அன்புள்ள மாதவி,
அன்றைய கூட்டம் பற்றிய பதிவுக்கு நன்றி. அதில் சில தவறுகள் உள்ளன. நிறைய நேரம்
பேசியதைப் பதிவு செய்யும்போது இப்படி நேரும்தான். அம்மா தன் நகைகளை
வங்கிக்குக் கொண்டு போய் அதை வைத்துக் கடன் வாங்கி நான் சென்னை போக ஏற்பாடு
செய்ததன் காரணம் என் தந்தை வேறு ஊரில் வேலையில் இருந்ததால்தான்.மேலும் நான்
சென்னை செல்வதை அவர் ஒப்புக்கொள்ளாததால்தான் அம்மா அப்படிச் செய்ய நேரிட்டது.
இதை நான் கூறினேன். ஒரு வேளை அது சரியாகப் பதிவாகாமல் போயிருக்கலாம். மேலும்
தாம்பரம் செல்லும் மின்வண்டியில் என் செவியில் அம்மா கூறியது, “லக்ஷ்மியின்
கனவெல்லாம் நனவாகப் போகிறது” என்றுதான். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால்
இந்த நிகழ்ச்சியை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். அது வேறு மாதிரி
பதிவாகக் கூடாது என்பதால்தான்.
குமுதம் பத்திரிகை பற்றிய தகவல் பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வேலை செய்த ஒருவர்
வியாபாரப் பத்திரிகைகள் செய்துகொள்ள வேண்டிய சமரசங்கள் பற்றிப் பேசியபோது
கூறியது. உங்கள் பதிவில் அது தற்சமயம் நடக்கும் நிகழ்வை நான் கூறுவது போல்
அமைந்திருக்கிறது.
இந்தத் தவறுகளைத் திருத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
அன்றையக் கூட்டம் எனக்கும் திருப்தியை அளித்தது. அதற்காக நீங்களும் ராஜாவும்
எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி.
அன்புடன்,
அம்பை.
_____________
நன்றி அம்பை. தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
அன்புடன்,
புதியமாதவி
>>>
ReplyDeleteவியாபாரப் பத்திரிகைகள் செய்துகொள்ள வேண்டிய சமரசங்கள்
அது உண்மைதான்.பல லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு வார இதழ் வாசகர்களைத்திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்