Sunday, March 9, 2025

சங்க காலத்தில் சிம்பொனி



 சங்க காலத்தில் ஒரு சிம்பொனி...

அதன் பெயர்

' பல்லியம்'.

சிம்பொனி என்றால் என்னை மாதிரி ஆட்களுக்கு புரியற மாதிரி 

" சிம்ஃபொனி என்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்."

ஓகே.

இதே மாதிரி  பல இசைக்கருவிகள் சேர்ந்து இசையைக் தொழிலாக கொண்ட இயவர்கள் கூட அறிந்திராத பல இசைக்கருவிகளின் இசை ஒலிக்கின்ற மிகப் பழமையான ஊர் என்று புறநானூறு சொல்கிறது.


"இயவரும் அறியாப் பல்லியம் கறங்க

அன்னோ பெரும் பேதுற்றன்று இவ்வருங்கடி மூதூர்..."

புறம் 336.


பல்+இயம்= பல்லியம்

இயம் என்பது கருவிகளைக் குறிக்கும் சொல். பல கருவிகள் இணைந்து ஒலிக்கும் இசை 

" பல்லியம்"

ஆதாரம்: சங்க இலக்கியத்தில் இசை.-    இரா. கலைவாணி.