Friday, March 13, 2015

இரோம் ஷர்மிளாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்



ஷ்ர்மிளா இன்று உனக்குப் பிறந்தநாள்.
14 மார்ச். இன்றுடன் உனக்கு வயது 42.
15 ஆண்டுகள் உண்ணாநோம்பிருக்கும் உன்னை
என்ன் சொல்லி வாழ்த்தட்டும்..?
இன்று போல என்றும் வாழ்க என்று உன்னை வாழ்த்தமுடியாது.
நீயோ ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் 1958
நீக்கப்படும் வரை உன் போராட்டத்தைக் கைவிடப்போவ்தில்லை
என்று உறுதியாக சொல்லிவிட்டாய்.
இந்த 15 ஆண்டுகள் உன்னை ஒருமுறைக்கூட உன் பெற்றதாய் வந்துப்
பார்க்கவில்லை என்பதை அறிந்தேன்.
உன் போராட்டதை தன் கண்ணீரால் இம்மியளவுக்கூட
இறுக்கம் தளர்த்திவிடக்கூடாது என்பதால்
ஒரு தாய் தன் மகளை இன்றுவரை நேரில் சந்திக்கவில்லை
என்றால்.. அந்த தாயின் உள்ளத்தை வணங்குகிறேன்.
நானும் ஒரு தாயல்லவா.
எனக்குத் தெரியும்.. ஷர்மிளா. அந்தத் தாயின் வலியும் வேதனையும்.

ஷர்மிளா.. இந்திய நாட்டின் காவல்துறை கண்காணிப்பில்
நீ உன் நாட்களை மருத்துவமனையில் கடத்திக்கொண்டிருக்கிறாய்.
இது உன் விருப்பமல்ல.. தெரியும் ஷர்மிளா..
இது நம் இந்திய இறையாண்மையின் விருப்பமாக இருக்கிறது.
அஹிம்சையில் வாங்கிய இந்திய சுதந்திரம்..
உன் அஹிம்சைவழி போராட்டத்தை மட்டும் அதிதீவிரவாதமாக
அடையாளம் காட்டுவது அதிசயமல்ல.
இது தான்  நிஜம்.
ஆனாலும் போராடுவோம்.
போராட்டங்கள் என்றுமே தோற்றதில்லை.

மனித உரிமையை நிலைநாட்டவும் மக்களின்
சுதந்திரத்தைக் காப்பதற்கும் ஜனநாயக வழியில் போராடும்
உன் போராட்டம் வெற்றி பெறும்.
மார்ட்டின் லூதர் கிங்க் போராட்ட்த்தின் வெற்றிதான்
இன்றைய அமெரிக்க அதிபர் ஓபாமா.
மனிதன் சுதந்திரமாகப் பிறந்தவன்.
சுதந்திரமாக வாழும் உரிமை அவனுக்குண்டு.
இந்த உன் பிறந்தநாளில்
என் அன்புத்தங்கையே..
என் வாழ்த்துகளும் கண்ணீரில் நனைந்த முத்தங்களும்.

-----

இரோம் ஷர்மிளாவின் பேட்டியிலிருந்து சில வரிகள்:

* எவ்வளவு நாட்கள் என் போராட்டம் தொடரும் என்று எனக்குத் தெரியாது.
ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. நான் உண்மைக்காக நிற்கிறேன்.
உண்மை கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.

* என் இலக்கை அடைவது கடினமானது தான். தெரியும்.
ஆனாலும் நான் நிலைகுலையாமல் பொறுமையாக காத்திருக்கிறேன்.
அந்த நாள் கண்டிப்பாக வரும் என்று.

* என் சிறைவாழ்க்கையில் பெரிய இழப்பு என்று பார்த்தால்
என்னால் யாரையும் சந்திக்க முடியவில்லை. அதற்கு அனுமதி
இல்லை. மருத்துவமனையில் நானொரு கைதியாக இருக்கிறேன்.

*எந்த ஒரு  போராட்டமும் கொள்கை ரீதியாக உயர்ந்ததாக
இருக்க வேண்டும் . அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாக
இருக்கவே கூடாது.

*என்னைப் பற்றி எவரும் சினிமா எடுப்பதை நான் விரும்பவில்லை.
என்னைப் போல ஒருவர் நடிப்பதையும் விரும்பவில்லை.
I DON'T WANT IT TO BE TRANSLATED INTO THE WORLDLY MEDIUM
OF ENTERTAINMENT. I DON'T WANT PEOPLE TO KEEP ME ON A
PEDESTAL. I DON'T WANT TO BE TREATED LIKE A GODDESS.


2 comments:

  1. கண்ணீரிலும் கடும் கோபம் வெளிப்படுமா புதியமாதவி?
    அந்தக் கோபத்தையும் இந்தக் கேடுகெட்ட சமூகத்தின் கேவலமான அரசுகளின் அசிங்கத்தையும் அந்தச் சகோதரியின் பிறந்த நாளில் நினைவுகூர்ந்த உன் கவி-உரைக்கு என் ரெட்சல்யூட்.

    ReplyDelete
  2. இரோம் சர்மிளாவின் உறுதி போற்றுதலுக்கு உரியது
    போற்றுவோம்
    போராட்டம் வெல்ல வாழ்த்துவோம்.
    தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது, இரோம் சர்மிளா பற்றிய எனது பதிவினைக் காண அழைக்கின்றேன்
    நன்றி சகோதரியாரே
    http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html

    ReplyDelete