Thursday, January 10, 2013

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கம்

 


     `                                                                                                                                                      06th Jan 2013 ம் தமிழ்ச் சங்கம், சயான், , மும்பையில் தமிழ்ச் சிந்தனையாளர் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த 26வது அமர்வின் சிறப்பு கருத்தரங்கமாகமும் பொதுமக்களின் கருத்துப் பரிமாறலுடன் நடத்திய கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டு அனைவரின் ஒப்புதலுடன்  இந்த அறிக்கை, 
இந்தியக் குடியரசு தலைவர், இந்தியப் பிரதமர், மராட்டிய மாநில கவர்னர்,
தமிழக முதல்வர் மற்றும் கவர்னர், மனித உரிமை ஆணையம், அம்னெஷ்டிக் ஆசிய அமைப்பு  மற்றும்
நீதிபதி வர்மா கமிட்டிக்கும் அனுப்பட்டுகிறது.

2006 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக 29.3% ஆக அதிகரிட்துள்ளன.
. பாலியல் தாக்குதல் மற்றும் கற்பழிப்பு வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
, 2010 இல் பதிவு 94.000 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது  ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  ஏழு பெண்கள் / குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறார்கள்.
ஏழைகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட  பிரிவுகளை சேர்ந்த. பழங்குடி மற்றும் தலித் பெண்கள் மீது குறிப்பாக பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் பதிவு செய்யப்படாமலேயே இருக்கின்றன.

தேசிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் பதிவு செய்திருக்கும்
புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தருவதாகவும் கவலை அளிப்பதாகவும்
இருக்கின்றன.

குறிப்பாக,

1 மக்களவை தேர்தல் 2009 ல், அரசியல் கட்சிகள்,  கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தங்கள் வாக்குமூலங்களை அதாவது affidavit  கொடுத்திருந்த 6  ஆறு வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுத்திருந்தார்கள்..


2. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்சிகள்  கற்பழிப்பு குற்றச்சாட்டைப் பதிவு செய்து வாக்குமூலம் கொடுத்திருந்த 27 பேருக்கு டிக்கெட் கொடுத்து
தேர்தல் களத்தில் நிறுத்தி இருந்தார்கள்.


3. பெண்ணை அவமதித்தல் .,  தாக்குதல், என்ற  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்கள் 260 பேர் பல்வேறு பிரிவுகளின் கீழ் பொறுப்பேற்றிருந்த பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து தேர்தலில்
போட்டியியிடும்  வேட்பாளர்கள் இருந்ததை நினைவுபடுத்துகிறோம்.

எனவே,
அனைத்து அரசியல் கட்சிகளும்், பாலியல் வன்முறை சம்பவங்களில் தண்டனைப் பெற்றவருக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கோ
தேர்தலில் வேட்பாளாராக நிறுத்துவது தடை செய்யப்படுவதுடன்
அதைச் சட்டமாகவும் கொண்டுவர வேண்டும்.


டிவி, திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் பெண்களை இழிவப்படுத்தும் வகையில் காட்டும் காட்சிகளைத் தணிக்கைக்கு உள்ளாக்குவதுடன்
ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தையும்
இக்கருத்தரங்கம் வற்புறுத்துகிறது.

பாலியல் குற்றத்தில் சர்வதேச சட்டவிதி  1998ல் ரோம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்  அதிரடியான மாற்றங்களைப் பெற்றது.. அதன் 7வது ஷரத்தின் படி

"பாலியல் வன்கொடுமை, பாலியல் அடிமைத்தனம், கட்டாய கர்ப்பம்,
கட்டாய கர்ப்பத்தடை அல்லது எந்த வகையிலும் பெண்கள் மீது
நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை சர்வதேச சட்டப்படி குற்றமாகும்.


பெண்களுக்கு எதிரான இம்மாதிரியான  குற்றச்சாட்டுகளை
அணுகுவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்\
ஒரு நிலையான கட்டுக்கோப்பான அணுகுமுறை இருக்க வேண்டும்.
குறிப்பாக சிலவற்றை இந்தக் கருத்தரங்கம் பரிந்துரை செய்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் தன் வழக்கைப் பதிவு செய்ய முன்வரும்போது
அவருடைய விருப்பத்திற்கேற்ப அவருடைய வீட்டிலோ அல்லது
வேறு பொருத்தமான இடத்திலோ போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கட்டாயம் அப்பகுதியைச் சார்ந்த பெண்கள்
அமைப்பின் சமூக சேவகி உடனிருத்தல் நல்லது.

பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவர் சார்பாக சாட்சியங்களோ
சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய உதயத்திற்கோ பின்னரோ
காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படும் நடைமுறை
வழக்கத்தை உடனடியாக நிறுத்துவத அவசியம்.


பாதிக்கப்பட்டவர் FIR கொடுத்து  24 மணி நேரத்திற்குள் காவல்துறை
நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும்.

இவ்வழக்குகளில் சட்ட விதிகளைத் தளர்த்தியோ குற்றவாளிக்குச் சாதகமாகவோ அல்லது விதிகளை மீறியோ செயல்படும் அதிகாரிகள்
கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.

வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் காலவரையறை
மிகவும் கண்டிப்புடன் செயல்படுத்துவது அவசியம்.
வாச்சாத்தி வழக்கில் நீதி கிடைக்க 19 வருடங்கள்
காத்திருந்ததை நினைவு படுத்துகிறோம்.
குறைந்தது 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் வழக்கு நீதிமனறத்தின்
முடிவுக்கு வரவேண்டும்.
அதாவது நீதி கிடைப்பதில் காலதாமதம் கூடாது.
தாமதமாகக் கிடைக்கும் நீதியும ஓர் அநீதி தான்.
் குற்றங்கள் அதிகரிப்புக்கஇதுவும் ு ஒரு காரணம்

மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளிக்கு ஜாமீன்
கொடுப்பதொ பெயிலில் வெளிவருவதோ எக்காரணத்தைக் கொண்டும்
இச்சட்டம் அனுமதிக்க கூடாது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நிலுவையில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் உடனடியாக விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும்.


பெண்குழந்தைகளுக்கு சுயபாதுகாப்பு பயிற்சி அளிப்பதை ஒவ்வொரு
வகுப்பிலும் கட்டாயமாக்க வேண்டும்.

பாலினம் சார்ந்த படிப்புகள் அனைத்து கல்வி பாடத்திட்டங்களிலும் கட்டாயப் பாடமாக்கப்படுவதுடன் பெண்ணை அணுகுவது பழகுவது குறித்த அடிப்படைக்\
கல்வியை ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில்
நம் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


ஓட்டு அரசியல் காரணமாக அரசியல் கட்சிகள் சட்டங்களைப் புறக்கணித்து
கட்டைப்பஞ்சாயத்து சட்டங்களை மவுனமாக கண்டும் காணாமல் இருக்கும்
போக்கும் சாதியமும் பெண்ணடிமைத்தனமும் ஊறிப்போன இந்திய சமூகத்தில்
பாலியல் குற்றவாளிகளுக்கு பெரும் கவசமாக இருக்கின்றன.
அதிகாரம், பதவி பணபலம் சாதியம் என்று எந்த சக்தியாலும் அசைக்கமுடியாத நீதியைப் பெண்களுக்கு வழங்குவதன் மூலம்
மக்களாட்சியும் மனித உரிமையும் ஒளிரும்.
நடு இரவிலும் பெண் ஒருத்தி இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணம்
செய்யும் உரிமையை அனுபவிக்கும் வரை நம் சுதந்திரம் ஒரு கேள்விக்குறி.
நம் சட்டம் ஒரு இருட்டறை.

மக்களுக்கான மக்கள் பாதுகாப்புக்கான மக்கள் நல அரசு வேண்டிய பயணத்தில் எங்கள் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வீர்கள்
என்று நம்புகிறோம்.



No comments:

Post a Comment