Tuesday, April 1, 2025

தாராவியில் தலித் வரலாறு

 🔥தாராவியில் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பமானது"🔥




"என்னிடம் பம்பாய் தலைவர்கள் ஜின்னா அவர்களும் அம்பேத்கர் அவர்களும் பேச விரும்புவதாகவும் வந்தால் நமது இயக்கத்தை பற்றி மற்ற மாகாணங்களில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியும் என்றும் தந்தி கொடுத்தார்கள் அதன்படி நானும் மற்றும் ஐந்து தோழர்களும் புறப்பட்டோம்"

தந்தை பெரியார் ,12/01/1940. தன் பம்பாய் பயணம் குறித்து பேசியது.


07/01/1940 மாலை 6:00 மணிக்கு தாராவி காலே கில்லா மைதானத்தில் சுயேச்சை தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் பாபாசாகிப் அம்பேத்கர். அம்பேத்கர் பேச்சை சி என் அண்ணாதுரை என்ற இளைஞர் தமிழில் மொழி பெயர்த்தார். கூட்டத்திற்கு வந்திருந்த பிற மொழி தலைவர்களுக்காக தந்தை பெரியாரின் பேச்சை அண்ணா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.


அம்பேத்கர் ஒரு தேநீர் விருந்தும் ஒரு சாப்பாடு இருந்தும் நடத்தினார். அதற்கு பம்பாயில் உள்ள முக்கியமான தலைவர்களும் பத்திரிக்கைக்காரர்களும் வந்திருந்தார்கள். அதில் கலந்து கொண்டார். அவர்களிடம் மூன்று மணி நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.அவர்கள் பல புதிய விஷயங்களைப் பற்றி என்னிடம் பேசினார்கள்"

என்று இச்சந்தப்பின் முக்கியத்துவத்தை பெரியார் பதிவு செய்கிறார்.

08/01/1940ல் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது ! 


தாராவியில் தலித் மாதம் தலித் வரலாறு இப்படியாகத்தான் ஆரம்பித்தது.

அதன் தொடர்ச்சியாகவே நாங்களும் எங்கள் எழுத்துகளும் .


(புகைப்படத்தில் இடமிருந்து வலமாக, சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி பாலசுப்பிரமணியம் | ,ஜஸ்டிஸ் ஆசிரியர் டி ஏ வி நாதன், ஜின்னா, வழக்கறிஞர் கே எம் பாலசுப்பிரமணியம், பெரியார் & அம்பேத்கர்)


#DalitHistoryMonth

#தலித்வரலாற்றுமாதம்

#DharaviDalitHistory

2 comments:

  1. பெரியார் அம்பேத்கர் ஜின்னா ஆகிய தலைவர்களின் இந்தச் சந்திப்பு இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெறுகிறது. தலித் வரலாற்று மாதத்தில் முதன்மை பெறும் நிகழ்வாக இந்தப் பதிவு இருக்கும்.

    ReplyDelete