ஓ நண்பர்களே..
இந்தப் பாதையில் என் விழிகள்
இவை இனி என் விழிகள் அல்ல
விழிகளின் ஊடாக வியாபித்த ஆனந்தம்
என் இதயத்தை துளைக்கிறது.
சாலையை வெறித்தப்படி
இன்னும் எவ்வளவு காலம்
உடல் என்ற வீட்டில் காத்திருப்பேன்?
வாழ்க்கைப் பிணி தீர்த்தவன்
மாமருந்து அவனே மூலிகை
எல்லோரையும் தாங்கும் வல்லமைப்படைத்தவன்
அந்தக் கிரிதரனுக்குச் சொந்தமானவள்
இந்த மீரா
எல்லோரும் சொல்கிறார்கள்
அவளைப் "பிச்சி" என்று.
---
ராணா..
உன் விசித்திரமான விநோதமான உலகம்
எனக்கு விருப்பமில்லை.
அங்கே குப்பைகள் நிறைந்திருக்கிறது.
இருக்கும் எவரும் புனிதமானவராய் இல்லை,.
இனி, அணியப்போவதில்லை
எந்த நகைகளையும் நான்.
கண்ணுக்கு மையிடேன்
கார்கூந்தல் முடியேன்
மங்கலப் பெண்களின்
அலங்காரங்கள் களைந்தேன்.
மலைகளை ஏந்திய கிரிதர கோபலன்
என் தலைவன்.
இனி, தேவையில்லை
எனக்கு எந்த மணமகனும்.
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
sameera kannan
ReplyDelete3:12 PM (4 hours ago)
to me
Translate message
Turn off for: Tamil
மன்னிக்கவும் தோழி
மீராவின் கவிதையை தமிழில் கொண்டு வந்தபோது கவிதை தன்மை முற்றிலுமாக இழந்து விட்டது. அதன் பொருளும் தமிழுக்குள் வரவில்லை.. உங்களுக்கு அதை உரை நடை படுத்தியிருக்கலாம்... நீங்கள் நினைத்த அவள் காலத்து சமூக கட்டமைப்பின் உளவியலோ அரசியலோ எழுத்துக்குள் இல்லை.....
மீராவும் கபீரும் வல்லபாச்சாரியும் அருமையான உண்மையான கவிதை மொழி நன்றாக தெரிந்த "கவிகள்" ...
உடல்வெளி கடந்தப் பெண்கள் என்ற தலைப்பில் கடந்த வியாழக்கிழமை
ReplyDeleteகோரேகான் தமிழ்ச்சங்கம், நரசிம்மன் அறக்கட்டளை சொற்பொழிவுக்காக
விவேகானந்தர் கல்லூரியில் 6/2/14 அன்று பேசினேன். மீரா குறித்த கவிதைகள் எனக்கு ஆங்கிலத்தில் தான் வாசிக்க கிடைத்தன. நன்றி தோழி