Saturday, June 4, 2011

கலைஞர் வசனத்தில் குளறுபடி




திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய 88வது வயது
பிறந்தநாள் அன்று 3/6/2011 ல் தன் தொண்டர்களுக்குச் சொன்னது:

" சமுதாய எழுச்சிக்காகவும் அரசியல் மறுமலர்ச்சிக்காகவும் தங்களை
ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள்,
'கூடா நட்பு கேடாய் முடியும்!' என்ற பொன்மொழியை மறந்துவிடாமல்
பயணம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் " என்றார்.

எல்லாம் சரிதான். நீங்கள் மிகச் சிறந்த வசனகர்த்தா என்பதில்
என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் இதென்ன.. ?? இந்த வசனத்தை நீங்கள் சொல்றமாதிரி
இருப்பது கதையுடனும் காட்சியுடனும் பொருந்தவே இல்லையே.
உடன்பிறப்புகள் உங்கள் பிறந்தநாளுக்குச் சொன்னதாக
இருந்தால் தானே சரியாக இருக்கும்.

இப்படி எல்லாம் உங்களைப் போன்ற சிறந்த வசனகர்த்தாக்கள்
வசனத்தில் குளறுபடி செய்வது தான் எங்களுக்கு குழப்பமாக
இருக்கிறது. கதையும் புரியலை.. உங்கள் கதைப் பாத்திரமும்
புரியலை.. பாவம் உடன்பிறப்புகளும் கூட்டணி தோழர்களும்.

4 comments:

  1. Saravana Rajendran Saravana Rajendranrajesaravana@gmail.com

    tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of Saravana Rajendran (rajesaravana@gmail.com)
    Sent: 06 June 2011 14:16PM
    To: tamil_ulagam@googlegroups.com


    If you don't want messages from this sender, unsubscribe at their web site or click Junk.
    காங்கிரஸையும் ப ம கவையும் குறிப்பிட்டு இருக்கிறார், த்ருமாவிற்கு அட்வைசும் செய்திருக்கிறார்.
    நேற்று போட்டு உடைத்துவிட்டார், டெல்லி வெயிலில் வாடும் மலர் என்று உதிர்த்து இருக்கிறார். அப்ப ராசா என்ன சிம்லா ஸ்பெசல் சிறையிலா இருக்கிறார்

    ReplyDelete
  2. nagaelangovan nagaelangovannelango5@gmail.com

    tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of Elangovan N (nelango5@gmail.com)
    Sent: 04 June 2011 18:09PM
    To: tamil_ulagam@googlegroups.com


    :))


    1967ல் கூடா நட்பு - அண்ணாவுக்குப் பின் கூடிய/கூட்டிய நட்பு
    1976ல் கூடா நட்பு - 1980லேயே கூடிய/கூட்டிய நட்பு
    1991ல் கூடா நட்பு - 2004ல் கூடிய/கூட்டிய நட்பு
    2011ல் கூடா நட்பு - ?????????????


    இதற்கு ஊடாக, 1996/97ல் பா.ச.க.வுடன்கூடிய நட்பு - 2003/4 ல் கூடாநட்பாகியது :)


    இவ்வளவும் தமிழர்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கவே!!!!

    ReplyDelete
  3. sulaiman annanTo tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of k.m.sulaiman thambi (kt9023@gmail.com)
    Sent: 05 June 2011 15:12PM
    To: tamil_ulagam@googlegroups.com




    குளறுபடி புதிய மாதிவிக்கும்; பழைய மாதவியை கதாபாத்திரமாக்கி சிலம்பு மடலெழுதிய இளங்கோவடிகளுக்கும்தான்!;-)



    ‘கூடா நட்பு வேண்டாமென’ என் தலைவரெழிதுயது மறைமுகமான அர்த்தமுள்ள வரிகள்..!



    யாரிடமும் சொல்லமாட்டேனென்று நீங்கள் இருவருமே சத்தியம் செய்தால்..

    ‘எவர்மீது-எதன்மீது சத்தியம் செய்தாலும் எனக்கு பிரச்சனையில்லை..’

    இங்கே சத்தியம்தான் முக்கியம்!;-)



    இந்த சத்தியம் சம்பந்தமா நீங்க எனக்கு ஒரு மடல் அனுப்ப, அதற்கு நான் ஒரு மடல் பதிலா அனுப்ப நேரம் நீண்டுப்போகும்; அதனால,



    நீங்க இரண்டு பேருமே எனக்கு சத்தியம் செய்து கொடுத்தா..நம்பி,



    அந்த மறைமுகமான அர்த்தத்தை சொல்கிறேன்.. ஆருகிட்டயும் சொல்லி என்னைய வேரறுத்துப் போடாதீங்க..!



    ‘ராசா நட்பு வேண்டாமென’ என்பதுதான் அதன் அர்த்தம்னு..



    மதுரை மீனாட்சியே சொல்லிப் போட்டாளுங்கோ..!;-)

    ReplyDelete
  4. Dr.Chandra Bose Add to contactsTo tamil_ulagam@googlegroups.com
    From: tamil_ulagam@googlegroups.com on behalf of Dr.Chandra Bose (drchandrabose@gmail.com)
    Sent: 05 June 2011 19:05PM
    To: tamil_ulagam@googlegroups.com


    யார் அந்த மதுரை மீனாட்சி???

    ReplyDelete