Friday, December 22, 2017

அயோத்திதாசரின் தலைகீழாக்க அரசியல்

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம் 


தோழர் பிரேம் அவர்களின் கட்டுரை தொகுப்பு
அண்மையில் வாசித்த புத்தகங்களில் முக்கியமானது.
இப்புத்தகத்தில் பிரேம் அவர்கள்
அயோத்திதாசரின் தலைகீழாக்க அரசியலை சமூக பண்பாட்டு 
தளத்திலும் தமிழ்ச்சாதி உளவியல் தளத்திலும்
 அடையாளம் காட்டுகிறார்.
கலை இலக்கிய தளத்தில் போற்றப்படும் புனிதங்களையும்
 தூய்மைகளையும் கட்டுடைத்து
மாற்று அரசியலுக்கான பாதையை,
ஒடுக்கப்பட்ட மக்களும் ஒடுக்கும் மக்களும் இணையும் புள்ளியாக
 நிகழ வேண்டிய அறப்போராட்டங்களை அயோத்திதாசரின்
எழுத்துகளின் ஊடாக கண்டடைகிறார்.
அயோத்திதாசரின் பெளத்தம் இந்திய அரசியலில்
அம்பேத்கரின் மதமாற்ற அரசியலுக்கு இழுத்துச் சென்ற 
விடுதலைக்கு முந்திய அரசியல் காரணிகளையும் 
தொட்டுச் செல்கிறார்.
வாசிப்பில் சில துளிகள்
*அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம் சாதி 
பேதமற்ற தமிழர்களை உருவாக்குவதற்கான திட்ட வரைவு. 
மோதல்கள், வன்முறைகள், வன்கொலைகள், வஞ்சம் தீர்க்கும் 
அணிதிரட்டல்கள் இன்றி தமிழர்களை நவீனப்படுத்தும்
 பெரும் திட்டம் இது. இது பின்னாளில் வளராமல் தேய்ந்து
தேங்கியது பெரும் இழப்பு தான். 
அதன் பயனே இன்றுள்ள சாதி காக்கும் தமிழர் அரசியல் பெருக்கம்.
இதற்கான பெரும் காரணமாக அமைந்தது பெரியார் இயக்க
 பகுத்தறிவு மரபு. இது நம் காலத்தின் தேவை என்றாலும் 
சமயம் அற்ற நிலைக்கு முன் நேர வேண்டிய பகுத்தறிவுடன்
 கூடிய சமய நெறி நிகழாமல் தடை பட்டது. 
அயோத்திதாசர் மிகவும் விழைந்த அந்த தன்ம அரசியல்,
 அறப்போராட்டம் விரிவடைந்து இருக்குமெனில்
தமிழ் அரசியல் இன்று பலவகைகளில்
 வேறுபட்டதாக இருந்திருக்கும். (பக் 18)

** அயோத்திதாசர், அம்பேத்கர் இருவரும் சமயம், மதம் அற்ற
 அறிவார்ந்த சமூகம் சாத்தியம் உண்டு என்றும் அது உருவாக 
வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டு தம்மத்தை இடைக்கால
 இணைப்பு நிலையாகவே முன்வைத்துள்ளனர். (பக் 139)

*** மதம் வெறும் நம்பிக்கையும் வழிபாடும் மட்டுமா, 
வழக்காறுகளும் நடத்தையியலும்
செறிந்த சிக்கலான கூட்டு மனநிலை. (பக் 140)

****பெரியாரிய மத மறுப்புச் சிந்தனைகளை 
ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே
 அதிகக் கோயில்களைக் கொண்ட மண்  என்ற பெருமையை
தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம்
 தக்க வைத்துக் கொள்ளும் சமூகம் இது. (பக் 147)

------ இக்கட்டுரை தொகுப்பு நூல்.
நூல் வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை 77.

2 comments:

  1. அருமையான தகவல் பதிவு.
    சாதி பேதமற்ற தமிழர்களை உருவாக்குவதற்கான திட்ட வரைவு.ஜாதி பேதமற்று,ஜாதிகள் வெறுப்பின்றி தமிழர்களை நவீன மயபடுத்தும் அருமையான திட்டம் நிறைவேறாதது தமிழர்களின் மாபெரும் இழப்பு.


    பெரியார் இயக்க பகுத்தறிவுவாதிகள் எனப்படுபவர்கள் ஜாதி வெறுப்பை அடிப்படையாக கொண்டவர்கள்.எப்போதுமே ஜாதி அடிப்படையிலேயே சிந்திப்பவர்கள்.அவர்களால் ஜாதி பேதமற்ற நவீன தமிழர்களை ஒரு போதுமே உருவாக்க முடியாது.
    தற்போது அவங்க உருவாக்கி வைத்துள்ள மாதிரியே ஜாதி என்று கொலைகள் செய்யும் ஒரு ஜாதி வெறி கொண்ட ஒரு சமுதாயத்தையே மேலும் அவர்கள் உருவாக்குவார்கள்.

    ReplyDelete
  2. தமிழ் இளங்கோ சார் இங்கே பதிவுக்கு பின்னோட்டமிட்டுள்ளார். ஆனால் அது பதிவில் வெளியாகவில்லை. தமிழ்மண தொழில்நுட்ப தவறா?

    ReplyDelete