Thursday, February 16, 2023

பித்துப்பிடித்த பெருநகரம்

 

பெரு நகரம் தூக்கமின்றி தவிக்கிறது..

கண்ணகி நகரப் பேருந்தில்
பெண்களுக்கு இலவசம்.
கிழிந்து சீழ் வடியும் யோனிபீடங்கள்
அதிகாரவெளியின் நாற்றம்.
ஆடைகளின்றி அம்மணமாக
அலைகிறது பெருநகரம்.
கிழிந்து தொங்கும் ஆடைகளுடன்
பித்துப்பிடித்த பெருநகரத்தின்
புதல்வியர்
பிரசவ வலியில் துடிக்கிறார்கள்
வாழ்க வாழ்கவென அலறலுடன்
பிள்ளைகள் பிறக்கின்றன.
திரும்பிப் பார்த்த
லோத்தின் மனைவி
உப்பு சிலையாக சபிக்கப்பட்டாள்.
பெருநகரம் வந்த பெருந்தேவி
மாசாணி அம்மன்
தற்கொலை செய்து கொள்கிறாள்.
சுவரொட்டி மனிதர்களின்
முட்டைகளை அடைகாக்கும்
கோழிப்பண்ணைகள்
பெருநகரத்தின் எதிர்காலம்.
இராட்சதப் பல்லிடுக்குகளில்
தொங்கிக் கொண்டிருக்கும்
தமிழ்த்தேசம்.
துரத்திக்கொண்டே வரும்
அந்த சுவரொட்டி மனிதர்களின்
பொன்னாடைகளைத் தின்று
பசியாறும் கழுதைகள்
உதைக்கின்றன.
பதாகையிலிருந்து
நீண்ட இராட்சதக் குறிகள்
இரவும் பகலும் துரத்துகின்றன.
பெரு நகரம் பித்துப்பிடித்து
அலைகிறது.
காமட்டி புரத்தின் குடிசைகள்
அவள் காயத்திற்கு
மருந்தாக..


#புதியமாதவி_20230217

#puthiyamaadhavi_poems

Friday, February 10, 2023

இலக்கிய நவீன தீண்டாமைகள்

 


இலக்கிய முத்திரையை யார் வைத்திருக்கிறார்கள்?

நவீன தீண்டாமைக்கு ஆயிரம் கரங்கள். ஆயிரம் நாக்குகள். ப்ளீஸ்.🙏🙏

யாரும் வந்து மீசையை முறுக்க வேண்டாம்.😎

நீ இலக்கியவாதியா?

உன் எழுத்துக்கு இலக்கிய அந்தஸ்த்து உண்டா ?

இதை எல்லாம் காலம் காலமாக

யார் தீர்மானிக்கிறார்கள்?

யாரிடம் இருக்கிறது இதற்கான "இலக்கிய முத்திரை?"

தெரியும். 

இதன்வெளி நமக்கெல்லாம் தெரியும்.

ஆனால், 

இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்

ஏன் தயக்கம் காட்டுகிறோம்?!!!

எப்போதும் பார்த்தீர்களா மலையாளத்தில்,

அங்கேதான் இலக்கியம் பாலாறும் தேனாறும் கலந்துப் பாய்கிறது. தமிழ் நாட்டில் கூவம் தான் ஓடுகிறது என்று கூக்குரலிடுபவர்கள், அவர்களில் சிலர் மலையாளம் அறியும் என்றாலும் இன்னும் சிலருக்கு மலையாளமே தாய்மொழி என்றாலும் கூட அவர்கள் “டமிளில்தான்” எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

அது ஏன்?

இப்படியான ஒரு கேள்விக்கு திருப்பத்தூர் இலக்கிய மேடையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளிப்படையாக பதில் சொன்னார். அதற்காக அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.  அதாவது கேரளாவில் இலக்கியம் படைத்தவர்களும்  இடதுசாரி அரசியலும்  சேர்ந்து பயணித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ?!!

மனுஷ்க்கு நன்றி. 


அன்றைய நவீன இலக்கியவாதிகள் முதல் இன்றைய காலச்சுவடுவரை “திராவிட அரசியல் “மீது தீண்டாமை கொண்டவர்கள். 

ஆனால் திராவிட குஞ்சுகளுக்கு தாங்கள் எழுதுவதெல்லாம் “இலக்கியம்தானா” என்ற அடையாளச்சிக்கல் உண்டு. அதற்காக

அவர்கள் காலச்சுவடு முத்திரைக்காக வாசலில் காத்திருந்ததெல்லாம் கடந்து காலம் மட்டுமல்ல.

இந்த இடத்தில்தான் எனக்கு கி.ராவின் நேர்காணல் நினைவுக்கு வருகிறது. 

“திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்காலக்கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் 

துரதிர்ஷ்டம்தான். ஆனால் திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது.” சமஸ். (மாபெரும் தமிழ்க்கனவு பக்270)

கி.ரா இக்கேள்வியின் பின்னணியை ஒத்துக்கொள்கிறார்.

“நாங்க பண்ணின தப்பு இதை வெளியே பேசாம இருந்த து…அதுக்கு காரணம் இருந்துச்சு… சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் (கிராவும் கு அழகிரிசாமியும்)

இல்லை. சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை” (மாபெரும் தமிழ்க்கனவு . பக் 271) 

இப்போதும் இதெல்லாம் மாறிவிட்டதா என்ன? 

இல்லை.

நவீன தீண்டாமைக்கு ஆயிரம் கரங்கள்.

நவீன தீண்டாமை இலக்கியத்திற்கும் ஆயிரம் நாக்குகள்.

திராவிட அரசியல்  விருப்பம்போல விருதுகளை அள்ளிக்கொடுப்பதாலோ

அல்லது கனவு இல்லங்களை அவர்களுக்கு கட்டிக்கொடுப்பதலோ

இதை எல்லாம் மாற்றிவிட முடியாது. முடியவில்லை.

இதன் வெளிப்பாடுகளாக சிலர் எதையாவது சொல்லும்போது

ஆ ஓனு கத்துவதால் எதுவும் ஆகாது.

சரவணா..

இதில யாரும் மீசையை முறுக்க வேண்டாம்.


#புதியமாதவி_20230211_திராவிடஅரசியல்


#puthiyamaadhavi_dravidianpolitics_literature


Monday, February 6, 2023

நிலம் பெண்ணுடல்

 நிலம் பெண்ணுடல்



இரண்டும் இணைகோடுகள். எப்போதுமே சேர்வதில்லை.
வாழ்க்கைப் பயணம் இணையாத இந்தக் கோடுகளில்
சீராக பயணிக்கும்படி சமூகம் திட்டமிட்டிருக்கிறது.
தலைவன் தலைவி காதலைக் கொண்டாடும்
சங்க இலக்கியத்தில் தலைவி தன் பிரிவைப் பாடும்
போதெல்லாம் தலைவனின் நிலமும் அந்த நிலத்திற்கான
கருப்பொருளான மரம் செடி கொடி மலர் நதி ஊர்வன
பறப்பன எல்லாமும் வந்துப்போகும்.
காரணம் இதெல்லாம் தலைவனுக்குரிமை உடையவை.
அவனுக்கான அடையாளங்கள்.
பெண்ணுக்கு அதாவது தலைவிக்கு இதெல்லாம்
பெரிய்ய அடையாளம் கிடையாது.
பெண்ணுரிமையை உரக்கப்பேசியதாக நாம் நம்பும்
மகாகவி பாரதியும்
“தந்தையர் நாடென்ற போதினிலே..
ஒரு சக்திப் பிறக்குது மூச்சினிலே”
என்று தாய் நாட்டை “தந்தையர் நாடாக” சொல்வதன்
உட்பொருள் என்ன?
அப்படி சொல்லும்போது
ஏன் , எதற்காக சக்தி பிறக்கிறதாம்??????!!!
அவன் பிரிந்துவிட்டால்
அவளுக்குத்தான் பசலை வரும். வந்தாகனும் .!
அவனில்லாமல் அவள் விருந்தோம்பல்
இழந்துவிட்டதற்காக வருத்தப்படுவளாம்!
என்ன ஒரு கொடூரமான சமூக மரபு.
கேவலமான உட்பொருள் கொண்டது. !
அவள் தான் உருகி உருகி… கரைந்துப்போவாள்.
அதை அப்படியே இன்றுவரை ..
(நான் உட்பட..) கடைப்பிடிக்கிறோம்.
காரணம் அவன் தான் பெண்ணுக்கு வாழ்க்கை
நாங்களும் விடுபடவில்லை!!
காரணம் இன்றுவரை வாழ்க்கை என்பதன் அடையாளத்தையே
அவனோடு மட்டுமே இணைத்திருப்பதால்தான்!
அண்மையில் திருப்பத்தூர் இலக்கிய நிகழ்வில்
பாலைத்திணையில் ஒரு பெண்ணைக்கொண்டு போய்
தெய்வமாக நிறுத்தி இருக்கும்
தமிழர் வாழ்வியலைச் சுட்டிக் காட்டினேன்.
அப்போது கேள்வி நேரத்தின்போது ஒரு பெண்,
பெண்கள் பலசாலிகள், அவர்களால்தான் பாலையிலும்
தன் குடியைக் காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.
அதை நான் ரசித்தேன். எனினும் அப்போது சொன்னேன்,
விவசாயக்கடனில் தற்கொலை செய்து கொண்டவன் ஆண்.
ஒரு பெண் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை.
கோட்டா நீலிமாவின் The shoes of dead நாவலைக்
குறிப்பிட்டேன். ஆனால் இப்படியே பேசி
நம்மையும் நம்ப வைத்திருக்கிறார்கள்.
என்றைக்கு குறிஞ்சி மருதம்
முல்லை நெய்தலின் உரிமையில்
பெண்ணுக்கும் சம்பங்களிப்புண்டு
என்று சொல்லப்போகிறார்கள்.??
நாம் இனி, அரசு அதிகாரத்தில்
பெண்ணுக்கான இட த்தை,
அவளுக்கான உரிமையைக் கேட்கிறோம்
என்று பதிலுரைத்தேன்.
நிலம் அதிகாரத்தின் அடையாளம்.
பெண்ணை நிலமாக உருவகித்ததெல்லாம் போதும்.
அதனால் எல்லாம் ஒரு காணி நிலம் கூட
பெண்ணுக்கு கிடைத்துவிடவில்லை.
உருவகங்களில் படிமங்களின் கட்டமைப்பில்
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான்
எங்கள் இடத்தை உங்கள் மொழி சிறைப்படுத்தி
வைத்திருக்கும்?!


Saturday, February 4, 2023

சைத்யபூமி விமர்சனம்


       
           

அண்ணல்அம்பேத்கர்        வாழ்ந்தமராட்டியபூமிதான்சைத்யபூமி. சைத்யம்என்பதுமகாபரிநிர்வாணநினைவிடத்தைக்குறிக்கும். அம்பேத்கர்தகனம்செய்யப்பட்டமும்பைதாதர்கடற்கரையில்அவரதுநினைவிடம் 5.12. 1971 அன்றுஅமைக்கப்பட்டது. அங்குஒருபௌத்தசைத்யமும், மண்டபத்துடன்கூடியதியானப்பகுதியும்உண்டு. அங்குஏதோஒன்றுகுறைவதைநிவர்த்திசெய்வதுபோல்உள்ளது 'சைத்யபூமி' நூலின்மேலட்டை. அம்பேத்கரின்எழுத்தாளுமையைநினைவுகூறும்ஒருபடமும், அவரதுஅறிவாற்றலைவணங்கிஉருகும்தன்னையும் (மீரா) மேல்அட்டையில்பதித்திருக்கிறார்புதியமாதவி. நூல்உருவாக்கத்தில்துணைபுரிந்தஎழுத்தாளரும், தலித்பேந்தர்அமைப்பின்நிறுவனர்களுள்ஒருவருமானஅர்ஜுன்டாங்ளேஅவர்களுக்குநூலைக்காணிக்கைஆக்கிஇருக்கிறார். அண்ணல்அம்பேத்கரைமுன்வைத்துமராட்டியச்சமூகவெளியை, அதன்சமகாலஅரசியலை, வரலாற்றுப்பின்புலத்துடன்அறிவுக்கொடைஅளித்திருக்கிறார்புதியமாதவி.

 

 

சாதியால்கட்டமைக்கப்பட்டஇந்தியசமுதாயத்தின்அடிப்படைக்களம்மராட்டியம். பார்ப்பனியமேலாதிக்கமும், இந்துத்துவஅரசியலும்இங்குதான்களம்கண்டன. அவைபுதியசமூகத்திற்கானதேசத்தைக்கட்டமைக்காமல், இந்துமதஅடையாளத்தைஇந்தியதேசியமாகவளர்த்தெடுத்தன. "இந்தியவிடுதலைஎன்பதுஇந்துதேசவிடுதலை" என்பதாகவேதிலகரின்விடுதலைப்பயணம்அமைந்திருந்தது. மகாத்மாஜோதிராவ்ஃபுலேயின்பார்ப்பனர்அல்லாதகூட்டமைப்புஉருவானஇடமும்இதுதான். ஆகப்பெரும்தொழிற்புரட்சி, இருபதாம்நூற்றாண்டின்மாபெரும்மதமாற்றம்ஆகியவைநிகழ்ந்தகளமாகமராட்டியத்தைப்படம்பிடிக்கிறார்புதியமாதவி. பேஷ்வாக்கள்காலத்தில்சொந்தநிலத்தைஇழந்துகூலிவேலைசெய்யும்கிராமத்தின்ஒட்டுமொத்தமகர்களுக்கும்வழங்கப்படும் 'மகர்வாட்டன்'; தமிழ்நாடுபோலவேபத்தாம்நூற்றாண்டுப்பக்திஇலக்கியகாலத்தில்ஒடுக்கப்பட்டோர்நிலம்பறிக்கப்பட்டதை 'வினைப்பயன்' என்றுவருந்திப்பாடிய 'சொக்கமேளா' காலத்துப்பக்திதலித்தியத்தைஇருபதாம்நூற்றாண்டில்கடந்துவந்துவிட்டநவீனதலித்தியம்; இந்நிலைக்குஇடைக்காலத்தில்வந்தகிறித்துவமிஷனரிகளின்பேருதவி; இந்துமதச்சடங்குகளின்மூடநம்பிக்கைகளைவெட்டவெளிச்சமாக்கி, அனைவருக்கும்கல்வியைக்கொண்டுசென்றகிருத்துவமதச்சேவைநிறுவனங்கள்என்றுமராட்டியத்தின்பாரம்பரியத்தைவிளக்கியுள்ளார்.

 

ஜோதிராவ்ஃபுலேயின்குரலும், இயக்கமும்இந்தப்பின்புலத்தில்முக்கியமானவை. 1873 ஆம்ஆண்டில்எழுதிய 'அடிமைத்தனம்' நூலில்அமெரிக்கக்கறுப்பினமக்களையும்

அமெரிக்கக் கறுப்பின மக்களையும், இந்தியாவின் சூத்திரர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒப்புமைப்படுத்தி எழுதினார் ஃபுலே. பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரங்களிலிருந்து விலகி, "சத்திய சோதக் சமாஜ் (உண்மை அறியும் சங்கம்)" என்ற சமூகச் சீர்திருத்த அமைப்பை 1873 இல் நிறுவினார். கொல்காபூர் பகுதியை ஆண்ட மன்னர் சாகு மகராஜ், சத்திய சோதக் சமாஜ் முன்னோடிகளுள் முக்கியமானவர். பல்வேறு சமூகச் சீர்திருத்தங்களைச் சட்டமாக்கிய முதல் இந்திய மன்னர். அனைவருக்கும் கல்வி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், (சென்னை மாகாணம் நினைவுக்கு வந்தாலும் இது அதற்கும் முற்பட்ட மராட்டிய வரலாறு) பார்ப்பனரில்லாத திருமணங்கள், ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகிய சீர்திருத்தங்களைச் சாகு மகராஜ் கொண்டு வந்தார். ஜோதிராவ் துணை நின்றார். இதே போன்ற சீர்திருத்தவாதிகள் கோபால்நக் விதல்நக் வலன்கர், சிவராம் ஜான்பா காம்ப்ளே, கிசான் பகோஜி பன்கோடே, "எரியட்டும் பார்ப்பனிய வேதங்கள்" என்ற முத்தாய்ப்புடன் முடியும் கவிதை எழுதிய கோண்டிராம், பக்தி இலக்கியக் காலத்துப் பாவலர் சொக்கமேளா என்று பலரையும் விரிந்த அளவில் அறிமுகம் செய்திருக்கும் புதியமாதவி, காந்தியம், அதற்கு எதிராக எழுந்த இந்து மகாசபை, இந்த இரண்டுக்கும் எதிராக எழுந்த தலித்தியம் என்று சுருக்கமான முத்தாய்ப்பும் வைக்கிறார்

 

உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் யூனியன்களில் நிலவிய தீண்டாமை, உழைக்கும் வர்க்கத்தை அரசியல் ரீதியாகப் பிளவுபடுத்தியது. (உலகத் தொழிலாளர்கள் எப்படி ஒன்றுபடுவது?) கல்வியறிவு பெற்றால் சாதியும், தீண்டாமையும் ஒழிந்து விடும் என்று பலரும் நம்பத்தான் செய்தார்கள். கல்வி கற்ற பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியும், கல்வி கற்ற பிற சாதியினர் பார்ப்பனியத்துக்கு அடிமையாக மாறுவதும், கல்வி மீதிருக்கும் நம்பிக்கையை உடைக்கும் விதமாகி விடாதா? ஆனால் அண்ணல் அம்பேத்கர் கற்ற கல்வி, அதன் வழி அவர் நடத்திய ஆய்வுகள் கல்வி மீது நம்பிக்கையை ஏற்படுத்தின. 'மகத் சத்தியாகிரகம்', மனுதர்ம எதிர்ப்பு வரை சென்றது. 'இந்துவாகச் சாக மாட்டேன்' என்ற அறிவிப்பு, இறுதியில் மதமாற்ற வெற்றியாகியது. இதற்காக அண்ணல் அம்பேத்கர் திரும்பிய திசை எல்லாம் எதிர்ப்பு இருந்த காலத்தில், தமிழ்நாட்டில் இருந்து தந்தை பெரியார் ஒருவரே மதமாற்றத்தை ஆதரித்தவர்.

 

திராவிடம் என்பது தெற்குப் பகுதி. (தக்ஷிணம், தெக்கணம், தென்னிந்தியா, டெக்கான்). பஞ்ச திராவிடம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் மராட்டியமும், கூர்சரமும் (குஜராத்) இருந்தன. அதனால் திராவிட அரசியல் தொடங்கிய இடம் மராட்டியம். தொடக்கி வைத்தவர் வீரசிவாஜி. அவருக்குப் பின் மகாத்மா ஜோதிராவ் ஃபுலே. சமூகநீதியைச் சொல்லிலும், செயலிலும் விரித்தவர். பண்டிதர் அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற பல சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ஜோதிராவ் ஃபுலே. இவையெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு நாம் அறிந்த செய்திகள் தான். இதற்கும் மேலே சென்று, "இந்தியா முழுமையும் பரவி விரிந்து மக்கள் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் திராவிட மெய்யியல் கருத்துகள்தான். இந்திய நாகரீகத்தின் ஆரியப் போர்வையை நீக்கினால் அதன் அடித்தளமாக இருப்பது திராவிட நாகரிகம் தான்" என்று வரலாறின் சாரத்தைப் பிழிந்து தருகிறார் புதிய மாதவி. இதற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பது மராட்டியத்திற்குப் புலம்பெயர்ந்த வாழ்க்கை தான். இப்படிப் புலம்பெயர்ந்த மக்களின் உழைப்பால் வாழ்விடமாக மாறிய மும்பையின் பகுதியே தாராவி. அப்படிப் புலம் பெயர்ந்தவர்களில் புதிய மாதவியின் கொள்ளுத் தாத்தாவும் ஒருவர். மகாத்மா ஜோதிராவ் ஃபுலேவின் 'எல்லோருக்கும் கல்வி' என்ற குரலுக்குச் செவி சாய்த்தவர் அவர். தாராவித் தமிழர்களின் தலைவராக, உழைக்கும் வர்க்கத்தினரின் குழந்தைகள் கல்வி கற்க முதன் முதலில் பள்ளிக்கூடம் தொடங்கியவர். "இதுவரை மறுக்கப்பட்டிருந்த சமூக நீதியைப் பெறுவதற்கு ஆங்கிலேய ஆட்சிதான் உதவியது" என்று நம்பிய அவர் தொடங்கிய பள்ளிகள்தான் பிற்காலத்தில் மும்பையின் நகராட்சிப் பள்ளிகளாக மாறின என்ற 'நாடெங்கும் பாய்ந்த கல்வி நீரோடை' வரலாறு நம்மைச் சிலர்க்க வைக்கிறது.

 

அண்ணல் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவுடன் பம்பாய் பரேலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 114 நிறுவனங்களின் சார்பில் வரவேற்புப் பட்டயம் ஒன்று வாசித்தளிக்கப்பட்டது. அந்நிறுவனங்களில் ஒன்று தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் 1927 ஆம் ஆண்டு தொடங்கிய "தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சபை". இதன் கிளையான "தென்னிந்திய ஆதிதிராவிடர் வாலிபர் கழகம்" என்பது 1.7. 1936 அன்று பம்பாயில் நிறுவப்பட்டது. இக்கழகத்தின் சின்னமாகத் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற இலச்சினை உள்ளது. 1938 ஆம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் ஏந்திய "தமிழ்நாடு தமிழருக்கே" முழக்கக் கொடி, பம்பாயில் தொடங்கப்பட்ட தென்னிந்திய ஆதிதிராவிடர் வாலிபர் கழகத்தின் இலட்சினையாக இருந்திருக்கிறது என்னும் தொலைந்து போன வரலாறை ஆவணமாக்கி இருக்கிறார் புதிய மாதவி. இப்படியாகத் தொடங்கப்பட்ட மும்பைத் தமிழர்கள் அரசியல் வாழ்க்கையின் தொடக்கமான அதே கழகம், தற்போது கணபதி கோவில் அறங்காவலர் குழுவாகிப் போனதையும், அங்கிருந்த ஆவணங்கள் கரையானுக்கு இரையாகிப் போனதையும் புதிய மாதவி மூலம் அறிந்தபின் காற்றில் பெருமூச்சு இழையோடுகிறது.

 

மராட்டிய திராவிடம், இந்துத்துவமாக மாறிவரும் நீட்சியாக, மும்பையில் இந்து - முஸ்லிம் கலவரம் வந்தால் தமிழர்கள் 'இந்துக்களாக'ச் சிவசேனை இயக்கத்தாராலேயே பாதுகாக்கப் படுகிறார்கள் என்ற அரசியல் நம்மைத் திகைக்க வைக்கிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு என்று வந்தால் தமிழன் "சாலா மதராசி"தான். தலித் என்ற அடையாளம் கூடத் தமிழன் என்று அடையாளத்தில் காணாமல் போய்விடுகிறது. தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்கள், மும்பை மண்ணில், வெறும் காகிதக் குப்பைகள்தான். இதற்கான போராட்டங்கள் வெற்று விழாக்களாகவும், வீர வசனங்களாகவும் முடிந்து போயின. "இவர்கள் தமிழ்நாட்டின் அரசியலை இங்கிருந்து கொண்டு பேசிப் பேசி அதில் ஒரு சுகம் கண்டு கொண்டிருக்கிறார்கள்" என்னும் நடைமுறை உண்மையை மிக நாசூக்கான மொழியில் தெரிவிக்கிறார் புதியமாதவி. மும்பை ரசிகர் மன்றங்களும் சளைத்தவை அல்ல. தமிழ்நாட்டை அப்படியே நகல் எடுத்தது போல் கட் அவுட், பாலாபிஷேகம் என்று ஆர்ப்பரித்து, எதிர்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கும் போக்கைத் தமிழர்களின் சாபக்கேடாகக் கருதுகிறார் புதியமாதவி.

 

'சத்ரபதி சிவாஜியும் இந்துத்துவா அரசியலும்' கட்டுரை நாம் அறிந்தும் அறியாத ஒன்று. வீரசிவாஜியாக இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டும், அதே நேரம் கட்டுப்படாமல் பொங்கிய தருணங்களும் அவரது வரலாற்றில் உண்டு. அந்த வரலாறு இன்று ஏற்கப்படுகிறதா அல்லது வளைத்துத் திரிக்கப்படுகிறதா? வீரமும், விவேகமும் நிறைந்த சிவாஜி இன்று இந்துத்துவச் சிமிழுக்குள் அடைக்கப்பட்டு விட்டது தற்கால அரசியல். ஆனால் ஆய்வாளர்களின் கருத்தில் சிவாஜி மதமற்றவர், மனு தர்மத்திற்கு எதிராகத் தன் அமைச்சர் குழுவை மக்களாட்சி முறையில் ஏற்படுத்திக் கொண்டவர் என்று தான் உருக்கொள்கிறார். சிவாஜியின் படையில், மராட்டிய தலித்துகள் ஆன மகர் இனத்தவர் போர் வீரர்களாகச் சேர்க்கப்பட்டது; கஜானாவில் இருந்து பணம் கொண்டு செல்லும் நம்பிக்கைக்குரிய பணிகளில் மகர்கள் ஈடுபடுத்தப்பட்டது; சிவாஜிக்குப் பிறகு அவரது மகன் சாம்பாஜி 1689 ஆம் ஆண்டில் ஔரங்கசீப் படையால் கொல்லப்பட்டது; ஆற்றில் வெட்டி வீசி எறியப்பட்ட சாம்பாஜியின் உடல் சிதைவுகளை, கோவிந்த் கோபால் கெய்க்வாட் என்ற மகர் இனத்தவர் தேடிக் கொணர்ந்து இறுதிச்சடங்குகள் செய்தது; இதனால் கோபமுற்ற அவுரங்கசீப் படைகள் கோவிந்த் கோபாலுடன் ஐம்பது மகர்களுக்கு மேலும் கொலை செய்தது; சாம்பாஜி மன்னர் சமாதி அருகில் கோவிந்த் கோபாலின் சமாதியும் அமைக்கப்பட்டு இருப்பது; கோவிந்துடன் கொலை செய்யப்பட்ட மகர்களின் சிலைகளும் கோவிந்த் சமாதி அருகே நிறுவப்பட்டிருப்பது இவையெல்லாம் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவியவர் மன்னர் சிவாஜி என்னும் பிம்பத்தைச் சீர்குலைத்து, சிவாஜியை சனாதனத்துக்கு எதிரானவராகக் கட்டமைக்கின்றன

 

 

 

சிவாஜிக்குப் பின் ஏற்பட்ட பார்ப்பன பேஷ்வாக்கள் ஆட்சியில் மகர் இனத்தவருக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டன. ஆங்கிலேயர் - பேஷ்வாக்கள் போரில் ஆங்கிலப்படையில் இருந்த மகர்களின் வீரம் பேஷ்வாக்களைச் சிதறி ஓடச் செய்தது. இந்த வெற்றியும், போரில் உயிரிழந்த மக்களின் தியாகமும் "பீமா கோரேகாவ்ம்" வெற்றித் தூணாக உயர்ந்து நிற்கிறது. 1927 ஆம் ஆண்டு இந்த வெற்றித் தூணுக்கு வந்து வீரவணக்கம் செலுத்தினார் அண்ணல் அம்பேத்கர். தொடர்ந்து வட்டமேசை மாநாட்டில் இரட்டை வாக்குரிமை கோரிக்கைக்கு ஆதரவு கோரும் காரணங்களில் ஒன்றாக, "மகர்களின் தியாகம் இன்றி ஆங்கிலப் பேரரசு மராட்டியத்தில் நிலை பெற்றிருக்காது" என்பதையும் சுட்டிக்காட்டினார். இதெல்லாம் கூடப் பிரச்சனை இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் வீரமும், விவேகமும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக இருப்பதைத்தான் இந்துத்துவ வாதிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை

 

விட்டு விடுமா இந்துத்துவச் சனாதனம்? சிவாஜியின் மதச்சார்பற்ற முகத்தைத் தன் ஆய்வின் வழி அம்பலப் படுத்தியதற்காக "யார் சிவாஜி?" என்னும் ஆவண ஆய்வு நூலை எழுதிய கோவிந்த் பன்சாரை 2015 ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றனர். சிவாஜியை சூத்திர அரசராகவும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகவும் முன்வைத்து மகாத்மா ஜோதிராவ் ஃபுலே எழுதிய "சிவாஜி போவடா" என்னும் கூத்துக் கலை வடிவ நூலும் கண்டு கொள்ளப்படவில்லை. ('போவடா' என்பது தலைவனின் வீரத்தைப் பாடும் கூத்துக்கலை. தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகையைப் போன்றது). பிறகென்ன? சிவாஜி - ஔரங்கசீப் வரலாறை வளைத்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து சாம்ராஜ்ய சிவாஜியைக் கட்டமைத்ததில் இந்துத்துவ அரசியல் வெற்றி பெற்று இருக்கிறது என்று பிரமிப்பான ஒரு தெளிவை ஏற்படுத்துகிறார் புதிய மாதவி. "பீமா கோரேகாவ்ம்" வெற்றித் தூண் நிறுவப்பட்ட இருநூறாவது ஆண்டான 2018 ஆம் ஆண்டில் மும்பையில் பெருங் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். சுவடுகளை அழிக்கிறார்கள். சமாதியைச் சிதைக்கிறார்கள். வரலாற்றுப் பக்கங்களை எரிக்கிறார்கள் என்று கலங்க வைக்கும் புதிய மாதவி வரலாற்றில் மறைக்கப்பட்டு வரும் பக்கங்களுக்கு இந்நூல் வழி உயிர் கொடுத்திருக்கிறார்.

 

அறிஞர் அண்ணாவைக் கவர்ந்தவர்களில் மராட்டிய சிவாஜியும் ஒருவர். சூத்திரனாக அடையாளப் படுத்தப்பட்ட சிவாஜி, பார்ப்பனர் எதிர்ப்பை மீறியும் தன் முயற்சியால் சக்கரவர்த்தியானது அண்ணாவைக் கட்டாயம் மராட்டிய சிவாஜி நோக்கித் திருப்பி இருக்கும் என்கிறார் புதிய மாதவி. மேலும் அண்ணாவின் உள்ளம் சிவாஜியைத் திராவிட அரசனாகவும் பார்க்கிறது. அதனால் சிவாஜியின் வரலாறை எடுத்துக்கொண்டு, அதில் திராவிட அரசியலை முழுவதும் பதிய வைத்து, "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" என்ற நாடகத்தைச் சென்னையில் தந்தை பெரியார் தலைமையில் அரங்கேற்றினார் அண்ணா. அதில் வீரசிவாஜியாக நடித்தவர், இன்றில்லை என்றாலும், இன்று வரை சிவாஜியாகவே அறியப்படுகிறார். இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அண்ணா உலக நாடக மேதைகளுள் ஒருவராக ஆகியிருப்பார். இந் நாடகத்தில் வீர சிவாஜி அண்ணாவின் சிவாஜியாக மாறுகிறார். அந்த சிவாஜி பேசுவது திராவிட மெய்யியல். திராவிட சமூக அரசியல். "மனிதன் கற்பித்துக் கொண்ட மதம், கடவுள் நம்பிக்கைகள் திராவிட இன ஒற்றுமைக்கு எதிராக இருக்கக் கூடாது. தமிழரின் வாழ்வில் இந்த வேற்றுமைக்கு இடமில்லை என்பதே அண்ணாவின் திராவிட அரசியலாக இருக்கிறது" என்கிறார் புதியமாதவி.

 

1940 ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் பம்பாய் வருகையின் போது அண்ணல் அம்பேத்கருக்கும், முகம்மதலி ஜின்னாவிற்கும் அறிஞர் அண்ணாவை அறிமுகப்படுத்துகிறார் பெரியார். அம்பேத்கரும், ஜின்னாவும் அளித்த விருந்துக்குப் பிறகு தராவியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் தன் தலைமை உரையில், "பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடி வரும் ஒப்பற்ற தலைவர் (பெரியார்) பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பதைச் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாக"க் குறிப்பிட்டார். அம்பேத்கரின் ஆங்கிலப் பேச்சைத் தமிழிலும், பெரியாரின் தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தவர் அண்ணா. மராட்டிய மண்ணில் கால் பதித்தது அண்ணாவுக்குச் சில ஈர்ப்புகளைக் கொண்டு வந்திருக்கக் கூடும். அதன் விளைவுகளில் சில குறிப்பிடத்தக்கவை

 

  • 1.சூத்திர மன்னனான மராட்டிய சிவாஜியின் வரலாற்று நாடகத்தில் திராவிட அரசியலை இழைய விட்டது

 

  • 2.புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மும்பையில் கூலி வேலை செய்வதும், தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வந்த பனியாக்கள் பண முதலைகளாக உருவெடுத்து இருப்பதுமான பொருளியல் அரசியலை "பணத்தோட்டம்" என்னும் நூல் வழி வெளிப்படுத்தியது

 

  • 3.கோவா விடுதலைக்குப் போராடிய மோகன் ரானடேவின் விடுதலைக்காகப் போப் ஆண்டவரிடம் கோரிக்கை வைத்து, போர்ச்சுகல், லிஸ்பன் சிறையில் இருந்த ரானடேவை விடுதலை அடைய வைத்தது

 

இவற்றையெல்லாம் மராட்டிய மண்ணின் தமிழ்நாட்டுப் பார்வையாளராக உள்வாங்கிப் பின்னர் தன் எழுத்தில் விவரிக்கும் புதியமாதவி, "தமிழர் அல்லாத சரித்திர நாயகனின் வரலாற்றை எடுத்துக் கொண்டு அதில் திராவிட அரசியலைப் பேசியது அண்ணா செய்த புதுமை" என்கிறார். "பணத்தோட்டம் நூலில் அண்ணா சொன்னதுதான் நடந்திருக்கிறது. இந்தியா அம்பானி, அதானி கைகளில் புதிய முதலாளித்துவ ஜனநாயகமாக இருக்கிறது" என்கிறார். "கோவா விடுதலை வீரர் ரானடேவை விடுதலை செய்தது வரலாறில் நேரு, வாஜ்பாய் போன்றவர்களாலும் செய்ய முடியாத காரியம்" என்றும் புதிய மாதவி வியந்திருக்கிறார். இதுவரை திராவிட இயக்க இதழ்கள் கூட இவற்றை இத்தனை விரிவாகப் பதிவு செய்யவில்லை. அது மட்டுமல்ல, அண்ணாவின் திராவிட நாடு கோரிக்கை பிரிவினை வாதம் அல்ல என்கிறார் புதிய மாதவி. "சுதந்திரப் போராட்ட வீரர்களை வடக்கும், தெற்குமாக அண்ணா பிரிக்கவில்லை. தமிழன் என்றும் மராட்டி என்றும் பார்க்கவில்லை. போராளிகள் என்றும் போராளிகள்தான். அண்ணாவின் அரசியலும், அவர் முன்வைத்த திராவிடக் கோட்பாடும் பிரிவினைக்கு அப்பாற்பட்ட துணை தேசிய அரசியல். இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி அரசியலாக அனைவரையும் அரவணைத்துக் கொள்கிறது" என்று தேர்ந்தவொரு அரசியல் அவதானியாகக் கருத்திடுகிறார் புதிய மாதவி.

 

சிவசேனாவின் இந்துத்துவ அரசியல் தமிழர்களை வைத்தே தொடங்கி உள்ளது. சிவசேனாவின் முதல் அறிக்கை மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகத் தென்னிந்தியர்களை நிறுத்தியது. மராட்டிய இளைஞர்கள் தென்னிந்தியர்களைத்தான் தங்கள் முதல் எதிரியாக நினைத்தார்கள். பால் தாக்கரே, வரதா பாய், ஹாஜி மஸ்தான், தாராவி, மாதுங்கா, கணபதி விழா, லுங்கி அடாவ், அம்ச்சி மும்பை, சால் மதராசி, தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு எதிரொலி, தமிழ்நாட்டில் இந்தித் திரைப்படங்களுக்குத் தடை, மராட்டியத்தில் தமிழ்ப் படங்களுக்குத் தடை என்றெல்லாம் போராட்ட முகமாக இருந்த தமிழ் - மராட்டிய அரசியல், இந்துத்துவ அரசியலால் இன்று மதராசிகளையும் சிவசேனைக் கட்சிப் பிரமுகர்களாக ஆக்கி இருக்கிறது. வாக்கு அரசியலின் நெளிவு, சுளிவுகளால் இன்றைய சிவசேனை இளைஞர் தலைவர் தன் தொகுதியில் உருது பேசுகிறார். என்றாலும், மராட்டிய அரசியல் தளத்தில் "இந்து, இந்தி, இந்து தேசம்" என்பவைதான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. காலனி ஆட்சியின் போது வெள்ளையரின் மேற்கத்திய நாகரிகத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராகவும், மாற்றாகவும் ஆரிய நாகரீகத்தையும், ஆரிய தேசத்தையும் முன் வைத்தனர். தேசியவாதிகளின் இப்போக்கு அவர்களின் தாய் மொழிக்கு எதிராகவும் திசை திரும்பி விடும் என்று அன்றைக்கு அவர்கள் அறிந்திருந்தார்களா? தெரியவில்லை! ஆனால் இன்று 5000 மராத்தி அரசு பள்ளிகளை மாணவர்கள் சேர்க்கை இன்மைக் காரணமாக இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது மராத்திய அரசு. வருங்காலத் தலைமுறைக்குத் தாய்மொழி தெரியாது அந்த அளவுக்கு இந்தியைப் புகுத்தி வெற்றி கண்டு விட்டனர் இந்தியவாதிகள் என்னும் மராட்டியத்தின் நீண்ட வரலாறைத் தமிழ் நாட்டிற்குத் தாரை வார்த்திருக்கிறார் புதிய மாதவி.

 

'ஜல்ஷா' என்ற கட்டுரைக்காகவே புதிய மாதவிக்குப் 'பண்பாட்டுப் பரிமாற்ற விருது' (இருப்பின்) இந்திய, மராட்டிய, தமிழ்நாடு அரசாங்கங்களால் வழங்கப்பட வேண்டும். ஜல்ஷா என்பது நாட்டிய நாடகம் போல ஒரு பொழுதுபோக்குக் கலை வடிவம். 'ஷாகிரி', 'போவடா', 'லவானி', 'தமாஷா', 'ஜல்ஷா' என்று மாறி வந்துள்ள கூத்துக்கலை. தமிழின் சங்க இலக்கியப் பாணர்களைச் சுட்டுவது போலத் தற்கால மராட்டியப் பாணர்கள். பாட்டும் இசையும் உழைக்கும் மக்களின் உயிரில் கலந்திருப்பதால் ஒடுக்கப்பட்ட மக்களின் கலையாக என்றும் நிலை பெற்றிருக்கின்றன. ஆதிக்கச் சக்திகளை மகிழ்விக்க ஆடிப் பாடிய வரலாற்றுப் பின்புலங்களும் உண்டு. இவற்றுடன் மகாத்மா ஜோதிராவ் ஃபுலேயின் சத்யசோதக் சமாஜ், 'ஜல்ஷா' கலையைக் கையாண்டு அதைப் பரப்பிய செய்தி; பார்ப்பானாகப் பிறந்து 'ஜல்ஷா'வில் இறங்கி மகர் இனப் பெண்ணோடு சேர்ந்து வாழ்ந்தாலும் "அவள் பார்ப்பனத்தி ஆக முடியாது ஆனால் தான் மகர் ஆகலாம்" என்று சாதிமாற்றம் கூடப் பார்ப்பனர்களுக்கே உரியது என்று நிறுவிய தமாஷா கலைஞர் பதே பாபுராவ், 'கலைஞனுக்குச் சாதி கிடையாது' என்று கூறிய பம்மாத்துக் கதை; மகத் ஆலய நுழைவுப் போராட்டத்திற்குப் பதே பாபுராவ் கலை நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய பணத்தை அம்பேத்கர் கோபத்துடன் நிராகரித்த நிகழ்வு; ஆனாலும் ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரையும், மௌனத்தையும் உரிமைக் குரலாக இந்தக் கருப்பினக் கலை வழி எழுப்பிட முடியும் என்று களமாடிய கந்தக் பீம்ராவ், சோனவானேவின் ஜல்ஷாக்களை அம்பேத்கர் பார்த்து ரசித்த செய்திகள் ஆகிய இவற்றை நிகழ்கலைக் காட்சிகளாக்குகிறார் புதியமாதவி. இப்படிப்பட்ட ஜல்ஷா மேடைகள் "இந்துக் கோட்டையின் சாதி அதிகாரத்தை, ஆட்சியை ஊர் ஊராகச் சென்று களமிறங்கித் தாக்கி அடித்து நொறுக்கின என்ற வரலாறு; இவற்றை ஏற்றுக்கொள்ளாத உயர் வர்க்கம் குறித்து ராட்சத எந்திரத்தின் பல் இடுக்குகளில் சிக்கிச் சிதையும் தருணத்தில் பெண் ராகத்துடன் அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது போலவே தலித்திய நாடகத்தில் அவர்கள் தேடும் அழகியல்" என்ற விமர்சனம் ஆகியவற்றையெல்லாம் ஒவ்வொரு கட்டுரையிலும் பிரம்மாண்டமான காட்சிப் படமாக விரிக்கிறார் புதியமாதவி. இக்கட்டுரையை 'ஜல்ஷா உறை' (Jalsha capsule) என்று கூற முடியும்.

 

 

ஆதிக்கச் சக்திகளை மகிழ்விக்க ஆடிப் பாடும் பெண் கலைஞர்கள் ஆதிக்கத்தின் கோரப் பற்களுக்கு இரையாவது என்பது வரலாறு முழுவதும் இடம் பெறும் செய்தி. அதனால் இக்கலைகள் சார்ந்த பெண்களுக்கு வேறு வேறு சாதிகள் வழி பிறந்த, "ஆதிக்கச் சாதிகளின் அடையாளத்தைச் சுமக்கும் அடையாளமற்றதுகள்" உண்டு என்ற செய்தியைச் சரண்குமார் லிம்பாளே எழுதிய அக்கர்மஷி (சாதிகளாலும், சுயசாதியாலும் விலக்கப்பட்டவன்) நாவலை மேற்கோள் காட்டி பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறார் புதியமாதவி. சரண்குமார் லிம்பாளேயின் அக்கர்மஷி புதினம் உண்மைகளின் உரைகல். சேரிகளின் சிதைவுகள். சரண்குமாரின் அம்மாவும், சகோதரிகளும் பொது இடத்தில் நிர்வாணமாகவே குளிக்கிறார்கள். ஒரு பெண்ணைத் தகப்பனே பெண்டாளுகிறான். என் விதையில் முளைத்த மரக்கனிகளை நான் ஏன் சுவைக்கலாகாது என்கிறான். வீடில்லாத, கதவுகள் இல்லாத திறந்தவெளியில் குடும்ப வாழ்க்கை. 'ஓர் இஸ்லாமியரைத் தன் உறவுக்காரர்' என்று சொல்ல, சரண்குமாரைச் சுற்றி இருக்கும் தலித் சிந்தனையாளர் கூட்டம் தன் புருவம் உயர்த்துகிறது

 

"நான் யார்?" "எது அடையாளம்?" "சாதிதான் மனுச அடையாளமா?" "சமுதாயத்தில் ஒருவன் அப்பன் இல்லாமல் ஆத்தா இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாதி இல்லாதவனாக இருக்கக் கூடாது; இருக்கவே முடியாது". "சாதி கெட்ட பயலே" என்பதுதான் வசவுகளிலேயே கீழ்த்தரமான வசவு. சரண்குமார் லிம்பாளே எழுதிய அக்கர்மஷி நாவலை முன்வைத்து புதிய மாதவி எழுதிய இக்கட்டுரை ஆதிக்கச் சாதிகளின் கன்னத்தில் செருப்பால் அடித்துக் கொண்டே இருக்கும்.

 

மும்பையின் சிவப்பு விளக்கு என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் காமட்டிபுரத்தில் வாழ்ந்த நாம்தேவ் தாசல் (1949-2014) இடதுசாரி இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். 1972 இல் அர்ஜுன் டாங்ளே போன்ற தன் சகாக்களுடன் சேர்ந்து தலித் பேந்தர் அமைப்பை உருவாக்கியவர். தலித் பேந்தர் அமைப்பு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகச் செயல்பட வேண்டும் என்பது அவர் விருப்பம். இக்கருத்துக்கு உடன்படாதவர்களால் இயக்கம் பிளவு பட்டது

 

"மொழியின் அந்தரங்க உறுப்பில்

பால்வினை வியாதியின் ஆறாத புண் நான்

 

என்று 'கொடூரம்' என்ற தலைப்பில் அமைந்த நாம்தேவ் தாசலின் கவிதை எத்தனை காலமும் நெஞ்சில் கனக்கும். இக்கட்டுரைக்குக் 'கலகக்காரனின் கவிதை ஆயுதம்' என்ற தலைப்பு கொடுத்து இருக்கிறார் புதியமாதவி.

 

புலம் பெயர்ந்த தமிழர்கள் உலக நாடுகளில் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களில் கலை, எழுத்து ஆர்வம் உள்ளவர்கள் காவியங்களைப் படைக்கின்றனர். அவர்கள் சென்ற நாட்டின் வரலாறும், பண்பாடும் அதில் சேரும்பொழுது அது அற்புதமான கலவையாக மாறுகிறது, ஆங்கிலத்தில் ஹைபிரிட் (Hybrid) என்று சொல்வதைப் போல. அது போன்ற "தமிழ் - மராட்டியம்" மொழி, பண்பாட்டுக் கலப்பின் உயர் விளைச்சல்தான் ஒரு புதினத்தின் விறுவிறுப்புடன் கூடிய புதிய மாதவியின் 'சைத்ய பூமி' என்னும் இந்நூல்.

 

 

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

 

நன்றி : புதிய கோடாங்கி , பிப் 2023