Thursday, June 16, 2011

சமச்சீர் கல்வியும் சண்டைக்கோழியும்




சமச்சீர் கல்வியை தடை செய்வதும் அதற்கான காரணங்களாக
பாடத்திட்டத்தில் குற்றம் கண்டுபிடித்ததும்.. இப்படியாக
நித்தமும் ஓர் அறிக்கை யுத்தம்.. பாவப்பட்டவர்கள்
மாணவர்களும் பெற்றோர்களும் மட்டுமல்ல.. பள்ளிகூட
ஆசிரியர்களும் தான்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் தொடரும் என்று அறிவித்தாகிவிட்டது.
ஆறாம் வகுப்புக்குப் பின் பழைய பாடத்திட்டமாம்!
தலையைச் சுற்றுகிறது...! இந்தக் கேலிக்கூத்துக்கெல்லாம்
சொல்லப்படும் காரணங்களும் அரசியல் தலைவர்களின்
கோமாளித்தனங்களும்...!!

தினமலர் 13/6/2011ல் வெளியாகி இருக்கும் ஒரு செய்தி.

" ப்ளஸ் 1 ப்ளஸ் 2 பாடப்புத்தகங்களில் கடைசிப் பக்கத்தில்
செம்மொழி மாநாடு லோகோ அச்சிடப்பட்டுள்ளது. இப்புத்தகங்களில்
உள்ள லோகோவை மறைக்கும் வகையில் அதன் மீது ஸ்டிக்கர்
ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 வகையான அளவுகளில்
இரண்டு லட்சம் ஸ்டிக்கர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து
கோரப்பட்டிருந்தன. அதன்படி பச்சை நிறத்திலான ப்ளெயின் ஸ்டிக்கர்
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஸ்டிக்கர் வழங்கி
புத்தகங்கள் மீது ஒட்டிய பின்பே மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது."

செம்மொழி மாநாடு நிகழ்வில் பலருக்கும் கருத்து வேறுபாடு உண்டு.
செம்மொழி மாநாடு கலைஞரின் கவிதை.. "செம்மொழியான தமிழ்மொழியாம்..."
வெளிவந்தவுடனேயே பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இலக்கண குற்றத்தையும்
தமிழறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள்...
இதெல்லாம் இருக்கட்டும்.. ஆனால் முந்தைய திமுக ஆட்சியில் செம்மொழி
மாநாடு முத்திரையும் அதில் எழுதப்பட்ட 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்'
என்ற வாசகங்களும் மட்டும்தான் ஒவ்வொரு தமிழனும் பெருமைக்கொண்ட
விரும்பிய ஓர் அம்சம். அதை அரசுப் பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் திமுக கலைஞர் மீதான வெறுப்பை தமிழனின் பெருமிதமான
திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்வின் மூலம் சமச்சீர் கல்வியை எதிர்ப்பது ஏன் என்பதை
மட்டுமல்ல..
' நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் பார்..! '
என்ற தன் அதிகாரத்தின் உச்சத்தையும் காட்டி இருக்கிறார் தமிழக முதல்வர்.

குஷ்பு எதாவது உளறிக்கொட்டினால் கொதித்துப் போகும் என் தமிழ்
உணர்வாளர்கள் இதை எல்லாம் கண்டும் காணாமலும் இருக்க
கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.. "

6 comments:

  1. "ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
    பாடத்திட்டம் தொடரும் என்று அறிவித்தாகிவிட்டது.
    ஆறாம் வகுப்புக்குப் பின் பழைய பாடத்திட்டமாம்!"

    தவறு என் அன்புத்தோழி,
    "ஒன்றுமுதல் ஆறாம் வகுப்பு வரை" என்று யார் சொன்னது...?
    ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புவரை என்பதே சரி!
    2,3,4,5, மற்றும் 7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கு பழைய -கடந்த ஆண்டு - இருந்த பாடத்திட்டம் என்பதே சரி.
    பார்க்கலாம், அனைத்து வகுப்புகளுக்கும் கலைஞர் -தப்பும் தவறுமாக அறிவித்த - பாடத்திட்டம் வரட்டும்... வரலாற்றில் பிழை நேரலாம்... வரலாறே பிழை ஆகிவிடக்கூடாது என்பதே என்போன்றோர் கருத்து. எனது கட்டுரையைப் பார்க்கவும்... http://valarumkavithai.blogspot.com/
    அன்புடன்,
    தோழமையுள்ள,
    நா.முத்து நிலவன்

    ReplyDelete
  2. செய்தியிலிருக்கும் பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

    "தினமலர் செய்தியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டு
    முதல் சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுத்தது"
    என்று பதிவாகியுள்ளது. இந்தக் குழப்பத்தில் "ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புவரை"
    என்ற சொற்றொடரே குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புக்கு
    மட்டும் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்! செய்திகள் என்பது தெளிவாக இருக்க
    வேண்டும் என்பது முக்கியமல்லவா? இங்கிருக்கும் பேராசிரியர்கள் வரை
    ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை என்றுதான் புரிந்து வைத்துக் கொண்டு
    பேசிவருகிறார்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள்!
    இந்த அறிவிப்பும் திட்டமும் இன்னொரு முட்டாள்தனமானதாகவே இருப்பதாக
    நான் சொல்வது உங்களுக்கு சினமூட்டலாம்.
    அது எப்படி சார்.. முதல் வகுப்பில் புதுப் பாடத்திட்டம்.. அப்புறம் 2,3,4 ல் பழைய
    பாடத்திட்டம், அப்புறம் திடீர்னு 6ஆம் வகுப்பில் புதுத்திட்டம்..
    ஒன்றாம் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு வந்தவுடன் அதே மாணவன் பழைய பாடத்திட்டப்படி.. என்னசார் இதெல்லாம்..
    போகிற போக்கில் தேர்வுக்கு முதல் நாள் மாணவர்களுக்குப் பாடத்திட்டம் மாறிவிட்டது
    என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை!
    இப்படியே குழப்பம் செய்துக் கொண்டிருந்தால்.. அப்புறம் ஆரம்ப கல்வி திட்டமும்
    இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரிதான் என்றாகி... இருப்பதையும் இழந்துவிட்டு
    நாம் நிற்க வேண்டியது வந்துவிடலாம்.

    அன்புடன்,

    புதியமாதவி

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Hide details V.Ramasami V.Ramasamiv.ramasami@gmail.com

    Send email
    Find emailTo tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of V.Ramasami (v.ramasami@gmail.com)
    Sent: 17 June 2011 11:20AM
    To: tamil_ulagam@googlegroups.com


    :
    சமச்சீர் கல்வியால், மெட்ரிக் பள்ளிகளுக்கு எவ்விதப் பயனுமில்லை; பயன் பெறுவோர், தமிழ் வழி பயிலுவோரே. அவர்களை முன்னேற விடக்கூடாது என்பதே அம்மாவின் நோக்கம். தமிழர்களில், தாளம் போடுவோரே அதிகம்.

    புத்தகங்களை எறித்தார்களாம், வேதாரணியத்தில்! தமிழர்கள், அறிவில் சிறந்தோரா?

    ReplyDelete
  5. Sivam Amuthasivam Sivam Amuthasivamamutham2000@googlemail.com

    Send email
    Find emailTo tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of Sivam Amuthasivam (amutham2000@googlemail.com)
    Sent: 17 June 2011 00:38AM
    To: tamil_ulagam@googlegroups.com


    ஸ்டிக்கர் விடயத்தைப்பார்க்கும்போது, எனக்கு ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது.


    தீராத வியாதிகளையெல்லாம் தன்னகத்தே கொண்ட ஒருவர், வைத்தியர் ஒருவரை அணுகி,
    தமது வியாதிகள் அத்தனையும் ஒரே நாளில் குணமாக மருந்து தரும்படி பிடிவாதம்பிடித்தாராம்.


    இவருக்கு நல்ல பாடம் கற்பிக்கவிரும்பிய மருத்துவர், வெறுமனே நீரில் மஞ்சளைக்கரைத்துக்
    கொடுத்தாராம். ஆனால், அதைக்குடிக்கும்போது, குரங்கை நினைக்காமல் குடிக்கவேண்டும் என்றொரு பத்தியமும் சொல்லிவிட்டாராம்..
    தற்செயலாக , குரங்கு நினைவுக்கு வந்துவிட்டால், குடிக்கவே கூடாது. அப்படிக் குடித்துவிட்டால்,
    மேலும் நோய் அதிகரித்துவிடும் என்று வேறு எச்சரித்தும் விட்டாராம்.
    வந்தவர்,மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குப்போய், மருத்துவர் சொன்ன பத்தியத்தை ஞாபகப்படுத்திக்கொண்டு, மருந்தை எடுத்துக் குடிக்கப்போகும்போது,
    ” அடடா! குரங்கை நினைத்துவிட்டோமே! இப்போது குடிக்கக்கூடாது.” என்று வைத்துவிட்டாராம்.
    ஆனால், ஒவ்வோருதடவையும் அந்த மருந்தைக் கையிலெடுத்தாலே, அது குரங்கை நினைக்காமல் குடிக்கவேண்டியது என்று ஞாபகப்படுத்திக்கொள்வதால்,
    அவரால் கடைசிவரை அதைக்குடிக்கவே முடியவில்லையாம்.
    அதுபோலத்தான் உள்ளது இந்த ஸ்டிக்கர் பிரச்சினையும்.
    ஸ்டிக்கரைப்பார்க்கும்போதெல்லாம், இது ஏன் ஒட்டப்பட்டுள்ளது என்ற கேள்வியும் ,
    அதனுள் செம்மொழி லோகோ உள்ளது என்ற பதிலும் தவிர்க்கவே முடியாதது.
    பார்க்கப்போனால்,அந்த ஸ்டிக்கரே
    செம்மொழி லோகோவுக்கு நல்ல விளம்பரம்.


    மற்றபடி, வெறும் வியாபாரநோக்கத்துடன், தற்புகழ்ச்சி மலிந்த, ஒரு தமிழ்த்துரோகியை
    தமிழர் தலைவன் என்று தவறான தகவலை மாணவர்கள் மனதில் பதியவைக்கும் பாடத்திட்டம்,
    முடிந்தவரை விரைவில் அகற்றப்படவேண்டியதே!
    அன்புடன்
    சிவம் அமுதசிவம்

    ReplyDelete
  6. sulaiman annan sulaiman annankt9023@gmail.com

    tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of k.m.sulaiman thambi (kt9023@gmail.com)
    Sent: 16 June 2011 20:58PM
    To: tamil_ulagam@googlegroups.com




    நீங்க வெளி மாநிலத்துல இருக்கறதால உங்களுக்கு உண்மை தெரியாம இருக்கலாம்;

    அது தப்பில்லே..!;-)




    ஆனாலும், தமிழுணர்வோட நீங்க இருக்கறது பெரிய விசயம்தான்!



    ஆனா,



    தமிழகத்துலயே வாழ்ந்துகிட்டு இருக்கற என்னையப் போல பிரகிருதிகள் சொல்றதையும் நீங்க நம்பணும்!..



    சமச்சீர் கல்வி விசயமா தி.மு.க. - அ.தி.மு.கவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும்..; நீதிமன்றத்துக்குப் போகிற அளவிற்கான ரகளைகளும்..; நடக்குதுன்னா.. அது நமது தமிழ் மக்களோட எதிர்கால நன்மைக்காகத்தான்..!



    எந்த ஒரு செயலையும் நடைமுறைப் படுத்தறதுக்கும் முன்னால,

    ஒரு விவாதம்கிறது அறிவுபூர்வமான விசயமில்லீங்களா..!?



    அப்படித்தான் இப்ப இரண்டு கழகங்களும் நடத்துறாங்க..!



    இந்த விவாதத்தையே சட்ட மன்றத்துல நடத்துனா, நிறைய நாற்காலிகள் புதுசா வாங்க வேண்டியிருக்கும்; அதனாலத்தான்..நீதிமன்றத்துக்கே போயிட்டாங்க!



    ஒரு விசயத்தை மட்டும் நீங்க தெரிஞ்சிக்கிடணும்..!



    நமது தமிழையும்-நமது தமிழ் மக்களையும் செழிப்புடன் வாழச் செய்வது மட்டும்தான்..



    நமது கலைஞர் அவர்களின் நோக்கமும்-நமது அம்மா அவர்களின் நோக்கமும்.!



    இவர்கள் இருவருமே நமது இனத்திற்கு தலைவராகவும்-தலைவியாகவும் கிடைத்தது நாம் செய்த போக்கியம்!

    ReplyDelete