Saturday, March 29, 2025

கருவாச்சி தான் நம் அசல்

இவள் பொய்க்காரி அல்ல.

இவள்தான் நம் மண்ணின் நிஜக்காரி.

இவள்தான் அசல்.

மற்றதெல்லாம் நாம் புத்திக்கெட்டுப்போயி ஏமாந்து

இதுதான் அழகுனு பொய்யான அழகியலில் விழுந்து நம் அசல்களைத் தொலைத்தக் கதை.

கறுப்புதான் எனக்குப் பிடிச்சக்கலரு..னு ஒரு சினிமாப்பாடலில்

'நம்மூரு சூப்பர் ஸ்டாரு

ரஜினிகாந்தும் கருப்புதான்

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" 

என்ற வரிகள் பிரபலமானது.

அதேபாடலில் வரும் இன்னொரு வரி

"கண்ணு முழி கருப்புதான்

கற்பு சொல்லி தந்த அந்த

கண்ணகியும் கருப்புதான்"

என்ற வரி உச்சரிக்கப்படவே இல்லை?!!!!! ஏன்?

நம் பொதுஜன சமூக உளவியல் இது.

தோலின் நிறம் என்பது அந்த நாட்டின் தட்பவெட்பம் சார்ந்தது. எல்லோருக்கும் தெரியும் இது.ஆனால் பெண் மட்டும் இவர்களுக்கு கறுப்பாக இருக்கவே கூடாது!!

 கருப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு பாடல் ஒரு பெண் , ஆண் குறித்துப் பாடுவதாக வரும் பாடல்.

அதாவது ஆணின் கருப்பு நிறம் அழகு, கம்பீரம், வீரத்தின் அடையாளம், இத்தியாதி இத்தியாதி..!

இப்பாடல் வெளிவந்தப்போது 2009 ல் 'இந்தியக் கருவாடும் வெள்ளை பன்னிகளும்' என்றொரு கட்டுரை எழுதினேன்.

ஆனால் 'பொய்க்காரி '

அந்தோணிதாசன் பாடல்

' கருவாச்சி கருவாச்சி

கண்ணால எனப்பாரு

ஒருவாட்டி'

பாடல் முழுக்கவும் நம் மண்ணின் மணம் கமழும் கருவாச்சி...

கருவாச்சி வாழ்க.

ட்கருவாச்சி பாடல் ஹிட் ஆகணும்..

பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கணும்.

ஆண்களின் கைபேசியில் 'Caller tune ' ஆகணும்.

அழகியல் / பெண்ணின் நிறம் குறித்த பொய்யான கட்டமைப்புகள் மாறணும்.

கருவாச்சிதான்  அசல்.

பாடல் எழுதி இசை அமைத்திருக்கும் அந்தோணிதாசுக்கு வாழ்த்துகள்.

பாடல் கேட்க:

https://youtu.be/0o71rF7gUSg


#பொய்க்காரி

#கருவாச்சிபாடல்

#அந்தோணிதாசன்

#Poikkaari

#Anthonydaasan

No comments:

Post a Comment