Monday, October 10, 2011

தாழ்த்தப்பட்ட மக்களை காந்தி அரிஜன் என்று அழைத்து சரிதானே?



தோழர் மதிமாறனுக்கு என் விளக்கங்கள்


அல்லாஜன் – இயேசுஜன் என்று அழைக்காமல் ‘ஹரிஜன்’ என்று ஏன் அழைத்தார் காந்தி?





காந்தி குறித்த மேற்கண்ட பதிவை அண்மையில் வாசித்தேன்.
தோழர் மதிமாறனின் பதில் ஒரு வகையில் சரியானது தான் என்றாலும்
அந்தப் பெயரின் பின்னால் இருக்கும் வரலாற்றையும் காந்தி திட்டமிட்டே
நன்கு அறிந்தே தலித்துகளை இழிவுப்படுத்தும் ஒரு அடையாளப்பெயரைக்
கொடுத்தார். சிவஜன், விஷ்ணுஜன் என்ற வாதங்களை எல்லாம் தாண்டி
அவர் உண்மையில் என்ன செய்தார்? என்பதை வெளிக்கொண்டுவருவது
கணம் மதிப்பிற்குரிய மகாத்மா அவர்களின் அடையாளத்தை எல்லோரும்
புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக்
காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா...
இரு இரு உன்னை உன் மக்களை என்ன செய்கிறேன் பார்!" என்ற
மகாத்மாவின் ஆணவம்... இந்தப் பெயரை வேண்டுமென்றே அவர்
தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்க வேண்டும்!
30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார்.
பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன் 'என்று
அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்"
என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற
பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.

எங்கிருந்து இந்தப் பெயரைக் காந்தி தேர்ந்தெடுத்தார்? அவர் அடிமனதில்
தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள்/ விஷ்ணுஜன் என்ற
எண்ணம் உண்டாகியது என்றால் உண்மையிலேயே அதற்காக காந்தியைப்
பாராட்டுவதில் அப்படி ஒன்றும் பெரிய குற்றமில்லை.
அவர் ஏன் சிவஜன், அல்லாஜன், ஏசுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை
என்பதைக்கூட மன்னித்துவிடலாம் தான்!
ஆனால் தன் சொந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்த இந்து மதத்துறவி
பார்ப்பன சமூகத்தைச் சார்ந்ட நர்ஸி மேத்தா தன் பாடலில் இச்சொல்லை
முதன்முதலில் கையாளுகிறார். இந்துக்கோவிலின் பிராமண பூசாரிக்கு
தேவதாசிகள் மூலமாகப் பிறந்தக் குழந்தைகளுக்கு இந்து சமூகம்
தந்தையின் அடையாளத்தைக் கொடுப்பதில்லை. அவர்களைத்தான்
நர்ஸி மேத்தா தன் பாடலில் "ஹரிஜன்" என்ற சொல்லால் அடையாளப்படுத்தினார்.
அந்தச் சொல்லைத்தான் தலித்துகளை அடையாளப்படுத்த காந்தி தேர்ந்த்தெடுத்துக்கொண்டார்.
இப்போது புரிகிறதா... அவர் தலித்துகளுக்கு மட்டும் இந்தப் பெயரைக் கொடுத்ததன்
காரணம்?!!!
இந்த வரலாறெல்லாம் காந்திக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.
அவரே சத்தியவாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்!
"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல்
தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும்
ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet
saint of gujarat, i felt it to be acceptable and started using it)

இந்துக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு காந்திக் கொடுத்த அடையாளம் இது.
இந்த வரலாற்றை அம்பேத்கரியக்க வாதிகள் வெளிச்சப்படுத்த வேண்டும்.
தலித்துகள் கடவுளின் குழந்தைகள் என்றால் தலித் அல்லாதவர்கள் எல்லாம்
சைத்தானின் குழந்தைகளா? என்று எதிர் கேள்வி கேட்க வேண்டும்.

Ref.:

DHANANJAY KEER, AMBEDKAR 'LIFE AND MISSION ' ps 301-302
P. MOHAN LARBEER ' AMBEDKAR ON RELIGION' p 130
Dr. MURUGU DORAI, "Ambethkar Kaappiyam",
Epic of Dr Babasaheb Ambedkar's Biography (in Tamil), Part 3. ps 497-501

5 comments:

  1. எளிய, சுருக்கமான,படித்தவுடனேயே சட்டென்று பற்றிக் கொள்கிற சிறப்பான அலசல். தப்ப முடியாது காந்தி.

    ReplyDelete
  2. Are the Dalits Children of (DEV)DAASI? http://www.bhagwanvalmiki.com/devdassi.htm


    Narsinh Mehta revelled in devotion to his hearts’ content along with sadhus, saints, and all those people who were Hari's subjects - Harijans - irrespective of their caste, class or sex http://en.wikipedia.org/wiki/Narsinh_Mehta

    He deemed all human beings as children of God,Harijan.
    101 Mystics of India By V K Subramanian http://goo.gl/2RVp4


    Gandhi: the man, his people, and the empire By Rajmohan Gandhi "Chapter 11 Negotiating Repression" http://goo.gl/Yxl2m


    "Harijan" Although Gandhi popularized the term, he was not the first person to use it. The dalit female Bhakti writer Gangasati used the term to refer to herself during the Bhakti movement, a period in India that gave greater status and voice to women while challenging the legitimacy of caste. This period started in the 4th century BC but is a living force in India today, flourishing particularly during India's middle ages. Gangasati lived around the 12th-14th century and wrote in the Gujurati language http://en.wikipedia.org/wiki/Harijan


    இணையத்தில் தேடிப்பார்த்து அலசவும் :) உண்மையின் உறைவிடம் காந்தி!!!

    ReplyDelete
  3. http://en.wikipedia.org/wiki/Narsinh_Mehta

    Narsinh Mehta (Gujarati:નરસિંહ મહેતા)also known as Narsi Mehta or Narsi Bhagat (1414? – 1481?) was a poet-saint of Gujarat , India, and a member of the Nagar Brahmins community, notable as a bhakta, an exponent of Hindu devotional religious poetry. He is especially revered in Gujarati literature , where he is acclaimed as its Adi Kavi (Sanskrit for "first among poets"). His bhajan "Vaishnav Jan To Tene Re Kahiye..." is Mahatma Gandhi's favorite and has become synonymous to him.



    http://en.wikipedia.org/wiki/Harijan

    Harijan (Hindustani: हरिजन (Devanagari), ہریجن (Nastaleeq); translation: "child of God") was a term used by Gandhi for Dalits. Gandhi said it was wrong to call people 'untouchable', and called them Harijans, which means children of God. It is still in wide use especially in Gandhi's home state of Gujarat.

    The term can also be attributed to Dalits of Pakistan called the haris, who are a group of mud-hut builders.

    Although Gandhi popularized the term, he was not the first person to use it. The dalit female Bhakti writer Gangasati used the term to refer to herself during the Bhakti movement, a period in India that gave greater status and voice to women while challenging the legitimacy of caste. This period started in the 4th century BC but is a living force in India today, flourishing particularly during India's middle ages. Gangasati lived around the 12th-14th century and wrote in the Gujurati language. [1]


    dear friend,

    thanks for ur view.

    before giving any article i am trying my level best to search all the
    available resource. hope u too read the details in the wikipedia.
    pls read again the Narsinh Mehta "His bhajan "Vaishnav Jan To Tene Re Kahiye..." is Mahatma Gandhi's favorite
    and has become synonymous to him."


    Moreover, Gangasati's exact period is not mentioned and they said 12th-14th century!
    Her poem "oh, the Meru mountain may be swayed but
    not the mind of Harijan"
    ref: Women Writing in India: 600 B.C. to the early twentieth century By Susie J. Tharu, Ke Lalita


    Gandhi is more influenced by Narsinh Mehta.


    anbudan,

    puthiyamaadhavi

    ReplyDelete
  4. இந்துக்கோவிலின் பிராமண பூசாரிக்கு
    தேவதாசிகள் மூலமாகப் பிறந்தக் குழந்தைகளுக்கு இந்து சமூகம்
    தந்தையின் அடையாளத்தைக் கொடுப்பதில்லை. அவர்களைத்தான்
    நர்ஸி மேத்தா தன் பாடலில் "ஹரிஜன்" என்ற சொல்லால் அடையாளப்படுத்தினார்

    ///

    உண்மையா ??? எந்தப்பாடலில் அப்படி சொல்லியுள்ளார் ???

    காந்திக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்வதற்கில்லை
    ///

    காந்தி ஏதோ உள்நோக்குடன் (தேவரடியார்களின் பிள்ளை )தான் ஹரிஜன் என்று அழைத்தார் என்று நிறுவ முயற்சிக்கும் முன் நர்ஸி மேத்தா உண்மையில் என்ன கூறியுள்ளார் என்று பார்க்க வேண்டாமா ???

    ஐந்தில் ஒரு இந்தியர் தலித்.அதிலும் பெரும்பான்மை இந்து மதத்தை சார்ந்தவர்கள்.
    568 Princely states http://en.wikipedia.org/wiki/Princely_state
    ஒட்டுமொத்த தலித்களின் பிரதிநிதியா அம்பேத்கார் ??? வெறும் 5 லட்சம் பேர்கள் தான் அவரை பின்பற்றி புத்தமதத்திற்கு மாறுகிறார்கள்.ஏன் அனைவரும் மாறவில்லை ???

    காந்தியும் அம்பேத்காரும் அரசியலுக்கு மட்டுமே பயன்படுவார்கள்.காந்தியின் கோவணம் அம்பேத்காரின் கோர்ட் என்று ஆராய்ச்சி செய்வதைவிடுத்து இந்திய தலித்களை ஒருங்கிணைத்து உரிமைகளை மீட்டெடுக்க என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.DOT

    தவறிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  5. நேரமிருந்தால் படிக்கவும்

    Narsinh Mehta's "You May Have Obtained Nama" http://on.fb.me/16twsvq
    We are ‘ Durjana’ http://on.fb.me/15HiGbL
    ஹரிஜன் - பெயரில் என்ன இருக்கிறது ? http://on.fb.me/14na59U
    தேவதாசி ஒழிப்பும் காந்தியும் http://on.fb.me/1cIm5JO
    கோயில்கள் விபச்சார விடுதிகள்! - காந்தி http://on.fb.me/1epggii

    நன்றி

    ReplyDelete