இந்த நூற்றாண்டின் ஹிட்லர் இலங்கை அதிபர் ராஜபக்செ என்ற
குரல் பீகாரிலிருந்து மத்திய பிரதேசத்திலிருந்தும் எழுந்துள்ளது.
சோம் ப்ரகாஷ் சிங், பீகாரின் சட்டசபை உறுப்பினர்.
காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து பதவி விலகி
எந்த அரசியல் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பெரும்பான்மையான
ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.
இன்னொருவர் பரஸ் தாதா . Msc படித்த பட்டதாரி. அவரும் மத்திய பிரதேசத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.
இருவருடனும் 6 ஆம் தேதி மாலை 7 மணியளவில் கைபேசியில்
தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் மனித உரிமைக்காகவும்
மனித நேய அடிப்படையிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வதாகச்
சொன்னார்கள்.
பரஸ் தாதா இந்தியப் பிரதமருக்கும் குடியரசு தலைவருக்கும் கடிதங்கள்
எழுதப்போவதாகவும் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்து இக்கருத்துக்கு
ஆதரவு திரட்டப்போவதாகவும் சொன்னார்கள்.
இலங்கைப் போரில் இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும்
பல்வேறு உதவிகளைச் செய்திருப்பதை ஆதாரங்களுடன் அவர்களுக்கு
எடுத்துச் சொல்லி இந்நிலையில் இம்மாதிரியான கையெழுத்து இயக்கங்களும் கடிதங்களும் எவ்வகையில் உதவ முடியும் ? என்று
கேட்டபோது " இது ராஜநீதி. அரசு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்பதும்
அத்தவறுக்கு பொதுஜன ஆதரவு இல்லை என்பதைப் பதிவு செய்வது
ஜனநாயகக்கடமை என்றார்கள்.
ஐ.நாவின் அறிக்கையை, இனப்படுகொலையின் தீவிரத்தை அவர்கள்
எந்தளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடன்
பேசியதைக் கொண்டு என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
ஆனால் தமிழ் மண்ணைத் தாண்டி, தமிழர்களைத் தாண்டி வட இந்தியாவில் வாழும் ம்காஜனங்களின் கோபம், ராஜபக்சே ஒரு ஹிட்லர் என்று சொன்ன
அந்தக் கோபம் ...
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் எறும்புக்கு நீந்தக் கிடைத்திருக்கும் ஒரு துரும்பாக இருக்கிறது.
ரவுத்திரம் பழகு.
som prakash singh : cell No: 09471003295
paras dada : cell No: 09425195283
No comments:
Post a Comment