Friday, March 23, 2018

மாதொரு பாகன் விற்பனை சந்தை

Image result for mathorubhagan
நல்லா இருக்குனு எழுதலாம்
ஆனா ஒரு புத்தகம் நல்லாவே இல்ல
காசு கொடுத்தில்ல.. ஓசியிலே கொடுத்தா கூட
வாங்கி வாசிக்காதீங்கனு சொல்லலாமா..
என்ற கேள்வி மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
நல்லா இருப்பதை எழுதுவதை விட நல்லாவே இல்லாதது 

எப்படி இந்த இடத்திற்கு வருகிறது என்பதை இனிமேல் எல்லாம்
வெட்ட வெளிச்சமா எழுதித்தான் ஆகனும்.

சாகித்திய அகதெமி பரிசு பெற்ற மராட்டி நாவல் பூமி.
இந்த நாவலை தமிழில் வாசிக்கும் வாசகன் என்ன நினைப்பான்?
மராத்திய மொழியில் புதினங்கள் இவ்வளவு மோசமாகவா

 இருக்கிறது என்று நினைக்க மாட்டானா..!
 காரணம் சாகித்திய அகதெமி விருது வாங்க்கிய நாவலே
 இப்படினா.. மற்ற நாவல்கள் எப்படி இருக்கும் ??!
என்று இதை வைத்து அல்லவா மற்ற படைப்புகளையும்
அளவிடுவான்.

ஆனால் மராத்தி மொழியில் மிகச்சிறந்த நாவல்கள் 
எழுதப்பட்டிருக்கின்றன என்பது தானே உண்மை.
இதே மாதிரியான பிரச்சனை தான் இப்போது

 எழுத்தாளர் பெருமாள் முருகன் விஷயத்திலும். 
வெளிநாடுகளுக்கு மாதொரு பாகன் போகட்டும்.
ஆனால் மாதொரு பாகன் தமிழ் இலக்கிய உலகின்

 ஆகச்சிறந்த நாவல் என்ற அடையாளத்துடன் போனால்...!
மாதொரு பாகன் நாவலும் அது சார்ந்து எழுந்த அல்லது

 எழுப்பப்பட்ட பிரச்சனைகளும் மட்டுமே 
ஒரு படைப்பின் இலக்கிய அளவுகோலாக மாறிவிடக்கூடாது.
பதிப்பகத்தாரின் விற்பனை அரசியல் சந்தை

 சினிமாக் காரர்களை விட கேவலமாக இருக்கிறது.
(மாதொருபாகன் நாவல் குறித்து எழுந்த பிரச்சனையில்

 எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நின்றது 
என்பது வேறு. அதில் இப்போதும் மாற்றமில்லை ).

5 comments:

  1. எழுத்தாளரின் கருத்தில் வேறுபட்டாலும், எழுத்தாளரின் உரிமைக்கு துணைநிற்கும் உங்களுக்கு என் நன்றி.

    மாதொருபாகனின் பிரபல்யத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றையே தனியாக எழுதலாம் போல! நன்றி.

    ReplyDelete
  2. Bad publicity கிடைத்துவிட்டால் எதுவும் விற்பனையாகிவிடும் என்பதே இன்றைய நிலைமை. பெருமாள் முருகன் இதைவிடச் சிறந்த எழுத்துக்களையும் கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. Yes Sir, I agree with u. His novel earuveiyl and his non fiction kettavaarthi pesuvom ..good works. Thanks for your comments

      Delete
  3. Bad publicity கிடைத்துவிட்டால் எதுவும் விற்பனையாகிவிடும் என்பதே இன்றைய நிலைமை. பெருமாள் முருகன் இதைவிடச் சிறந்த எழுத்துக்களையும் கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை.

    ReplyDelete
  4. நெகடிவ் பப்ளிசிட்டி என்பது விற்பனையைப் பெருக்கும் உத்தி என்பது நூற்றுக்கு நூறு உண்மை. சில தமிழ்ப் பதிப்பாளர்கள் கடைப்பிடிக்கும் உத்தி என்பது சரிதான். மாதொரு பாகன் நாவல் பதிப்பகத்தாருக்கு நூல் விற்பனையை உயர்த்துவதற்கு மட்டும் உதவியதா? பெருமாள் முருகனுக்கும் அதிகமான பப்ளிசிட்டி கிடைத்துள்ளதுதானே?

    ReplyDelete