Friday, February 10, 2023

இலக்கிய நவீன தீண்டாமைகள்

 


இலக்கிய முத்திரையை யார் வைத்திருக்கிறார்கள்?

நவீன தீண்டாமைக்கு ஆயிரம் கரங்கள். ஆயிரம் நாக்குகள். ப்ளீஸ்.🙏🙏

யாரும் வந்து மீசையை முறுக்க வேண்டாம்.😎

நீ இலக்கியவாதியா?

உன் எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்த்து உண்டா ?

இதை எல்லாம் காலம் காலமாக

யார் தீர்மானிக்கிறார்கள்?

யாரிடம் இருக்கிறது இதற்கான "இலக்கிய முத்திரை?"

தெரியும். 

இதன்வெளி நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், 

இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்

ஏன் தயக்கம் காட்டுகிறோம்?!!!

எப்போதும் பார்த்தீர்களா மலையாளத்தில்,

அங்கேதான் இலக்கியம் பாலாறும் தேனாறும் கலந்துப் பாய்கிறது. தமிழ் நாட்டில் கூவம் தான் ஓடுகிறது என்று கூக்குரலிடுபவர்கள், அவர்களில் சிலர் மலையாளம் அறியும் என்றாலும் இன்னும் சிலருக்கு மலையாளமே தாய்மொழி என்றாலும் கூட அவர்கள் “டமிளில்தான்” எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அது ஏன்?

இப்படியான ஒரு கேள்விக்கு திருப்பத்தூர் இலக்கிய மேடையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளிப்படையாக பதில் சொன்னார். அதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.  அதாவது கேரளாவில் இலக்கியம் படைத்தவர்களும்  இடதுசாரி அரசியலும்  சேர்ந்து பயணித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ?!!

மனுஷ்க்கு நன்றி. 


அன்றைய நவீன இலக்கியவாதிகள் முதல் இன்றைய காலச்சுவடுவரை “திராவிட அரசியல் “மீது தீண்டாமை கொண்டவர்கள். 

ஆனால் திராவிட குஞ்சுகளுக்கு தாங்கள் எழுதுவதெல்லாம் “இலக்கியம்தானா” என்ற அடையாளச்சிக்கல் உண்டு. அதற்காக

அவர்கள் காலச்சுவடு முத்திரைக்காக வாசலில் காத்திருந்ததெல்லாம் கடந்து காலம் மட்டுமல்ல.

இந்த இடத்தில்தான் எனக்கு கி.ராவின் நேர்காணல் நினைவுக்கு வருகிறது. 

“திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்காலக்கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் 

துரதிர்ஷ்டம்தான். ஆனால் திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது.” சமஸ். (மாபெரும் தமிழ்க்கனவு பக்270)

கி.ரா இக்கேள்வியின் பின்னணியை ஒத்துக்கொள்கிறார்.

“நாங்க பண்ணின தப்பு இதை வெளியே பேசாம இருந்த து…அதுக்கு காரணம் இருந்துச்சு… சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் (கிராவும் கு அழகிரிசாமியும்)

இல்லை. சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை” (மாபெரும் தமிழ்க்கனவு . பக் 271) 

இப்போதும் இதெல்லாம் மாறிவிட்டதா என்ன? 

இல்லை.

நவீன தீண்டாமைக்கு ஆயிரம் கரங்கள்.

நவீன தீண்டாமை இலக்கியத்திற்கும் ஆயிரம் நாக்குகள்.

திராவிட அரசியல்  விருப்பம்போல விருதுகளை அள்ளிக்கொடுப்பதாலோ

அல்லது கனவு இல்லங்களை அவர்களுக்கு கட்டிக்கொடுப்பதலோ

இதை எல்லாம் மாற்றிவிட முடியாது. முடியவில்லை.

இதன் வெளிப்பாடுகளாக சிலர் எதையாவது சொல்லும்போது

ஆ ஓனு கத்துவதால் எதுவும் ஆகாது.

சரவணா..

இதில யாரும் மீசையை முறுக்க வேண்டாம்.


#புதியமாதவி_20230211_திராவிடஅரசியல்


#puthiyamaadhavi_dravidianpolitics_literature


No comments:

Post a Comment