால்
பாதியிலிருந்து பார்க்க ஆரம்பித்த நான் தொடர்ந்து பார்த்தேன்.
அப்போது ராதா ரவி அவர்கள் பேசினார். எம்ஜிஆரின் பாடல்கள்
எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின என்பதை
அனைவரும் பேசியது போல ராதா ரவி அவர்களும் எம்ஜிஆர்\பெருமையைப்
பேச ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்ன செய்தி:
எம்ஜி ஆரின் இறுதிச்சடங்கின் போது தமிழ்ப் பெண்கள் ஒன்றரை இலட்சம்
பேர் தங்கள் தாலியைக் கழட்டி வீசினார்கள் என்றார்., அதாவது தாலி \அறுத்துக் கொண்டார்கள் ,
இந்தச் செயல் எம் ஜி ஆர் அவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக
'இருக்கலாம்... ஆனால் தமிழ்ச்சமூகத்திற்கோ, தமிழ்ப் பெண்ணுக்கோ..?????
இது அவமானம். வெட்க கேடு.
எம் ஜி ஆர் அவர்கள் தன் சினிமாக்களில் கூட திருமணக் காட்சிகளில்
மாலை மாற்றிக்கொள்வதை மட்டுமே பெரும்பாலும் காட்டுவார்.
தாலி கட்டவதாகக் காட்ட மாட்டார்.
மேலும்,
இச்செய்தியை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் பேசி இருந்தால்
எவ்வளவு கிண்டல் அடித்து பேசி இருப்பார் என்பதையும் நினைக்காமல்
இருக்க முடியவில்லை.
அசிங்கம் என்று தெரியாது செய்த அடிமைத்தனம் ...?
ReplyDeleteஅசிங்கம் பிடித்த ரசனை,
ReplyDeleteஅடிமைப் படுத்திய ரசனை