Wednesday, June 27, 2018

நிசப்தம்.. என்ன குற்றமா?!!


“Nishabd “.. திரைப்படம். தமிழில் சொல்வதானால்நிசப்தம்
இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை.
ஆனால் சமூகத்தில் தொடரும் கதை.
குடும்பம், கலாச்சாரம், பண்பாடு இத்தியாதி அனைத்திற்கும்
இந்த நிசப்தம் ஒரு இடி போல .. 
இந்த  நிசப்தம் .. யாருக்கும் விருப்பமில்லை.
இந்த நிசப்தம்.. ஓவ்வொருவரையும் சுற்றி 
வெவ்வேறு காலக்கட்டங்களில்
எதோ ஒரு வகையில்.. 
நிசப்தம்.. 
நிசப்தம் ஏன் வாழ்க்கையில் நுழைகிறது?
நிசப்தத்தில் ஏன் குடும்பங்கள் சிதைகின்றன.?
நிசப்தத்தில் வாழ்ந்துவிட முடியுமா?
நிசப்தம் இருப்பதை ஏன் மொழிகளின் ஓசைகள்
பேசுவதே இல்லை!
நிசப்தத்திற்கு பலியானவர்கள் பெரும்பாலும்
யாராக இருக்கிறார்கள்?
சமூகம் நிசப்தத்தைக் கண்டு ஏன் இவ்வளவு தூரம்
அச்சப்பட்டு ஓடுகிறது?
நிசப்தம்.. என்ன அவ்வளவு கொடூரமானதா?
***
நிசப்தம் அழகானது தான்.
நிசப்தம் ஒரு மவுனத்தின் கவிதை.
நிசப்தம் .. தந்தையின் அரவணைப்பை
மீட்டுத்தரும் இன்னொரு பிறவி.
நிசப்தம் .. அறிவுக்களஞ்சியத்தின் தோழமை உறவு.
நிசப்தம் .. ஓர் இனிய காதல்.
நிசப்தம் ..

***

அமிதாபச்சனின் நடிப்பும் அமித் ராயின் காமிராவும் நிசப்தத்தை
தனித்துவமாக்கி இருக்கின்றன. ராம் கோபால் வர்மா டைரக்ஷனில்
குஷியின் கதை. 
நிசப்தம் குற்றமா? 
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களா?
தீர்ப்பு சொல்வதற்கு நாம் யார்?
நிசப்தம்.. தற்கொலை செய்து கொள்ளாமல்
நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கதையின் முடிவு..
நிசப்தத்தின் வெற்றி. 

(2007 ல் வெளியான படம். நான் இப்போ தானே பார்த்தேன்.!)

2 comments:

  1. ***குடும்பம், கலாச்சாரம், பண்பாடு இத்தியாதி***

    இதெல்லாம் ஒண்ணுமே இல்லையா?

    அப்போ அன்பு, காதல், காமம்னு அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதுதான் அர்த்தமான வாழ்க்கையா? யார் சொன்னது உங்களுக்கு???

    என்னதான் சொல்ல வர்ரீங்க?

    ராம் கோபால் வர்மா was going through some mid-life crisis and came up with this I think. His mind is still "screwed up" as you can see from his latest tweets!

    You have all the rights to love this movie in which a married man and father has an "devinely affair" with an young girl. You can certainly appreciate that. Besides that YOU DONT HAVE any right to criticize people those who are uncomfortable with such an "affair". I hope you understand your "limit"! Thanks

    Have you seen "Blame it on Rio"? Tell me how much you loved that too if you have seen it! :)

    ReplyDelete