ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரராக இருந்தவர் இன்று வாடகை வீட்டில்.
அதிலும் அவருடைய ஒரே மகன் அவரை இந்த நிலைக்குத் தள்ளி
இருக்கிறார்.RAYMONDS ஆடைகள் இன்றும் அந்தஸ்தின்
அடையாளமாக இருக்கின்றன.
அந்த நிறுவனத்தை இந்தளவுக்கு உருவாக்கியவர்
விஜய்பட் சிங்கானியா (RAYMOND MD).தன் ஓய்வுபெறும் வயது
வந்தவுடன் தன் பெயரிலிருந்த சற்றொப்ப ரூ 1000 கோடி
பங்கு சந்தை மதிப்பை தன் ஒரே மகன் கெளதம் சிங்கானியாவுக்கு
மாற்றிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார்.
அது தான் அவர் செய்த ஒரே தவறாக முடிந்தது.
78 வயதான அவர் இன்று தெற்கு மும்பை பகுதியில்
அபார்ட்மெண்ட் வீட்டில் வாடகைக்கு குடி இருக்கிறார்.
ஒரு காரோ காரை ஓட்டுவதற்கு ஓட்டுநரோ கொடுக்கவும்
அவருடைய ஒரே வாரிசான மகன் மறுத்துவிட்டார்.
நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதால் தங்கள் குடும்பச் சொத்தாக
நிலைமை இந்தளவுக்குப் போய்விட்டதால் தங்கள் குடும்பச் சொத்தாக
இருந்த ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் தனக்கான உரிமையைக்
கேட்டு மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
வீட்டுக்கதை இப்படியாக தெருவுக்கு வந்ததால் ஊடகங்கள் மூலம்
இச்செய்தி பரவி இருக்கிறது. பெரிய வீட்டுக்கதைகளில்
இன்னும் மர்மங்கள் இருக்கலாம்!.
காசு பணம் துட்டு துட்டு..
காசு பணம் துட்டு துட்டு..
.பெரிசுகள் இப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும்
கொடுத்திடக்கூடாது, கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்..
எப்போதும் ரிமோட்டை தங்கள் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்
என்ற பெரிசுகள் தத்துவத்தை தமிழ்நாட்டு அரசியலில் இருந்தாவது
சிங்கானியா சீனியர் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்...
சிங்கானியா சீனியர் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்...
அனைததுப் பெற்றோர்களும் இன்றைய காலகட்டத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியான பாடம் இது
ReplyDeleteஎவ்வளவு பெரிய வேதனையான விடயம் நம்ப முடிகிறதா ?
ReplyDeleteஅவருடைய மகனுக்கு இதுவரை என்னதான் கற்றுக்கொடுத்தார் ?
அறியாமை...
ReplyDeleteபெரியவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கியுள்ளீர்கள்.
ReplyDeleteநம்ப முடியாத செய்தியாகத் தான் இருக்கிறது . எவ்வளவு பெரிய பிசினெஸ் செய்தவர் தன் பெயரில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் இருப்பாரா? ஆனால் உண்மைகள் கற்பனைகளை விட விசித்திரமானவை
ReplyDeleteஉங்கள் தளம் பற்றி இன்றைய தினமணி இளைஞர் மணியில் எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.
ReplyDelete