புதியமாதவி நேர்காணல்:
கோடுகள் இதழ் 13.
கேள்விகள் : முரளிக்கண்ணன்
🔥🔥🔥
உங்களது கல்வி கற்ற காலம் வரையிலான வாழ்வைப்பற்றி சொல்ல முடியுமா? தங்களிடம் தாக்கங்களை ஏதேனும் ஏற்படுத்தியதா என்ற முறையில் கல்விசூழல், குடும்பச்சூழல், சமூகச்சூழல் சார்ந்து பதிலளிக்க முடியுமா?
மும்பை தமிழ்ச் சமூகத்தில் நான் நாலாவது தலைமுறை. தாய்வழி, தந்தைவழி இருவழியிலும் எங்கள் வாழ்விடம் மும்பை தாராவி. என் ஆரம்ப சுல்வி மும்பை மாநகராட்சி பள்ளிகளில், ஆனால் எப்போதாவது புத்தகத்தை எடுத்துப் படித்ததாக இன்றுவரை எனக்கு நினைவில் இல்லை. எப்போதும் வீட்டுக்கு அருகில் இருந்தக் கடற்கரையில் தான் விளையாடுவோம். அந்தக் கடற்கரை இப்போது காணாமல் போய்விட்டது. கடலை நிரப்பி சயான் பாந்திரா நெடுஞ் சாலை வந்துவிட்டது. எங்கள் தலைமுறை தமிழர்களிடம் அவர்களின் வாழ்விட சிக்கல் சார்ந்து சில முறைகள் எழுதப்படாத சட்டங்களைப் போல இருந்தன.
அதாவது ஆரம்ப கல்வி படிக்கும் வரை பிள்ளைகளை தங்களுடன் மும்பையில் வைத்திருப்பவர்கள் அதன்பின் தமிழ்நாட்டில் அவரவர் ஊர்களிலோ அல்லது விடுதியில் தங்க வைத்தோ மேற்கொண்டு படிக்க வைப்பார்கள். என் தந்தையார் வங்கியில் வேலைப் பார்த்தார். நாங்கள் அனைவரும் விடுதி வாழ்க்கையில் தான் எங்கள் கல்வியைத் தொடர்ந்தோம். அன்றைய தமிழ்க் குடும்பங்களின் பெற்றோர். குழந்தைகள் கல்வி சார்ந்த வாழ்க்கை இந்தக் கோட்டில் தான் பயணித்தது. இதற்கான காரணம் எங்கள் தாராவி வாழ்க்கையின் வாழ்விடப் பிரச்சனை. கணவனும் மனைவியும் கால் நீட்டிக்கூட படுக்க முடியாத இடத்தில் வாழ்ந்தவர்கள் தான் நாங்கள். இதில் பிள்ளை குட் டிகளை
வைத்துக் கொண்டு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? இப்படியாக ஐந்து அல்லது ஆறாம் வகுப்புக்கு ஊருக்குப் போய்விடுவோம். எங்கள் வீட்டில் என் படிப்பு விஷயத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அதாவது எனக்கு மூத்த என் இரு சகோதரிகளைப் போல நான் விடுதியில் இருக்கத் தயாராக இல்லை. ஒரே அழுது அட்டகாசம். ஒருவழியாக என்னை என் தாய்வழி பாட்டியின் துணையுடன் பத்தமடை வீட்டிலேயே தங்கவைத்து இராமசேசய்யர் பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் என்பொருட்டு என் அம்மா அப்பாவுக்கு அக்காலத்தில் இதுவே ஒரு பிரச்சனையாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியோ நான் ஜாலியாசு பாட்டி தூக்குப்போனி டப்பாவில் அடைத்து தரும் பழைய சோறு தயிர் எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்குப் போவேன், அந்த ஸ்கூல் அக்ரஹாரத்தில் இருந்தது. அக்ரஹாரத்து தெருக்களைக் கடந்து தான் ஸ்கூலுக்குப் போக வேண்டும். எங்கள் தெருவைப் போல இல்லாமல் ரொம்பவும் ஒழுங்கான வரிசையுடன் வாசலில் பெரிய பெரிய கோலத்துடன் அவர்களின் வீடுகள். அந்த வீட்டுப் பெண்கள் எப்போதும் தலையில் பூ வைத்துக் கொண்டு சிரித்த முகத்துடன். அந்த தெருக்களும் ரொம்பவும் அகலமானவை. அந்த சனங்களும், வாழ்விடமும் எனக்குப் புதியவை. படிப்பு, பரீட்சை இதைப்பற்றி எல்லாம் எதுவுமே கவலைப்படாமல் இருந்த நான் அத்தக் கூட்டத்தில் என்னை என் இருத்தலை உணர்த்த படிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். படிப்பு ஒன்றும் அப்படி கஷ்டமாகவும் இருக்கவில்லை. அந்தப் பள்ளியில் வாத்தியாராக இருந்தவர்கள் ஓரிருவர் தவிர மற்ற அனைவரும் பிராமணர்கள் தான். ஆனால் இவ்விடத்தில் நான் மறக்காமல் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர்கள் கற்பிக்கும் போது எந்த ஜாதி வேறுபாட்டையும் காட்டியதில்லை. எதையும் நான் விட்டுவைக்கவில்லை. சமஸ்கிருதம் வகுப்பு தனியாக நடத்தினார்கள். நான் அதிலும் சேர்ந்து சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தேன் என்றால் பாருங்களேன். என் அப்பா திரு. வள்ளிநாயகம் அவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அரசியலில் திமுக தலைவர் அறிஞர் அண்ணாவை மட்டுமே தன் தலைவராக ஏற்றுக்கொண்டவர். அப்பா ஊருக்கு வந்துவிட்டால் கட்சி தோழர்கள் கூட்டம் கூட்டமாக அப்பாவைப் பார்க்க வருவார்கள். வீடே விழாக்கோலம் கண்டுவிடும். வீட்டு முன்னால் வரிசையாக கார்கள் நிற்பதே பள்ளிக்கூடத்திலிருந்து வரும் போது பெருமையாக இருக்கும். வாழ்க்கையில் இந்த வயதில் தான் நான் வீட்டில் குவியும் சிற்றிதழ்கள் பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பிக்கிறேன். வீட்டில் பெரியார், அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன் எழுதிய எழுத்துகள், அன்றைய திராவிட இயக்கத்தை இன்றைக்கு இருப்பவர்களை வைத்துக் கொண்டு மதிப்பிடக் கூடாது. திராவிட இயக்கத்தினர் காலத்தில் 80-க்கும் அதிகமான சிற்றிதழ்கள் வெளிவந்தன. நிறைய மலிவு விலைப் புத்தகங்கள் அச்சில் வந்தன. ஒவ்வொரு முறையும் திமுக மாநாடுகளுக்கு என் அப்பா மும்பையிலிருந்து வருவார். வரும் போதெல்லாம் மாநாடுக்கு வருபவர் என்னையும் வந்து பார்த்துவிட்டுப் போவார். அப்போது குளிந்தப் புத்தகங்களை வாசித்தேன், ஆனால் பள்ளிகூடத்தில் என்னுடன் படித்த மாணவியரோ, அவர்கள் வீட்டிலோ இப்புத்தகங்களைப் பற்றி அறிந்தவர்களாக இல்லை. அவர்கள் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், ராணிஎன்று எனக்கு அறிமுகமில்லாத இதழ்களை வாசிப்பதை அறிந்தேன். ஆனால் இந்த இதழ்களை வாங்கிப் படிக்க என் பாட்டி காசு தர மாட்டார். இப்படி கொஞ்சம் விசித்திரமாகத் தான் என் வாசிப்புகள் ஆரம்பித்தன. பள்ளிக்கூடத்தில் தேசியகீதம் பாடுவதற்கு முன் சரஸ்வதி வணக்கம் பாடலைப் பாட வேண்டும். அந்த வயதில் இந்த இரு துருவ சிந்தனைகளுக்கு நடுவில் நான் சிக்கித் தவித்திருக்கிறேன். வாசிப்பு என்பது என்னிடம் வளர்ந்தது இக்காலக் கட்டத்தில் தான். இன்றுவரை பல நாட்கள் எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் கூட என்னால் வாசிக்காமல் இருக்க முடியாது. இதற்கான அடித்தளம் அன்றைய அந்த நாட்கள் தான். அதன்பின் இளங்கலை பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, முதுகலை மதுரை பல்கலைகழகத்திலும் விடுதி வாழ்க்கை எனக்கு ஆரம்பமானது.
🔥
தங்களுக்கு எப்போது முதன்முதலாக வேலை கிடைத்தது? திருமணம் எப்போது. எப்படி நடைபெற்றது? குடும்ப வாழ்க்கை தங்களிடம் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதா?
முதுகலையில் நான் கோல்ட் மெடலிஸ்ட் எனக்காக முனைவர்பட்ட ஆய்வுக்கு ஒரு சீட்டை ஒதுக்கி வைத்திருந்ததாக மதுரை பல்கலைகழகத்தில் சொன்னார்கள். ஆனால் வாழ்க்கையில் சிவ சம்பவங்கள். சில அனுபவங்கள் என்னைப் புரட்டிப் போட்டுவிட்டன. முதுகலை முடித்துவிட்டு மும்பை வந்திருந்த போது என் அப்பாவுக்கு இரண்டாவது ஹார்ட் அட்டாக் வீட்டின் நிலைமை எனக்கு அப்போது தான் தெரியவருகிறது. வங்கி வேலைகளுக்கு பரீட்சை எழுத ஆரம்பித்தேன். நான் தமிழ் இலக்கியம் படித்தவள் என்பதால். மும்பையில் பலர் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தமிழ்ப் படிச்சிட்டு பேங்கில வேலைபார்க்கப் போறாளாம்.. கிடைக்குமாக்கும்? இம்மாதிரி விமர்சனங்கள் என் காதுபடவே கேட்டேன். சரித்திரம் படித்து விட்டு வங்கியில் வேலை பார்க்கலாம். தாவரவியலும், விலங்கியலும் படித்துவிட்டு வங்கிக்கு வேலைக்குப் போக முடியும் என்றால் WHY NOT ME? வழக்கம்போல என் சுயம் விழித்துக் கொண்டது. முதல் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் அடுத்த SBI தேர்விலும, HSBC தேர்விலும் தேர்ச்சிப் பெற்றென். SBI அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வருவதற்கு ஒரு வருடமானது. அதற்குள் HSBC வங்கியில் சேர்ந்து விட்டேன். அதன்பின் அரசு வங்கிக்குப் போக விருப்பமில்லை. எவ்வளவுதான் திறமை காரணமாக பதவி உயர்வு பெற்றாலும் சாதி இடஒதுக்கீடு இல்லை என்றால் இவர்கள் எல்லாம் உயர்பதவிக்கு வரமுடியுமா என்று சொல்வது அரசு அலுவலகங்களில் இருக்கும் சூழல் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே எனக்கு அரசு வங்கிக்குப் போக விருப்பமில்லை. HSBC -யில் 22 ஆண்டுகள் வேலைப் பார்த்தேன். அதன்பின் விருப்ப ஓய்வு எடுத்து விட்டேன். வங்கி வேலையிலும் அச்சூழலிலும் நிறைய கற்றுக்கொண்டேன். என் திருமணம் பெற்றோர் பார்த்து நடத்தியது. 1982 மும்பையின் மழைக்கால ஜூன் மாதத்தில் எனக்கும், சங்கருக்கும் திருமணம் நடந்தது. எங்கள் திருமணம் சுயமரியாதை திருமணமாக நடந்தது. மாலை மாற்றிக் கொண்டோம். அவர் ONGC நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அவர் மும்பைக்குப் புதுசு. முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண்ணும், ஆணும் திருமண உறவில் இணையும் போது
எத்தனை விதமான பிரச்சனைகள் ஏற்படுமோ அதில் 90% பிரச்சனைகள் எங்கள் வாழ்விலும் ஏற்பட்டது. ஆனால் சங்கரும், நானும் அவரவருக்கான இடத்தைக் கொடுப்பதிலும், ஒருவரை ஒருவர் மதிப்பதிலும் வாழ்க்கை இருப்பதாக உணர்ந்தோம். என்னை விட சங்கர் கொஞ்சம் யதார்த்தமாக யோசிப்பவர். அதுவும் எனக்கு ஓரளவு உதவி இருக்கிறது. சங்கரை நான் திருமணம் செய்யும் போது எங்கள் சொத்து அவரிடமிருந்த ஒரு மர்பி ரேடியோவும், ஒரு சூட்கேசில் நாலு சட்டையும், ரெண்டு பேண்டும், ஒரு வாட்சும் தான். வாழ்க்கையை அடித்தளத்திலிருந்து ஆரம்பித்தோம். எதைப் பற்றியும் யோசிக்கவோ இளைப்பாறவோ நேரமில்லை. எப்படியும் ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பதே எல்லா நடுத்தரக் குடும்பத்து தம்பதியரைப் போல எங்களுக்கும் கனவாக இருந்தது. லோன் வசதி இருந்ததால் வீடு வாங்கும் சுனவும் நிறைவேறியது. இக்காலக் கட்டத்தில் நான் பவுண்டன் ஏரியாவில் இருக்கும் வங்கி மெயின் ஆபிஸில் வேலைப் பார்த்தேன். போய்வரும் சாலையின் இருப்பக்கமும் பழைய புத்தகங்களைக் கடைப்பரப்பி வைத்திருப்பார்கள். உலகில் எந்தப் புத்தகம் வெளி வந்திருந்தாலும் வந்து ஒரு வாரத்திற்குள் சாலையோர கடைகளில் மலிவு விலைக்கு வந்துவிடும். சில புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவேன். அப்படி வாங்கிய புத்தகத்தை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிட்டு (கொஞ்சம், வாங்கியதை விட குறைந்த விலைக்கு) அடுத்தப் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். இப்படியாக என் வாசிப்பு தொடர்ந்தது. இக்காலக்கட்டத்தில் நிறைய ஆங்கில புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். ராமச்சந்திர குஹா முதல் அருந்ததிராய் வரை எனக்கு நெருக்கமானார்கள்.
🔥
வாழ்க்கை துணையை புரிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் காதல் திருமணத்தை விட நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் குறைவாக இருக்கும் ஒரு சூழலில் ஏறக்குறைய பிறரால் நிச்சயிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது பற்றி என்ன நினைகிறீர்கள்? பெண்பார்க்கும் படலம் ஒருமாதிரி அபத்தமாக இருக்கிறதா இல்லையா?
இப்படியான ஒரு புரிதல் காதல் திருமணத்தைப் பற்றியும். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களைப் பற்றியும் இருப்பதை நானும் அறிவேன். மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்புரிதல் ரொம்பவும் சரியாகத்தான் தோன்றும். ஆனால் யதார்த்தம் என்பது இதுவல்ல. காதலிக்கும் போது அவன் காதலன், அவள் காதலி, அதிலிருக்கும் எதிர்ப்பார்ப்புகள் என்பதும், அவர்களே கணவன், மனைவியாகும் போது ஏற்படும் எதிர்ப்பார்ப்புகளும் வித்தியாசமானவை. இன்றைக்கு நிறைய காதல் திருமணங்களும் மணமுறிவுக்குப் போவது இதனால் தான். எந்த திருமணமாக இருந்தாலும் சரி, ஆணும் பெண்ணும் அவரவர்க்கான இடத்தைக் கொடுப்பதும், அதை ஏற்றுக்கொள்வதிலும் தான் வாழ்க்கையை செம்மையாக தொடர முடியும். பெண்பார்க்கும் படலம் " இது கொஞ்சம் அபத்தமானது தான். ஆனால் இன்று கணினி யுகத்தில் ஸ்கைப்பில் பார்த்து பேசி அதன்பின் ஒருவரைப் பற்றி ஒருவர் சமூக வலைத்தளங்களில் ஆய்வு செய்து N இப்படியாக பல கட்டங்களைத் தாண்டிய பிறகு தான் பெண்பார்க்கும் படலத்திற்கு தயாராகிறார்கள். அதுவும் மும்பை போன்ற பெருநகரத்தில் ஒரு காஃபி ஹவுசில் இரண்டு குடும்பமும், பையன், பெண்ணுடன்.
வந்து காஃபி குடித்துவிட்டு பெண்பார்க்கும் படலத்தை அபத்தமில்லாமல் செய்கிறார்கள்.
பொதுவாக திருமணம் என்ற ஒரு குடும்ப அமைப்பைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது மனிதனுக்கு அதிகப்படியான செயற்கையான சுமைகளை சுமக்கும்படி செய்கிறதா? ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தெணல் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரு அடிப்படையையே அது இல்லாமல் செய்கிறதா?
திருமணம் பெண்ணுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்தாகி விட்டது. ஆனாலும் திருமணங்கள் தொடர்கின்றன. ஆண், பெண் உறவு திருமணம் இல்லாமலும் தொடர முடியும் என்ற நிலை சமூகத்தால் ஏற்கப்பட்டாலோ அல்லது ஆண், பெண் உறவில் பிறக்கும் குழந்தைகளை ஒரு கம்யூனல் சிஸ்டத்தில் அரசாங்கமே வளர்க்கும் என்ற நிலை ஏற்பட்டாலோ இங்கே பலர் திருமணத்தை விலக்கி வைத்துவிடுவார்கள். சொத்து, வாரிசுரிமை இதெல்லாம் ஆண் மைய சமூகத்தில் திருமண உறவை விலக்க முடியாததாக ஆக்கி விட்டன.
🔥
மேலே உள்ள அடுத்தடுத்த இரு கேள்விகளையும் நான் என்ன அடிப்படையில் கேட்கிறேன் எனில் பிரச்சனைகள் வருகிறது என்பதால் கேட்கிறேன் என்பது ஒருபுறம் நமக்கு ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்பதை சாதகமாக பயன்படுத்தி இந்த சமூக நடைமுறை என்பது நம்மை - ஒருவரையொருவர் நிச்சயமாக புரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பது நடவாது என்ற ஒருவித இக்கட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பது ஒன்று. சமரசமனோபாவம் இந்த இக்கட்டை துல்லியமாக உணரவிடாமல் நம்மை தடுக்கிறது. இரண்டாவது. என் அனுபவத்தில் ஒவ்வொரு மனிதனும் அதிகாரம் மற்றும் அதிகாரம் சார் அதிகாரங்களின் மறைமுக நிர்பந்தத்திற்குள் இருந்து தான் இதை எட்டி தொட முடிகிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு திருமணம் சார்ந்த ஒரு உறுதியான எண்ணம் அதாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனில் உடல்ரீதியான, மனரீதியான, பொருளாதாரரீதியான என்ற இந்த மூன்றில் குறைந்தபட்ச அடிப்படை தகுதி நிச்சயமாக இருக்க வேண்டுமென அரசு சட்டமே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இதிலிருந்து தான் தோன்றுகிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் பல தந்திரமான கோர்த்து விடல்கள் நடந்தேறுவதை நான் அனுபவப்பூர்வமாக என்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமல்ல -உணர்ந்திருக்கிறேன். காதல் திருமணங்களில் தவறுகள் நடந்தேறுவதும் இதேவித சாத்தியங்களுக்குள்ளிருந்து வரும் இதேவிதமான ஒரு பிரச்சனை தான் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இதற்கு நேரடியான அர்த்தம் இதுதான். நான், யார் எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்பதை நானோ என் எதிர்கால வாழ்க்கை துணையோ முழுக்க முடிவு செய்ய முடியாது. இதைப்பற்றி தாங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை இப்படியும் பார்க்க வேண்டும். யார் வாழ்க்கை துணையாக வர வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் சுயமாக முடிவு செய்து கொள்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதன்பின்..? அவர்கள் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் சமூகத்தின் தலையீடு எதோ ஒரு வகையில் இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். மனிதன் என்றைக்கு கூட்டமாக வாழ ஆரம்பித்தானே அப்போதே இந்த சமரசங்கள் ஆரம்பித்துவிட்டன. எப்படி
கையாளுகிறோம் என்பதில் தான் ஆண் பெண் இணைந்து வாழும் வாழ்க்கை அமைகிறது.
🔥
தங்களது இன்றைய காலம் வரையில் எத்தனை வேலைகள் செய்திருப்பீர்கள்? பொதுவாக ஒரு வேலையோ, ஒரு தொழிலோ செய்து பிழைப்பதில் என்ன மாதிரியான ஒரு சிக்கல் இருந்து செயல்படுகிறது என நினைக்கிறீர்கள்? அல்லது எந்த ஒரு சிக்கலையும் தாங்கள் காணவில்லையா?
எனக்கு பல வேலைகள் செய்த அனுபவமில்லை. பன்னாட்டு வங்கி வேலை, வேலைக்கான உத்திரவாதம் இருந்ததால், இன்னொரு வேலை தேட வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டதாக நினைக்கிறேன். ஆனால் நான் வேலைப் பார்த்த வங்கியில் ஆரம்பத்தில் நிறைய கலாச்சார பிரச்சனைகளை எதிர்கொண்டேன். ஆண்களுடன் கைகுலுக்கவே இன்னும் விலகி நிற்கும் தமிழ்ச்சமூக சூழலிருந்து யாரைச் சந்தித்தாலும் உடனே கைகுலுக்கி, நண்பராக இருந்தால், கைகுலுக்குவதுடன் தோள் அணைத்து, நட்பைக் கொண்டாடும் அலுவலக சூழல், பார்ட்டி நடந்தால் அவர்களுடன் உட்கார்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த நாட்கள், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவரை சார் அல்லது மேடம் என்றழைக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம். இப்படி அலுவலக சூழலில் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்த வேறுபாடுகளுக்கு நடுவில் நான் மனஉளைச்சல்களுக்கு ஆளாகி இருக்கிறேன்.
🔥
தீவிர இலக்கிய அறிமுகம் எப்படி ஏற்பட்டது? தங்களது வழிகாட்டிகள் யார் யார்? ஜரைஞ்சக படைப்புகளுக்கும், தீவிர இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை நோக்கி எப்படி சென்றீர்கள்?
நான் முதுகலையில் தமிழ் இலக்கியம் படித்தேன். அதிலும் சிறப்புப் பாடமாக மாடன் லிட்ரேச்சர். எனவே ல.சா.ரா , தி.ஜானகிராமன், நீல பத்மநாபன் இவர்கள் எல்லோருமே எனக்கு
கல்லூரி காலத்திலேயே அறிமுகமாகி விட்டார்கள். பேராசிரியர்கள் கனகசபாபதி, ராமசாமி, நவநீத கிருஷ்ணன்
, வேங்கட் ராமன், தி.சு.நடராசன், இவர்கள் எல்லோருக்கும் நான் மாணவியாக இருந்தவள். தீவிர இலக்கியம் அக்காலத்தில் மிகச்சரியாக எனக்கு அறிமுகமானது. அத்துடன் இலக்கிய
விமர்சனத்தையும் பல்கலை கழகத்தின் வியாழ வட்டங்கள் சொல்லிக் கொடுத்தன. மதுரை பல்கலை கழகத்தின்
நூலகத்தில் இரண்டு ஆண்டுகள் மிக அதிகமாக நேரத்தைச் செலவு செய்த மாணவியாக நான்தான் இருந்திருப்பேன்.அதுவரை திராவிட இயக்க கருத்துகளை மட்டுமே அறிந்திருந்த நான் பல்கலை கழக நாட்களில்தான் தீவிர இலக்கியத்திற்கும் பொதுவுடமை சித்தாந்தத்தைப் படிப்பதிலும் அது குறித்த விவாதங்கள் செய்வதிலும் ஈடுபட்டேன் என்று சொல்லலாம். ஜெயகாந்தன் அன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு ஹீரோ மாதிரி இருந்தார்.எனக்கு அப்படி எல்லாம் இல்லை என்றாலும் ஜெயகாந்தன் பொதுஜனம் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்ததை நானும் கவனித்தேன்.அக்காலத்தில் எனக்கு நீல பத்மநாபனை ரொம்பவும் பிடிக்கும். May be his look. I don't know. நீல பத்மநாபனை விடுதியில் என் அறைக்கு அடுத்த அறையில் இருந்தப் பெண் தன் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்திருந்தார். நான் எப்போதும் அவர் நீல பத்மநாபன் பற்றி சொல்வதை எல்லாம் ரொம்பவும் ஆவலுடன் கேட்பேன். நீல பத்மநாபன் கலந்து கொண்ட மு. வ. . அரங்கு நிகழ்வில் நான் தான் நன்றியுரை ஆற்றினேன். அன்று அவர் ப்ளூ கலர் சின்ன சின்ன கட்டம் போட்ட சட்டை அணிந்து இருந்தார். அது இன்னும் மறக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!தலமுறை நாவல்கள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்தது. எனக்கு அவருடைய தலைமுறைகள் நாவலை விட பள்ளிகொண்டபுரம் தான் பிடிக்கும். இன்றுவரை அதில் மாற்றமில்லை.
🔥
எழுத வேண்டும் என எப்படி தோன்றியது? எப்பொழுது எழுத துவங்கினீர்கள்? பத்திரிக்கைகளில் எப்பொழுது அவை பிரசுரமாயிற்று?
கல்லூரி காலத்தில் எழுதியதும், பேசியதும் உண்டு. ஆனால் நான் உங்களிடம் சொல்லியது போல என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இலக்கியம் படித்த நான் கணக்கு ஏற்றுமதி, இறக்குமதி என்று இன்னொரு துறையில் கால்வைத்தேன். இருத்தலை நோக்கிய பயணத்தில் திரும்பிப் பார்க்கும் போது எங்கே நிற்கிறேன் என்பதை நான் புரிந்துகொள்ளும் போது வருடங்கள் பல ஓடி விட்டன. அக்காலத்தில் மும்பையில் சீர்வரிசை என்ற மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இதழுக்கு நூல் விமர்சனப்பகுதிக்கு தமிழகத்திலிருந்து நிறைய புத்தகங்கள் வர ஆரம்பித்தன. சீர்வரிசை ஆசிரியராக இருந்த சண்முகராசன் அவர்கள் அப்புத்தகங்களை என்னிடம் கொடுத்து வாசித்துவிட்டு எதாவது நாலு வரி எழுதித்தரச் சொன்னார். வாசிப்பது தான் எனக்கு மிகவும் பிடித்தமானதாயிற்றே. வாசித்து, ரசித்து எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். அதன்பின் புதியமாதவியின் விமர்சனத்திற்காக என்றே பதிப்பகங்கள் புத்தகம் அனுப்ப ஆரம்பித்தன. இக்காலத்தில் கவிதைகளும் எழுத ஆரம்பித்தேன். சௌந்தர சுகன், கணையாழியில் தான் முதலில் என் சிறுகதை வெளிவந்தது. சரியாக எதில், எப்போது என்றெல்லாம் நினைவில்லை. அதன்பின் சிற்றிதழ்கள் கவிதாசரண்.நாளை விடியும், சிந்தனையாளன், நடவு. புன்னகை, தமிழர் கண்ணோட்டம், கலை இலக்கிய இதழ், புதிய கோடாங்கி, மணல் வீடு என்று என் எழுத்துப் பயணம் தொடர்ந்தது. இக்காலக் கட்டத்தில் இணைய தொழில்நுட்பம் ஆரம்பித்தது. திண்ணை, வார்ப்புகள், பதிவுகள், ஊடறு, கீற்று என்று பல்வேறு இணைய தளங்களில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். இணையத்தில் எழுதுவது எனக்கும் இன்னும் வசதியாக இருந்தது. மும்பையிலும் அவ்வப்போது சிற்றிதழ்கள் பத்திரிகைகள் ஆரம்பிப்பதும், இரண்டு மூன்றாண்டுகள் நடத்திவிட்டுபின் தொடர முடியாமல் நின்று போவதும் இன்றுவரை தொடரந்தான் செய்கிறது. மும்பை வார இதழ் தமிழ்ப் போஸ்டில் முழுநேர எழுத்தாளராக இருந்த அனுபவமெல்லாம் உண்டு (இது சம்பளம் வாங்காத வேலை). நிறைய சோதனை முயற்சிகளை செய்வதற்கு மும்பை பத்திரிகைகள் சீர்வரிசை, மும்பை தமிழ்ப் போஸ்ட், மும்பைத் துடிப்பு, மும்பை தமிழ் டைம்ஸ் பத்திரிகைகள் எனக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. தமிழ்ப்போஸ்டில் வெளியான தனியறை சிறுகதைகள் அதில் முக்கியமானதாகும்.
🔥
வாழ்க்கைக்கு எப்பொழுதுமே ஒரு பொருளாதார பாதுகாப்பு தேவையாக இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு வேலைக்கு செல்லுதல், சம்பாதித்தல் என்பது அவனுக்கு தான் நேசிக்கும் எழுத்தை நோக்கி போக விடாமல் ஒரு வகையான அக்கப்போரான இன்னல்களை அல்லது சொல்லொண இன்னல்களை பொதுவாக கொண்டிருப்பதாக இருப்பது எதனால்? தங்களுடைய அனுபவம் எப்படிப்பட்டது?
எல்லா மனிதனுக்கும் வயிற்றுப்பசி உண்டு. பட்டினி கிடந்த எல்லாம் புத்தகம் வாசிப்பதோ, கவிதை எழுதுவதோ சாத்தியமில்லை. மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் தன் இருத்தலுக்கானதை தானே தேடிக்கொள்வதுதான் வாழ்க்கை. இதில் எழுத்தாளன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? எழுத்தாளனுக்கு இதெல்லம் சொல்லொணா இன்னல்கள் கொண்டிருப்பதாக ஏன் நினைக்கிறோம்? இந்த மனநிலை காலம் காலமாக கற்பிக்கப்பட்டிருக்கும் கனவு மனநிலை. இன்னும் சொல்லப்போனால் பாட்டுப்பாடி அரசனிடம் பரிசுகள் வாங்கி வாழ்க்கையைக் கழித்த பேரரசு கால நிலவுடமை சமூகத்தின் மனநிலை, நான் எழுத்தாளனாக்கும், வேலை செய்வது பெரும் துயரமாக இருக்கிறது என்று சொல்வதன் அடுத்தக் கட்டம் தான் எழுத்தாளனை இச்சமூகம் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதற்கான காரணமும் விவசாயியைப் பாதுகாக்காத சமூகம் எழுத்தாளனை மட்டும் பாதுகாக்க வேண்டுமா என்ன? வாழ்க்கையில் தன் அடிப்படைத் தேவைகளுக்கு ஒவ்வொரு மனிதனும் உழைத்தாக வேண்டும். அப்படி உழைக்கவில்லை என்றால் அவன் எங்காவது சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான். இந்த நிலை மற்றவர்களை விட எழுத்தாளனுக்கும், அவன் எழுத்தறத்திற்கும் பேராபத்தாகத் தான் முடியும். என்னைப் பொறுத்தவரை என் தேவைகள் என்பது மிகவும் குறைவு. என் தேவைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நான் எப்போதும் என் வசமே வைத்திருக்கிறேன். ஒப்பீடுகளை இவ்விஷயத்தில் தவிர்க்கவே விரும்புகிறேன். சமரசமில்லாமல் அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்காமல் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் உழைப்பும். வாழ்க்கையும் ஒவ்வொருவருக்கும் தேவையானது என்பது நான் என் கருத்து.
🔥
இல்லை, எழுத்தாளருக்கு வேலைக்கு செல்வதில் பிரச்சனை இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை. எழுத்தாள்கை வாழ்வதற்கு என்ன தேவையோ அது பணம் சம்பாதிக்கவும் குடும்ப நடத்தவும் என்ன மனநிலை தேவையோ அது படைப்பாற்றலோடு இயங்க என்ன மனநிலை தேவையோ அதை, வழிமறித்து முற்றிலும் மாற்ற முயன்றபடி இருக்கிறது. அதாவது பணம் சம்பாதிக. எழுத்திற்கு எப்பொழுதும் அகவயமாக, நிறுத்தி, நிதானித்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்பது அவனை புறவயமான புழக்கத்திற்கு மீண்டும் அத்தனை எளிதில் திரும்ப முடியாத நீண்ட தூரத்திற்கு இழுத்து செல்கிறது. இதற்கு என்ன தீர்வு என்பது மாதிரி தங்களுக்கு ஏதேனும் சொல்ல தோன்றுகிறதா? ஆனால் தாங்கள் சுயசார்போடு இருக்க வேண்டும் என சொல்வதை முற்றிலும் ஒத்துக் கொள்கிறேன்
.
பணம் சம்பாதிப்பது என்ற ஓட்டத்தில் எழுத்தாளனால் பங்கெடுக்க முடிவதில்லை. அவனைப் பொறுத்தவரை அவன் பிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக வாழ்வதற்கான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டால் போதும். ஆனால் சமூகம் குடும்பம் இதை அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு படைப்பு மனமும் எதிர்கொள்ளும் பிரச்சனை இதுதான். இதில் உடைந்துப்போனவர்கள் பலருண்டு, ஒதுங்கிவிட்டவர்களும் உண்டு. இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த அழுத்தமான மனநிலை எழுத்துகளின் எரிமலையாக கொப்பளிக்கிறது. தத்துவம் பேசுகிறது. மாயவித்தைகளைக் கொண்ட புனைவுலகத்தை
சிருஷ்டித்துக் கொள்கிறது. இம்மனநிலை நம் சமூக சூழலில் எழுத வஆண்களை விட மிகவும் அதிகமாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகி ஒரு அகப்போராட்டம் பெண் எழுத்தாளர்களிடம் ஏற்படுகிறது.
🔥
ஒரு படைப்பாளிக்கு வாழ்வு குறித்து எத்தனை தேடல், எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதோடு அவன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். அவன் பதில்களை அல்லது தீர்வுகளை அல்லது முடிவுகளையும் கூட கண்டடையலாம். ஆனால் ஒருபோதும் அவன் அறுதியிறுதியான முடிவுகளுக்கு அதன் பிறகு அதில் வேறு எதுவும் இல்லை என்பது போல வரமுடியாதவனாக இருக்க வேண்டும். ஒரு படைப்பாளியை இப்படி வரையறுக்க முடியுமா?
முடிவுகளைக் கண்டடையும் புள்ளியை நோக்கித்தான் ஒவ்வொரு மனிதனின் தேடலும். படைப்பாளி அந்தப் புள்ளியைத் தொட்டுவிடுவது அவ்வளவு எளிதல்ல. அது அவன் மனநிலைக்கு எளிதில் வசப்படும் ஒன்றல்ல. அப்படி வசப்பட்டு விட்டால் அவனிடம் வார்த்தைகள் மவுனித்து விடும்.
🔥
நான் இந்த விஷயத்தை இப்படி பார்க்கிறேன். எழுத்தாளன் வாழ்வின் ஊடாக, அதை உண்மையை தன் எழுத்தின் ஊடாக கண்டடைய பார்ப்பவன். வாழ்வு உணர்வுப்பூர்வமான தளத்தில் மையம் கொண்டிருக்கிறது. எனவே எழுத்தாளனும் உணர்வுப்பூர்வமான தளத்தில் மையம் கொண்டிருக்கிறான். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவெனில் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை எப்பொழுதும் நம்மை ஒரு திட்டவட்டமான உண்மையை நோக்கி நகர்த்தி செல்லாது. வேறு எப்படி அவன் வாழ்வின் ஊடாக, தன் எழுத்தின் ஊடாக எது உண்மையோ அதை நோக்கி செல்வது? இவ்விஷயத்தில் நாம் பகுத்தறிவின் உதவியை நாட தயாராக இல்லையெனில் அதை விட்டால் நாம் ஒன்றே ஒன்றைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அற உணர்வு என்பது தான் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் பகுத்தறிவிற்கு என்ன மாதிரியான ஒரு உண்மையை நோக்கி செல்லும் சாத்தியம் இருக்கிறதோ, அதே மாதிரியான அதற்கு நிகரான ஒரு சாத்தியம் வெகுண்டு உச்சத்திற்கு செல்லும் அற உணர்விற்கும் இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதற்கு உதாரணமாக நான் ஜெயகாந்தனை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். ஜெயமோகளையும் சொல்லலாம் தான். ஆனால் அவர் ஜெயகாந்தனை விட சற்று அறிவுப்பூர்வமானவராக மதிப்பிடுகிறேன். எனவே அற உணர்வை விட்டு விலகாத ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை என நினைக்கிறேன். அவனுக்கு வேறு வழியில்லை. வாழ்வில் உள்ள எந்த ஒன்றைப்பற்றியும் எழுத்தாளனால் திட்டவட்டமான ஒரு முடிவிற்கு எப்பொழுதும் வர முடியாது என்பதை போல தெரிவது அவன் எப்பொழுதும் தன் இலக்கிய பணியில் முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானதொரு தளத்தில் நின்று வேலை செய்கிறான் என்ற காரணத்தை தாங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? அல்லது வேறு காரணம் ஏதேனும் இருப்பதாக உத்தேசிக்கிறீர்களா?
அறஉணர்வு...? சமூகம் எதை அறம் / ஒழுக்கம் என்று கட்டமைத்திருக்கிறதோ அதைத்தான் சொல்வதாக நினைக்கிறேன். அப்படியானால் நீங்கள் சொல்வதைப் போல "அற உணர்வை விட்டு விலகாத ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு எப்போதும் தேவை" என்ற உங்கள் கருத்துடன் மாறுபடுகிறேன். இங்கே அறம் / ஒழுக்கம் இத்தியாதி எல்லாம் எப்போதுமே ஆண்மையப்
பார்வையில் இருப்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? இன்றைய இலக்கியவாதியின் அனுபவங்கள் அவனுடைய பிரக்ஞையுடன் சேர்வதும் சமூகச் சூழலில் இந்தச் சேர்க்கையும் முரண்படுவதுமாக படைப்புவெளி உருவாகிறது. சீன தத்துவத்தில் ஒன்றைச் சொல்வார்கள். அதாவது "யின்" & "யேங்க்" இந்த இரண்டுக்குமான செயல்பரிமாற்றம் தான் மனித உலகின் தொடர் இருந்தலுக்கானது என்று. இலக்கியத்திலும் அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் அறஉணர்வு என்று சொல்வதை மனிதவாதம் முன்வைக்கும், ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி அல்லது அகக்குரல் என்று எடுத்துக் கொண்டால் இந்த மனசாட்சியை எது கட்டமைக்கிறது என்ற அடுத்தக் கேள்வி எழத்தான் செய்கிறது. அறஉணர்வுகள் கூட சமூகத்தின் புறவெளிகளால் தீர்மானிக்கப்படுபவையாக இருக்கின்றன.
போர்ச்சமூகத்தில் வீரமும், எதிரி நாட்டவரை அழிப்பதும் போர் அறமாக இருக்கிறது. புறநானூறு வீரத்துடன் பேசிய தாய்க்குல பாடல்களை எல்லாம் வீரம் கொப்பளிக்க எழுதிய படைப்புலகின் அறவுணர்வு, வீரர்களின் நடுகல் வழிபாடு இத்தனையும் கடந்து இன்றைய போர்க்களத்தில் அதே பெண்,
தாய் கேட்கிறாள்..
"கொலையுண்டு போன
என் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப் பசியாற்றி
தாகம் தீரச் செந்நீரும் குடித்தபின்
இன்னுமா தாய்நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது? (ஈழம் கவிஞர் அவ்வையின் குரல்)
சித்தார்த்தா, புத்திர சோகத்தை அறிவாயா, மரணமில்லாத வீட்டில் சுடுகு வாங்க என்னை அனுப்பாதே" (புதியமாதவி கவிதை பாலைத்திணை)
இப்போது அறவுணர்வு பற்றிய கேள்வியும் எழுகிறது தானே. எந்த ஒரு படைப்புக்கும் உணர்வுப்பூர்வமான தளம் முக்கியமானதாக இருந்தாலும் இன்றைய நவீன, பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொரு படைப்பாளனும் சமூகத்துடனும் அவன் உணர்களும் அனுபவங்களுமாக இணைவதும் முரண்படுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. நேற்றைய இன்றைய அனுபவம் மறுக்கிறது.அவனுடைய மனக்குரலில் பல்வேறு முகங்கள் பல்வேறு குரல்களுடன் மோதிக்கொண்டே இருக்கின்றன. படைப்பாளன் சுயத்துடனும் போராடிக் கொண்டே இருக்கிறான்.
🔥
இதை தாங்கள் உனர்ந்திருக்கிறீர்களா என தெரியவில்லை. வாழ்வின் எந்த ஒரு உண்மையும் தன்னந்தனி உண்மையல்ல. திட்டவட்டமான ஒரு முடிவை கண்டடைவது என்றால் என்ன? உண்மையை கண்டடைவது தான். ஆனால் அது சாத்தியமானால் அங்கிருந்து உடனடியாக அடுத்த கேள்வி தவிர்க்க முடியாமல் மற்றொரு உண்மையை நோக்கி எழுந்து திரும்ப ஆரம்பிக்கிறது. உண்மைகள் எப்பொழுதும் எண்ணற்ற உண்மைகளே எனவே அறிதலுக்கான ஒரு நகர்வும், கேள்விகளும் அதன்பிறகும் ஒரு குறிப்பிட்ட உண்மையை கண்டடைந்த பின்னும் - முற்றுப்பெறுவதில்லை அல்லவா? இதைப்பற்றி படைப்போடும், படைப்பாளியோடும் தொடர்புபடுத்தி தாங்கள் ஏதேனும் கூற முடியுமா?
திட்டவட்டமான முடிவைக் கண்டடைவது என்பதெல்லாம் சித்தர்களின் வழி. இன்றைய படைப்பு சூழலில் தேடல், தேடல், தேடல் மட்டுமே. ஒன்றின் போதாமை இன்னொன்றை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது. இப்படித்தான். தேடலின் பாதையும் நம் வசமில்லை. வாசிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு கிடைத்தவை திராவிட இயக்க இதழ்கள் தான். அந்த இதழ்களின் வழி நான் அடைந்த இடம் எனக்கு போதுமானதாக இருந்தது என்று நான் நினைத்திருந்தால் நான் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க முடியாது. அறிஞர் அண்ணா எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் தான். ஆனால் அவரின் நாவல் 'பார்வதிபாய் பி.ஏ.' என்னைத் திருப்திப்படுத்தவில்லையே! எனக்கு புதுமைப்பித்தன் தேவைப்படுகிறார்.
ஒவ்வொரு மனித வாழ்விலும் இன்னும் வசப்படுத்த முடியாதது மனம். அந்த மனசின் ஒவ்வொரு நுண்ணிய உணர்வுகளும் படைப்பாளனுக்கு எப்போதுமே ஒரு மாயக்குகை. அந்தக்குகை வாசத்தில் கு.பா.ரா, ல.சா.ரா எல்லோரும் வருகிறார்கள். மண்ணோடு வாழும் மக்களின் வாழ்க்கையில் நாஞ்சில் நாடனின் கும்பமுனியின் குறும்புத்தனங்கள். கேலிகள், கிண்டல்கள்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை முற்றுப்பெறாது. புதிதுபுதிதாக முகம்காட்டிக்கொண்டிருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் இதன் போக்குகள் இன்னும் விசாலமாகி ஒரு பன்முகத்தன்மையைக் கொடுத்திருக்கின்றன.
வாழ்வை ஒருவன் எப்படி பார்க்கிறான் என்பது தான் அவனை ஒரு மிகச்சிறந்த படைப்பாளியாக ஆக்குகிறது. அது மனிதர்களின் பொதுப்படையான பார்வையிலிருந்து உருவாகி வருவதல்ல. அவனுடைய சொந்த அணுகுமுறையிலிருந்து, சொந்த பார்வையிலிருந்து உருவாகி வருவது. ஒரு படைப்பாக்கத்தில் இது என்ன மாதிரியான பாத்திரத்தை வகிக்கிறது?
உண்மைதான். ஆனால் இந்த வேறுபட்ட பார்வை என்பது வாழும் சூழல், வாசிப்பு, ஏன் நட்பு வட்டம் கூட தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து தான் அவன் படைப்பாக்கத்தில் பங்காற்றுகின்றன. இப்பெருநகர வாழ்க்கை, என் குடும்பத்தின் அரசியல் பின்னணி, என் வாசிப்புகள், என் பணியிடம், ஏன் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் இப்பெருநகரத்தின் இரயில் வண்டியின் சக்கரங்கள், சாக்கடைகள், என் தாராவி வாழ்க்கை எல்லாம் சேர்ந்தது தான் நானும், என் எழுத்தும்.
🔥
நான் இதைப்பற்றி தான் சொல்கிறேன். வாழ்க்கையை வாழ நாம் எப்படி சமரசத்தை மேற்கொள்கிறோமோ அதேவித ஒரு சமரசத்தை நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை புரிந்துகொள்வதிலும் மேற்கொள்ள முடியாது. சமூகம் எப்பொழுதும் நம்மை பிழையான புரிதல்களுக்கு நிர்பந்திக்கிறது. இம்மாதிரி ஒரு சூழலை தாங்கள் நிச்சயமாக சந்தித்திருப்பீர்கள். சுற்றியுள்ள அத்தனை பேரும் ஒரு தவறான, பிழையான கருத்தை கொண்டிருப்பார்கள். அதை நம் மீதும் திணிப்பார்கள். நேரடியாக என்றாலும் பரவாயில்லை. மறைமுகமாக என்பது தான் முக்கியமான பிரச்சனையே. அக்குறிப்பிட்ட இடத்தில் ஒரு எழுத்தாளனுக்கு நிச்சயமாக இருந்தே ஆக வேண்டிய விசைகொண்டு எழ வேண்டிய அறவுணர்வு இல்லையெனில், சமரசம் அங்கும் இருக்குமெனில் - ஒன்றை புரிந்துகொள்வதிலும்
பத்து பேர் பத்து வகையான வழியை தங்கள் சௌகர்யத்திற்கு காட்டி போ என்கிறார்கள். அங்கு மொத்தமாக அத்தனை பேரையும் கடந்து நமக்கு என்ன மாதிரியான ஒரு விசையோ, கேள்வியோ எழ வேண்டுமோ அது அங்கு நிச்சயமாக எழ வேண்டும். நான் இதைப்பற்றியே கேட்கிறேன். பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இது இல்லை என தோன்றுகிறது. அதாவது சமூகம் அளிக்கும் திட்டமிட்ட பிழையான புரிதல்களுக்கு அவர்கள் இலக்காகிறார்கள். பலியாகிறார்கள், இதைப்பற்றி ஏதேனும் சொல்ல முடியுமா? கூட அங்கு என்ன கேள்வி எழ வேண்டுமோ அந்த கேள்வி நிச்சயமாக எழாது. பயணத்தில் திக்கு தெரியாத இடத்தில்
இதை ரொம்பவும் அதிகமாகவே நான் சந்தித்திருக்கிறேன். சந்தித்தும் வருகிறேன். காரணம், நான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால்! அதுவும் குடும்பம் என்ற நிறுவனத்தில் வாழும் ஒரு பெண்ணாக இருப்பதால் ஒவ்வொரு கணமும் அது என்னையே பலியாக கேட்கிறது. இத்துடன் இன்னொரு புதிய பலிபீடமும், ஊடகங்களைத் தான் சொல்கிறேன். இதில் ஊடகங்கள் வகிக்கும் பங்கு என்னவாக இருக்கிறது? சாதி, குழுமனப்பான்மை, அரசியல் அதிகாரம் எல்லாம் சேர்ந்து படைப்புகளைப் பலி கேட்கின்றன. அாடக வெளிச்சம், ஓரிரவில் உலக மகாப்புகழ் பெற்ற எழுத்தாளர் என்ற முத்திரை.. இப்படியாக கழுத்தில் அலங்காரமாகத் தொங்கவிடப்படும் மாலைகள்.. இதற்கான சமரசங்களில் எழுத்துகள் தன்னை மாய்த்துக் கொள்கின்றன. இந்தப் போராட்டத்தில் காயங்களுடனும், நிராகரிப்புகளுடனும் பயணிக்க வேண்டி இருக்கிறது. எதையும் கள்ள மவுனத்தில் கடந்துப் போய்விடுவதன் மூலம் அவர்களுடன் சமரசம் செய்யாத எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இருட்டடிப்புகள் தொடர்கின்றன.
🔥
மனித உறவுகளுக்கென்று நடைமுறை வாழ்வு சார்ந்த, தொர்த்த வாழ்வு சார்ந்த ஒரு வேல்யூ இருக்கிறது. இவை மறைத்து நிற்கும் எத்தனை பொய்மைகளுக்கிடையிலும் உண்மையை காணும் திறன் ஒரு படைப்பாளிக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கட்டாயமான தேவையாக இருக்க வேண்டும். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தால் அது அவன் அறிந்து நிகழ்வதை விட சிறப்பானது. இதை எப்படிப்பட்ட கூற்றாக பார்க்கிறீர்கள் ? இது ஒரு படைப்பாளிக்கு தவிர்க்க முடியாத முக்கியமானதொரு தேவையென சொல்ல முடியுமா? இதனால் அவனுக்கு அகமும், புறமும் போராட்டங்கள் ஏற்படலாம்.
சமூக அறம் என்பதை குடும்பம் சார்ந்த ஆண் பெண் உறவு நிலையில் முழுக்கவும் ஒரு பெண் மீது சுமத்தப்பட்டிருப்பாதாகவே உணர்கிறேன். அதிலும் குறிப்பாக பெண்ணின் உடல் சார்ந்தப் பார்வைகள், ஆண் மைய சமூகத்தின் இக்கட்டுப்பாடுகள் சொத்துடமையைப் பாதுகாக்கின்றன என்பதையும் விட சாதிய கட்டமைப்பை இறுக்கம் தளராமல் வைத்திருக்கின்றன. இயற்கையான எதிர்பாலின சுவர்ச்சியும், ஈர்ப்பும் கட்டுப்பாடுக்குள் அடங்க முடியாமல் திமிறி, அது வெளியில் தெரியும் போது, பெண் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அகமனப்போராட்டத்தில் சிக்கி சிதைவுறுகிறாள். இந்த நிலையை எந்தளவுக்கு ஒரு பெண்ணால் தன் படைப்புகளில் வெளிப்படுத்த முடியும் என்பதும், அவள் எம்மாதிரியான போர்வைகளைப் போர்த்திக் கொள்கிறாள் என்பதும், படைப்பாளியின் முகமாக மாறுகிறது. தி ஜானகிராமன் தன் எழுத்துக்களை பற்றி சொல்லும்போது ஒரு செவ்வியில் சொன்னார்
" எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம். எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம், பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் இந்த அப்படிச் நிர்பந்தங்கள் செய்துவிடுகின்றன. இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்"
,🔥
ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆள்மீக தேடலாக இருக்க முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?
ஆன்மீக தேடலும், தத்துவத் தேடலும் இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு இருப்பவை என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ராமகிருஷ்ணர் விவேகானந்தர் சித்தர்கள் என்று ஆரம்பித்து ஓஷோ வரை ஆன்மீகத் தேடலும், தத்துவத்தேடலும் தொடர் பயணத்தில் இருக்கின்றன. எதுவும் முழுமையானதோ முற்றுப்பெற்றதோ இல்லை. அதனால் தான் ஒன்றின் போதாமையை இன்னொன்று வந்து இட்டு நிரப்ப நினைக்கிறது. படைப்பாளி இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு படைப்பு மனமும் தன் சுயம் தேடலில் ஆரம்பித்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான புறக்காரணிகள் சில தருணங்களில் தேடலின் விரியத்தையும் பாதைகளையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இது இப்படித்தான் இருக்கும் என்று எதையும் உடனே ஏற்றுக்கொண்டு கடந்துவிடும் மனநிலை ஒரு படைப்பாளிக்கு இருப்பதில்லை. அதனால் தான் அவன் அதன் காரணிகளைத் தேடுகிறான். அது அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் தேடல் தொடர்கிறது. படைப்பாளியின் தேடல் தொடரவில்லை என்றால் அவன் எழுதுவதை நிறுத்திவிட்டு பழைய நினைவுகளை மட்டும் அசைப்போட்டுக்கொண்டு மேடைகளை மட்டும் அலங்கரித்துக் கொள்ளலாம்.
🔥
ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு
எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உள்தைமாகவும் இருக்கலாம்...
இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் லௌகீகம் உன்னதமாக இருக்கும். படைப்புகளைப் பார்க்கிறோம். ஆன்மீகத்தளம் என்பதை சொர்க்க, நரக புனைவுகள் தாண்டியதாகவே நீங்கள் கையாளுவதாக நினைக்கிறேன்.
🔥
எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி முன்னரே தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின் எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு படைப்பாக்கத்தின் போது அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய மொழிவழி பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைப்பாற்றல் என்பதா?
கவிதை மட்டுமே திட்டமிடலுக்குள் சிக்குவதில்லை. ஆனால் சிறுகதையாகட்டும் அதிலும் குறிப்பாக நாவலாகட்டும். ஒரு வரைபடத்தை படைப்பு மனம் உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த வரைபடம் என்பது எந்த ஓர் அளவுகோலையும் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் திருப்பங்கள் கூட, படைப்புத்தளம் உருவாகும் போது பளிச்சென வந்துவிடுகிறது. மொழி ஆளுமை நிலையில் ஒரு சிறிய ஒற்றைச் சொல் கூட இப்படியான வித்தைகளைச் செய்துவிடும். புத்தம் புதிய மொழி வழி பயணம் அறிந்தும் அறியாமலும் நடக்கிறது. ஆனால் முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக அது நிகழ்வதில்லை.
🔥
ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக மொழியின் வழியாக பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பளின், எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல, மனப்பாடம் செய்து தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க சுதந்திரம் என்பது என்ன?
மொழியின் வழியாக சொல்கிற போது அதே மொழி வாசிப்பனுபவமாக மாறும் இட்த்தில் வாசகனின் மொழி, அனுபவ வீச்சுடனும், அனுபவத்துடனும் தொடர்புடையதாகிறது. மகாகவி பாரதி சுவிதைகளை எடுத்துக் கொள்வோமே. 10 வயதில் வாசிக்கும் போது உணர்ந்ததையா பதின்ம வயதில் உணர்கிறோம்? அனுபவங்களின் ஊடாக மொழி இன்னொரு தளத்திற்கு ஒவ்வொரு வாசகனையும் அழைத்து செல்கிறது. இதனால தான் மொழி வழியாக காணும் படைப்புகள் பன்முகத் தன்மையுடன் வாசகனின் கைப்பிடிக்குள் அடங்கி விடாமல் விசுவரூபம் எடுக்கின்றன. நேற்று புரியாதது இன்று புரிகிறது. இன்று புரியாதது நாளை புரியும். புரியலாம். புரியாமலும் போய்விடலாம். இது என்னவோ நவீன இலக்கியத்திற்கான கூறாக நினைக்க வேண்டாம். மொழிவழி எண்ணங்கள் வெளிப்படத் தொடங்கிய காலத்திலிருந்து இருப்பதாகவே கருத வேண்டும். அதனால் தான் உரையாசிரியர்கள் உருவானார்கள்.
🔥
இலக்கிய படைப்பை அப்படைப்பிற்கு வெளியேயிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய
கோடுகள் இதழ் எண்: 13, 1.10.2019-15.11.2019எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான் இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம். எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்? விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம், பாபம் என்று மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல் முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் எல்லாம் அதில் இருக்கின்றன. உங்களுக்காக எழுதும் பொழுதோ, உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக் காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான் கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில் நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது. மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும் இந்த அப்படிச் நிர்பந்தங்கள் செய்துவிடுகின்றன. இல்லாதவர்களைக் கண்டும் பொறாமைப்படுகிறேன்"
ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது என்ன? அது ஒரு ஆள்மீக தேடலாக இருக்க முடியாது. தத்துவத்தேடலாகவும் இருக்க முடியாது. இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு, திட்டவட்டமான வழிமுறையோடு இருப்பவை. ஒரு இலக்கிய படைப்பாளி இவ்விரண்டிலிருந்தும் எப்படி ஒரு வேறுபட்ட தேடலை கொண்டிருக்கிறான்? ஒரு படைப்பாளிக்கு தேடல் என்பது கட்டாயமானதா?
ஆன்மீக தேடலும், தத்துவத் தேடலும் இரண்டுமே திட்டவட்டமான அணுகுமுறையோடு இருப்பவை என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ராமகிருஷ்ணர் விவேகானந்தர் சித்தர்கள் என்று ஆரம்பித்து ஓஷோ வரை ஆன்மீகத் தேடலும், தத்துவத்தேடலும் தொடர் பயணத்தில் இருக்கின்றன. எதுவும் முழுமையானதோ முற்றுப்பெற்றதோ இல்லை. அதனால் தான் ஒன்றின் போதாமையை இன்னொன்று வந்து இட்டு நிரப்ப நினைக்கிறது. படைப்பாளி இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு படைப்பு மனமும் தன் சுயம் தேடலில் ஆரம்பித்து பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான புறக்காரணிகள் சில தருணங்களில் தேடலின் விரியத்தையும் பாதைகளையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இது இப்படித்தான் இருக்கும் என்று எதையும் உடனே ஏற்றுக்கொண்டு கடந்துவிடும் மனநிலை ஒரு படைப்பாளிக்கு இருப்பதில்லை. அதனால் தான் அவன் அதன் காரணிகளைத் தேடுகிறான். அது அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் தேடல் தொடர்கிறது. படைப்பாளியின் தேடல் தொடரவில்லை என்றால் அவன் எழுதுவதை நிறுத்திவிட்டு பழைய நினைவுகளை மட்டும் அசைப்போட்டுக்கொண்டு மேடைகளை மட்டும் அலங்கரித்துக் கொள்ளலாம்.
ஒரு படைப்பாளியை லௌகீகத்தளத்தில் வேரூன்றியிருந்து படைப்பாக்கத்தின் போது இடைவிடாமல் ஆன்மீகத்தளத்திற்கு
எத்தனிப்பவன் என்று சொல்லலாமா? லௌகீக தளத்திற்கும், ஆன்மீக தளத்திற்கும் இடையே போராடுபவனை போல. ஆன்மீகத்தளம் என்பது ஒரு படைப்பாளிக்கு லௌகீக உள்தைமாகவும் இருக்கலாம்...
இருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் லௌகீகம் உன்னதமாக இருக்கும். படைப்புகளைப் பார்க்கிறோம். ஆன்மீகத்தளம் என்பதை சொர்க்க, நரக புனைவுகள் தாண்டியதாகவே நீங்கள் கையாளுவதாக நினைக்கிறேன்.
எழுதப்போகும் ஒரு படைப்பைப்பற்றி முன்னரே தெளிவான, நிறைவான திட்டமிடலை கொண்ட வரைபடத்தோடு ஒரு படைப்பாளி இருக்கும் போது அப்படைப்பின் எல்லைகளும், சாத்தியங்களும் குறுகுகிறதா? ஒரு படைப்பாக்கத்தின் போது அவனை ஒரு முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக நிகழும், புத்தம்புதிய மொழிவழி பயணத்திற்கு எது ஆட்படுத்துகிறதோ அதுதான் படைப்பாற்றல் என்பதா?
கவிதை மட்டுமே திட்டமிடலுக்குள் சிக்குவதில்லை. ஆனால் சிறுகதையாகட்டும் அதிலும் குறிப்பாக நாவலாகட்டும். ஒரு வரைபடத்தை படைப்பு மனம் உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த வரைபடம் என்பது எந்த ஓர் அளவுகோலையும் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் திருப்பங்கள் கூட, படைப்புத்தளம் உருவாகும் போது பளிச்சென வந்துவிடுகிறது. மொழி ஆளுமை நிலையில் ஒரு சிறிய ஒற்றைச் சொல் கூட இப்படியான வித்தைகளைச் செய்துவிடும். புத்தம் புதிய மொழி வழி பயணம் அறிந்தும் அறியாமலும் நடக்கிறது. ஆனால் முன்பின் தெரியாத வாழ்வின் வழியாக அது நிகழ்வதில்லை.
ஏன் மனிதனுக்கு பிறரது எண்ணங்களின் வழியாக மொழியின் வழியாக பின்தொடர்ந்து சென்று ஒரு கருத்தையோ, ஒரு உண்மையையோ புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது? பிறரது எழுத்தை கண்டு பிரமிப்பளின், எழுத்தை கண்டு அதே பிறர் கண்டு பிரமிப்பது போல, மனப்பாடம் செய்து தக்கவைப்பது கடினம், புரிந்து படித்தால் தக்கவைப்பது எளிது என்பதை போல. அங்கு என்ன செயல்படுகிறது? படைப்பாக்க சுதந்திரம் என்பது என்ன?
மொழியின் வழியாக சொல்கிற போது அதே மொழி வாசிப்பனுபவமாக மாறும் இட்த்தில் வாசகனின் மொழி, அனுபவ வீச்சுடனும், அனுபவத்துடனும் தொடர்புடையதாகிறது. மகாகவி பாரதி சுவிதைகளை எடுத்துக் கொள்வோமே. 10 வயதில் வாசிக்கும் போது உணர்ந்ததையா பதின்ம வயதில் உணர்கிறோம்? அனுபவங்களின் ஊடாக மொழி இன்னொரு தளத்திற்கு ஒவ்வொரு வாசகனையும் அழைத்து செல்கிறது. இதனால தான் மொழி வழியாக காணும் படைப்புகள் பன்முகத் தன்மையுடன் வாசகனின் கைப்பிடிக்குள் அடங்கி விடாமல் விசுவரூபம் எடுக்கின்றன. நேற்று புரியாதது இன்று புரிகிறது. இன்று புரியாதது நாளை புரியும். புரியலாம். புரியாமலும் போய்விடலாம். இது என்னவோ நவீன இலக்கியத்திற்கான கூறாக நினைக்க வேண்டாம். மொழிவழி எண்ணங்கள் வெளிப்படத் தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதாக கருத வேண்டும்.
அதனால்தான் உரையாசிரியர்கள் உருவானார்கள்.
🔥
ஒரு இலக்கியப் படைப்பை , அப்படைப்பிற்கு வெளியிலிருந்து அணுகும் ஒருவனுக்கு அவ்விலக்கிய
படைப்பின் மதிப்புவாய்ந்த, பொருட்படுத்தத்தக்க கூறு என்ன? ஏதோ ஒன்றை காட்டி இலக்கியத்தின் பக்கமாக ஒருவனை திருப்ப முடியுமானால் அது என்னவாக இருக்க முடியும்? திரும்பவில்லையெனில் அதை ஒரு இழப்பு என்று எப்படி கூறுவது? அதை வெறும் ஆர்வத்தின் கைகளில் ஒப்படைத்து விடலாமா?
இதை தீர்மானிப்பது இலக்கிய படைப்பு அல்ல. இதை தீர்மானிப்பு வாசக அனுபவம். ஜெயகாந்தனை சிலருக்கு பிடிக்கும். தி.ஜாவை சிலருக்குப் பிடிக்கும் ஜெமோவை வாசிப்பவர்களுக்கு ஜெ.மோ நான் ஆகச்சிறந்த எழுத்தாளர். இந்த படைப்புலகத்தை தீர்மானிப்பது வாசகனின் ஜனநாயக உரிமையாக இருக்க வேண்டும். கல்கியை வாசித்துவிட்டு தான் லா.ச.ராவை வாசிக்க ஆரம்பிக்கிறோம். இதன் ஆரம்பம் ஆர்வத்தின் கைகளில் இருந்தாலும் அதன்பின் ஆர்வம் தேடலாகி இன்னொரு மாற்றம் பெறுகிறது. வாசகனுக்கும் படைப்பாளிக்கும். இருவருக்குமே. LALIGSSTLE/TS
படைப்பாக்கத்தில் கவிதைக்கும், கதைக்கும், நாவலுக்குமான தனியாக பிரித்தறிந்து பார்க்கக்கூடிய வேறுபாடு என்ன? கவிஞனின் மனம் பிரத்யேகமான முறையில் செயல்படுகிறதா? ஒரு கதையையோ, நாவலையோ விமர்சிக்க அணுகுவதை போல ஒரு சுவிதையை அணுகுவது கடினமாக இருப்பது தெனால்? அங்கு தர்க்கங்களுக்கான சாத்தியம் குறைகிறதா?
கவிதை முழுக்கவும் உணர்வுநிலை சார்ந்த கொதிநிலையின் இன்னொரு வடிவம். அதுவே கவிதைக்கு பன்முகத்தன்மையை கொடுக்கிறது. அதனால் தான் கவிதையை அணுகுவது கடினமாக இருக்கிறது. கவிதை ஒரு மின்னலைப் போல, பட்டென்று கண்களில் திரண்டு விடும் கண்ணீரைப் போல. கவிதை ப்ரியமானவனைக் கண்டவுடன் தோள் அணைத்து முத்தமிட நினைத்து அது இயலாமல் பார்வைகளில் பட்டுத் தெறிக்கும் மொழியின் கீற்று போல தெருவோரத்தில் அழும் குழந்தையின் கண்ணீர் அடிவயிற்றை பிசையும் வலியாக மாறுவது
படைப்பாற்றல் / கற்பனை வளம் / மொழியில் புலமை மற்றும் மொழியை கையாளும் விதம் / வேறுபட்ட பரந்துபட்ட வாழ்வனுபவங்கள் / இடைவிடாத இலக்கிய அறிமுகம் மற்றும் இலக்கிய வாசிப்பு / நடுநிலை மற்றும் தர்க்க அறிவு / சொந்த பண்பாட்டு கலாச்சாரத்தில் வேரூன்றி இருத்தல் / சுயதேடல், கேள்விகள், உரையாடல், அவதானிக்கும் திறன், தேர்ந்தெடுக்கும் திறன், ஞாபகத்திறன் / ஆன்மீக அறிவு / மன ஆரோக்கியம் இவற்றில் அதன் வேறுபட்ட முக்கியத்துவம் அடிப்படையில் வரிசைப்படுத்தச்சொன்னால் எப்படி வரிசைப்படுத்துவீர்கள்? நீக்க வேண்டியதும், சேர்க்க வேண்டியது என்ன?
ஆரோக்கியம் என்பதை நீக்கிவிடுவேன். வேண்டுமானால் மனப்பிறழ்வு என்று இச்சமூகம் சொல்வதை சேர்க்க வேண்டி இருக்கும்!! வரிசைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். வரிசைப்படுத்துவதே படைப்புக்கும், படைப்பாளிக்கும் ஒவ்வாதவை.
ஒரு படைப்பாளியையும், படைப்பாற்றலையும் தற்செயலான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்கிறதா? அல்லது படைப்பாளியும், படைப்பாற்றலும் கடவுளின் அருளைப்போல வருகின்றனவா? சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் என்றால் சகல வசதி வாய்ப்புகளும் அளிக்கப்படுமானால் வேண்டுமாணலும் யார் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள
முடியுமா? கடவுளின் அருள் என்றால் அந்த அருள் தவறவிடப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? அதாவது அந்த அருள் இருந்து ஒருவன் படைப்பாளியாக பரிமளிக்க முடியாமல் போக முடியுமா? அல்லது எவரெல்லாம் படைப்பாளியோ அவருக்கு அது இருக்கிறது எனக்கொள்ளலாமா? அதுதான் அளவுகோல் என்பதை போல.
காளிதாசனுக்கு காளி தேவதை தாம்பூலம் கொடுத்த கதை எல்லாம் படைப்புக்கும் படைப்பாற்றலுக்கும் எவ்வகையிலும் சம்பந்தமில்லாதவை. கடவுள் அருள் போரிலக்கியம் சார்ந்த எழுத்துகளை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தீர்மானிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தியாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை.
படைப்புகள் என்று வந்து விட்டால் சிலவற்றை நிராகரிக்க வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலவற்றை கொண்டாட வேண்டும். சிலவற்றை குப்பை என ஒதுக்க வேண்டும். சிலவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். சிலவற்றை அவற்றின் இடத்தை ஒன்றன் பின் ஒன்றாக உறுதிசெய்ய வேண்டும். தெற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது, எதற்கு இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது என்பது போல. இதை அந்தரங்கமாக நீங்கள் எப்படி செய்கிறீர்கள்? அல்லது இது ஒரு சிக்கலுக்குரியதும், பிரச்சனைக்குரியதும் என விட்டுவிடலாமா?
பொதுவாக கட்டுரையை எழுத வேண்டிய செய்திகளைக் கூட சிலர் கவிதைகளாக்கி அப்படி கவிதையாக எழுதினால் தான் இலக்கிய அந்தஸ்து பெறும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன். அறுபது எழுபது வயதில் பதின்ம வயதின் காதல் கவிதைகளை எழுதுபவர்களை எப்படி யாசிப்பது? அந்த படைப்பாளி கடந்து வந்த அனுபவம் வயது கற்பித்தவை எதுவுமே இல்லாத எழுத்துகள் என்னளவில் காகிதப்பூக்கள் தான். என்னால் அதை எல்லாம் என் வாசிப்புக்கு எடுத்துச் செல்ல முடிவதில்லை. இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இருக்கின்ற 24 மணி நேரத்தில் எதை வாசிக்க வேண்டும். எதை விட்டுவிடலாம் என்பதை அவரவர் அனுபவம் தான் தீர்மானிக்கிறது. நானும் விதிவிலக்கல்ல. இதுவும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கமானது தான், அதை அந்தரங்கமாக செய்து கொண்டிப்பது தான் நல்லது.
நன்றி: கோடுகள் இதழ் 13
13/10/2019 - -15/11/2019ட
#புதியமாதவிநேர்காணல்
#புதியமாதவிபடைப்புகள்
#பெண்ணியம்புதியமாதவி