Tuesday, December 15, 2020

FARMERS law .. is only farmers issue!


 (see this list. 20 out of 22 agri logistics ltd .. of ADANI were set up during MODI rule)

Why I stand with FARMERS
 this is really Farmers issue ...
! who will be affected ? 
கொரொனா காலத்தில் நாடு மிகப்பெரிய 
ஒரு பொருளாதர சிக்கலையும் சந்தித் துக்கொண்டிருக்கும் போது
 அரசு அதுவும் ஜனநாயக அரசு இப்படியான
 ஒரு சட்ட த்தை அவசரம் அவசரமாக கொண்டுவர
 வேண்டியதன் அவசியம் என்ன?
 இப்போது இதற்கான தேவை என்ன? 
இப்படியான ஓரு சட்ட த்தை எந்த அரசாவது 
கொண்டுவந்திருக்கிறதா! சர்வாதிகாரியைப் போல
 சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு
 விவசாயிகள் உழைப்பாளர்கள் உரிமையை மட்டும்
 இந்தச் சட்டம் பாதிக்கவில்லை. 
இந்த சட்டங்க:ள் மீறப்பட்டால் விவசாயி நிதீமன்றம்
 செல்ல முடியாது என்பது மட்டுமல்ல, 
 இந்தியக்குடிமகன் எவருமே இச்சட்டம் குறித்து நீதிமன்றம் செல்லும் உரிமையை மறுக்கிறது

. Article 19 in the Indian Constitution is about freedom of expression, freedom of assembly, but here it (farm laws) is about exempting any cog in the govt machinery of legal scrutiny,” Sainath said. “And it does not specify that farmers could not do it. It says nobody can. You are going to see these clauses in every law that comes in. “விவசாயிகளால் அதைச் செய்ய முடியவில்லை 
என்று அது குறிப்பிடவில்லை. யாராலும் முடியாது 
என்று அது கூறுகிறது. வரும் ஒவ்வொரு சட்டத்திலும்
 இந்த உட்பிரிவுகளை நீங்கள் காணப் போகிறீர்கள். ” -சாய்நாத் 


 அம்பானியும் அதானியும் மிக அதிகமான கொள்ளளவு கொண்ட மண்டிகளை godowns 2019 ல் இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே கட்ட 
ஆரம்பித்துவிட்டார்கள். ஒட்டுமொத்த விவசாய விளைப் பொருட்களையும் நாளைக்கு இவர்கள் தங்களிடம் பதுக்கி வைத்துக் கொள்ளலாம். 
அந்தப் பதுக்கலை சட்டம் ஏற்றுக்கொள்கிறது. எந்த ஒரு பொருள் விளைச்சலுக்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது.
 அதைத் தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக இவர்களே
 இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட உணவு தானியத்தை 
முழுவதும் கைவசமாக்கி இவர்கள் 
பற்றாக்குறையை / தட்டுப்பாடுகளை உருவாக்க முடியும். 
 அதாவது இவர்கள் நினைத்தால் தட்டுப்பாடு தானே உருவாகும் . திட்டமிடப்பட்ட வளர்ச்சியைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள்.. திட்டமிடப்பட்ட பற்றாக்குறையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா! 

 இந்த ஆண்டு பருப்பு விளைச்சல் அமோகமாக இருந்ததே.. அப்படியும் ஏன் சந்தையில் இந்த விலை? இவ்வளவு டிமாண்டு என்று நம்மை யோசிக்க விடமாட்டார்கள்! இவர்களே பொருளாதர வல்லுனர்களை உருவாக்கி கொள்ளையடிப்பது என்று சொல்லாமல் புதியப் புதிய பொருளாதரக் கொள்கைகளாக பேச வைப்பார்கள்! 
 காலனி ஆதிக்கத்தில் என்ன நடந்த தோ அதுவே 
இப்போதும் நடக்கிறது. அப்போது சுரண்டியவன் 
அடுத்த நாட்டுக்காரன். ஆங்கிலேய அரசு. 
இப்போது சுரண்டுபவன் நம்ம நாட்டுக்காரன்,
 நாம் தேர்ந்தெடுத்த அரசு.. 

 விவசாயிகள் போராட்டமாக இதைச் சுருக்கிவிட வேண்டாம். 
 இது எல்லோருக்குமான இருத்தலுக்கான வாழ்க்கைக்கான போராட்டமாகிவிட்டது.

Friday, December 11, 2020

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்..

 


#rajini_politics
# ரஜினிகாந்த்_அரசியல்

ரஜினியின் அரசியல் அடைமழையா தூறலா
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு
ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன செய்துவிடமுடியும்?
ஊடகங்களுக்கு ரஜினி பெரும்தீனி.
ரஜினி ரசிகர்களுக்கு நீண்ட நாளைய கனவு.
ஆனல்.. ரஜினியின் பிம்பம் .. தமிழக அரசியலில்
என்னசெய்ய முடியும்?!!!
தமிழக வாக்காளர்களில் நகர்ப்புற வாக்காளர்களையும்
நகரங்களில் வாழும் சினிமா ரசிகர்களையும் கொண்டு
தீர்மானித்துவிட முடியாது. இன்றும் கிராமப்புற
வாக்காளர்களுக்கு ரஜினி சூப்பர் ஸ்டாரும் அல்ல.
ஓட்டு வங்கியும் அல்ல. இந்த கிராமப்புற வாக்காளர்களின்
உளவியலை மிகச் சரியாக கையில் எடுத்துக்கொண்டு
தன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டவர்
அதிமுகவின் ஜெ. அதிலும் குறிப்பாக பெண்களின் ஓட்டுகளை!
இப்போது அம்மாதிரி பெண்களின் ஓட்டுகளைக் கவரும்
ஒரு காந்தம் அரசியலில் இல்லை.
ஆனால் அந்த இட த்தில் கமல ஹாசனோ ரஜினிகாந்தோ
வந்தமர்ந்துவிடவும் இல்லை. அது என்னவோ அப்படித்தான்.!

நடிப்பு என்று வந்துவிட்டால் அதில் பல்வேறு பாத்திரங்களை
திரையில் கொண்டுவரும் நடிகனின் பாத்திரத்தை
இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
அதுவே அவர்களின் பலமும் பலகீனமும்.
நடிப்பு துறையில் அது பலம். அரசியலில் அது பலகீனம்.
எம்ஜிஆர் என்றுமே இவர்கள் இருவரையும் போல
ரிஸ்க் எடுத்ததே இல்லை! திரையில் NO NEGATIVE ROLES.
தேர்தல் நேரத்தில் 16 வயதினிலே திரைப்பட த்தில் வரும்
“பரட்டை “ டிவியில் ஓடினால்..அவ்வளவுதான்.
ரஜினிக்கு கிராமப்புற பெண்களின் ஓட்டு கிடைக்குமா?
மேலும் கமலஹாசன் இன்றும்
சீமான் சீமாட்டிகளின் செல்லப்பிள்ளை தான். !
அதிமுக ஓட்டுவங்கி என்பது பிரியும். ச சிகலா வெளியில்
வரும்போது சசிகலாவுக்கு பெரிய ஓட்டுவங்கி இல்லை
என்றாலும் அதிமுக ஓட்டு வங்கியை தினகரனும் சசிகலாவும்
தங்கள் கரன்சி வலிமையால் உடைப்பார்கள்.
திமுகவின் ஓட்டுவங்கி என்பது எப்போதுமே
மிக அதிகமான ஏற்ற இறக்கம் கொண்ட தல்ல.
உதய சூரியனுக்கு ஓட்டுப்போட்டவர்கள் சாகும்வரை
உதயசூரியனில் தான் குத்துவேன் என்று குத்தும்
வாக்காளப் பெருமக்கள்!
இதை மட்டும் காப்பாற்றி கொள்வதில் இன்றைய
திமுக கவனம் செலுத்துகிறதா என்பது
திமுகவின் பிரச்சனை. பொதுஜன பிரச்சனை அல்ல!
மேலும் கணிசமான வாக்குகள் கொண்ட விஜயகாந்த்
இன்று உடல் நலக்குறைவும் அவர் மனைவியின்
அரசியல் தொண்டர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும்
ஒவ்வாமையும் ரஜினியின் ஓட்டாக மாறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது.
இத்துடன் கம்யுனிஸ்டுகள் மற்றும் பாட்டாளி மக்கள்
கட்சி இத்தியாதி கட்சிகளுக்கு எப்போதும் கிடைக்கும்
வர்க்க சாதி ஓட்டுகளில் பெரிதாக மாற்றம் இருக்காது.
அப்படியானால்…. தமிழகத்தின் அரசியலில் கமல் ரஜினி யார்?
கமல் என்னைப் பொறுத்தவரையில் க்ளீன் அவுட்.
ரஜினி மட்டும் தான் கவனிக்கப்பட வேண்டியவர்.
ஆன்மீக அரசியல் என்றால் எங்க ஊரு வாக்காளர்கள்
அப்படின்னா என்னக்கா? என்ன தருவாங்க? என்று கேட்பார்கள்.
இதை ஊடகங்களும் அறிவிஜீவிகளும் அறிவார்கள் தானே!
புதிதாக ஓட்டுப்போட வரும் இளைஞர்களின் ஓட்டு சதவீதம்
ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு? இதை கணக்கில்
எடுத்து ஒரு கூட்டல் கழித்தல் போட்டால் போதும்.
பிஜேபி க்கும் இந்தக் கணக்கு உதவும்!

ஆனாலும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதே
என் விருப்பமும்.
ரஜினி தரும் அரசியல் பாடம்.. எதிர்காலத்தில்
நம் திரை நாயகர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும்
என்பதால் ரஜினி கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும். !

Wednesday, December 9, 2020

விவசாயிகளின் டில்லி முற்றுகை ..

 

தலைநகரம் டில்லி முற்றுகை இடப்பட்டிருப்பது ஏன்?
96000 டிராக்டர்கள்
22000 லாரிகள்
6 மாத த்திற்கான உணவு
டில்லி குளிரைத்தாங்கும் ஸ்வெட்டர்கள் போர்வைகள்
செல்போன் ரீசார்ஜ்ர்கள்
பெண்கள் லாரிகளில் உட்கார்ந்து சப்பாத்தி போடுகிறார்கள்.
ஆண்கள் காய்கறி வெட்டிக்கொடுத்து
சமைத்த உணவைப் பரிமாறுகிறார்கள்.
1கோடியே 40 இலட்சம் விவசாயிகளின் முன்னெடுத்திருக்கும்
போராட்டம் இது. இன்னும் சொல்லப்போனால்
ஓரிட த்தில் இத்துனை பேர் கூடி முன்னெடுத்திருக்கும்
போராட்டமாக வெடித்திருக்கிறது.
ஆனாலும் ஊடகங்கள் .. முட்டைவிலை ஏற்ற இறக்கத்தையும்
ப்ரேக் நியூஸ் தரும் நம் ஊடகங்கள்
இவற்றை வெளிக்கொணர தயக்கம் காட்டுகின்றன.

3 வேளாண் மசோதாக்கள்:
1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.
இந்தியாவில் வேளாண் சந்தை மிகப்பெரியது.
சற்றொப்ப 16,58,700 கோடி ரூபாய் புரளும் துறை.
இன்றும் இந்திய மக்களில் 55% வேளாண்துறையை
நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் வாழ்க்கை.
வேளாண்மை என்பது தனிமனித தேவைக்கு அப்பால்
சந்தை வணிக்கத்தை நோக்கி நகர்ந்தப் பிறகு
வேளாண் உற்பத்தியும் சந்தையும் ஒன்றை ஒன்று
சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்ட து.
குறிப்பாக பசுமைப்புரட்சிக்குப் பின்.
இதை முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள்
– அதாவது மண்டி முறை ஏற்படுத்தப்பட்ட து.
இதில் அரசியல் கட்சிகள் ஆளும் கட்சிகளின்
தலையீடு காரணமாக மண்டிகள் விவசாயிகளுக்கு
எதிர்ப்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.
இதையே காரணமாக்கி இன்று மண்டி கொள்முதலை
சரித்துவிட தனியாருக்கு இடமளிக்கிறது
இன்றைய வேளாண் மசோதா (மசோதா 3. )
ஏன் எதிர்க்கிறார்கள்?

ஏற்கனவே கேரளா மற்றும் பீகாரில் திறக்கப்பட்ட
தனியார் மண்டிகளால் / கொள்முதலால்
என்ன நடந்திருக்கிறது என்பதை விவசாயிகள் அறிவார்கள்.
எனவே தான் தங்களின் உழைப்பும் மண்ணின்
விளைச்சலும் தனியாருக்கு அதிலும் குறிப்பாக
கார்ப்பரேட்டுகளின் கைகளில் போய்விடக்கூடாது
என்பதிலும் இந்தியாவில் இருக்கும் 100 கார்ப்பரேட்டுகள்
தங்கள் வேளாண்மையை தீர்மானிக்கும்
ஆக்டோபஸ்களாக மாறிவிட அனுமதிக்க மாட்டோம் என்று கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு பீகாரிகள் தமிழக ஹோட்டலில்
மேசைத்துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
ஒரு செய்தியாக வாசித்து கடந்துவிட்டோம்.
இவர்கள் ஏன் பீகார் மண்ணைவிட்டு மொழி தெரியாத
இன்னொரு மா நிலத்திற்கு பிழைப்புத்தேடி
வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் யோசித்துப்
பார்க்கவே இல்லை.
இவ்வாறு 2006க்குப் பின் புலம்பெயர்ந்தவர்களில்
பெரும்பான்மையானவர்கள் விவசாயக்குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் சேர்த்து வாசிக்க வேண்டும்.
தனியார் வரும்போது போட்டி அதிகமாகும்.
அதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.
இதை வேளாண் பொருளாதர அறிஞர் தேவிந்தர் சர்மாவும்
உறுதி செய்திருக்கிறார்.
நினைத்துப் பாருங்கள்..
தொலைத் தொடர்பு நிறுவனத்தில் போட்டி
உருவானால் கட்டணம் குறையும் என்றார்கள்.
நாமும் நம்பினோம்.
ஆனால் ஜியோ வந்து எல்லோரையும் தின்று செரித்து
சந்தையில் எச்சிலாக துப்பியது.
BSNL கதையில் இனி மறைப்பதற்கு எதுவுமில்லை.
தனியாருக்கு மண்டிகளை திறந்துவிடுவதன் மூலம்
வெளி நாட்டு தனியார் நிறுவன ங்களும்
இந்திய வேளாண் துறையில் தன் ஆதிக்கத்தைக்
காட்டுவதற்கான இடமிருக்கிறது.

கொரொனா பொருளாதாரம்:

எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்கு என்று
ஒரு புதிய சந்தையை கொரொனா பொருளாதர சந்தை
உருவாக்கி இருக்கிறது. பொதுவாக கொரோனாவுக்கு
முன்புவரை காய்கறிகள் அரிசி தானியங்களை
ஆன்லைனில் வாங்கதவர்களும் இப்போது
வாங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த ஆன்லைன் சந்தைக்கு கையிருப்பு அதிகம்
வேண்டும். புதிய வேளாண் சட்ட வரைவு தனியார்
எவ்வளவு வேண்டுமானாலும் கையிருப்பு வைத்துக்
கொள்ளலாம் என்று பதுக்கலுக்கு பச்சைக்கொடி
காட்டி இருக்கிறது.!
இந்த ஆபத்தை சமூகம் உணர வேண்டும்.

இறுதியாக…
இந்திய அரசியல் சட்டப்படி வேளாண்மை
மாநில அரசியலில் தானே உள்ளது.
அதை மத்திய அரசு மீறுவது ஏன்?

Tuesday, December 8, 2020

I STAND WITH FARMERS. .. but...

 

"I STAND WITH FARMERS .. என்று எழுதமுடியாமல்
தலை குனிந்து நிற்கிறேன்"
இப்போதும் அரிசி தான் எனக்கும்
என் குடும்பத்திற்கும் முக்கியமான உணவு
RICE ஏன் முளைவிடவில்லை?
விவசாயிகளின் போராட்டம் தலை நகரில் நடந்து
கொண்டிருக்கும் போது நானும் சங்கீதாவும் அரிசி
ஏன் முளைவிடவில்லை என்று அல்லாடிக்கொண்டிருந்தோம்.
சங்கீதா எனக்கு வீட்டு வேலையில் உதவியாக இருக்கும்
பெண். பூர்வீகம் கேரளா. ஓரளவு மலையாளம் பேசுவார்.
மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
மும்பை மராட்டிய இளைஞரை காதல் திருமணம்
செய்து கொண்டவர். அன்பானவர். கடின உழைப்பாளி.
அவருக்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் மகன்.
அவனுக்கு ப்ராஜெக்ட் தானியங்களை சேகரித்து
முளைவிட வைத்து ஒவ்வொரு தானியமும்
எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்ட து
என்று காட்ட வேண்டுமாம்.

சங்கீதா தினமும் என்னிடம் ரைஸ் மட்டும்
இன்னும் வரவில்லை,, என்ன செய்யலாம்
என்று நச்சரித்தாள். நானும் என்னவோ
எனக்கு விவசாயம் ரொம்பவும் தெரிந்த மாதிரி டிப்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
நேற்று தான் அரிசியின் கதை முடிச்சு அவிழ்ந்த து.
அழுவதா சிரிப்பதா!
மும்பை அரிசி முளைவிடாது.
பாலிஸ் செய்திருக்கிறார்கள்.
நீங்கள் ஊரிலிருந்து கொண்டுவந்திருக்கும்
அரிசி கொஞ்சம் தாருங்கள்
என்று கேட்டாள்…
அவள் இந்த ஒரு மாதமாக அரிசியைப் போட்டு
முளைவிடும் என்று காத்திருந்திருக்கிறாள்.
என்பதே அப்போது தான் எனக்கும் புரிந்தது.
நெல் தான் முளைவிடும்.
நெல்தான் விதை.. என்று புரிய வைப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிட்ட து.
தசாரா நாட்களில் லட்சுமி பூஜை நாட்களில்
மும்பை மார்க்கெட்டில் நெல் கதிரை
பூ மாலைக்கு நடுவில் வைத்து கோர்த்திருப்பார்கள்.
அதை நினைவூட்டி அது தான் நெல் என்று
புரியவைத்தேன். என்னிடமும் இதுதான் நெல் என்று
காட்டுவதற்கு நெல் இல்லை.
இனி ஊருக்குப்போனால் ஒரு குட்டிச்சாக்கு
நிறைய நெல் எடுத்துக் கொண்டு வர வேண்டும்… !
இந்த அல்லாடலில் இன்னொரு விஷயமும்
தெரியவந்த து. என் மருமகளுக்கும் நெல் தெரியாது..
என் மகனுக்கும் தான்!
இவர்கள் நாளை அரிசியைப் போட்டு
நெல் விளைவிக்கலாம் என்று
சொல்லிக்கொடுப்பதற்குள் ..
என் பேரனுக்காவது இதுதான் நெல் என்று காட்ட வேண்டும்..

இதை எழதும் போது அவமானமாக இருக்கிறது.
இந்த உண்மை ரொம்பவும் குரூரமானது.
இதில் I STAND WITH FARMERS என்று எழுதமுடியாமல்
தலைகுனிந்து நிற்கிறேன்.

Monday, December 7, 2020

FOMO

 சமூக வலைத்தளத்தின் இன்னொரு முகம் FOMO.

லைக்ஸ் வராட்டி கவலை
ஒரு நாள் பதிவு போடாவிட்டாலும் எதையோ
மிஸ் பண்ற மாதிரி ஒரு பதட்டம்.
உப்பு சப்பில்லாத குட் நைட் பதிவுக்கு
எதுக்கு நூற்றுக்கணக்கான லைக்ஸ் என்று குழப்பம்.
நீண்ட பதிவா எழுதினா யாரு வாசிப்பா என்ற தயக்கம்.
முதல் பதிவு பிறந்த நாள் வாழ்த்து.. சரி..
யாருனு தெரியுதோ தெரியலையோ போடு ஒரு லைக்ஸ் னு
போட்டுட்டு அடுத்தப் பதிவுக்கு வந்தா ஒரு மரணம்.
மரணசெய்தி அறிவிப்புக்கு லைக்ஸ் போடலாம
வேண்டாமனு பெரிய்ய குழப்பம்.. கவனமா
அந்த கண்ணீர் சொட்டற EMOJI உதவியால்
கொஞ்சம் கண்ணீர் விட்டு RIP.
இந்த இரண்டையும் கையாளும்
ஜென் மன நிலையைக் கடந்து வந்தா
கவிதை என்ற பெயரில் எங்கேயோ யாரோ
எழுதிய பறவைகளின் பெயரெல்லாம்
வருகிற மாதிரி ஒரு வாந்தி எடுக்கற கவிதை..
அதை அப்படியே டிஷ்யு பேப்பரால் துடைத்துவிட்டு
இதில கவிதை இருக்கு.. இது கவிதையே தான் அப்படினு மனசை சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு லைக்ஸ்.
சரி.. எதுக்கு இந்த அல்லாடல்னா ..
அப்படின்னு நினைச்சி புத்தகத்தை எடுத்து
வாசிக்க ஆரம்பிச்சா கண்ணைக் கட்டிக்கிட்டு வருது..!

முக நூலில் எழுதறதை நிறுத்திட்டா
வேறு எங்க தான் எழுதறது?
நம்மளை என்ன ஜன ரஞ்சக பத்திரிகையிலிருந்து
கூப்பிட்டு பத்தி எழுதச் சொல்லப்போறாங்களா என்ன?
சும்மா புலம்பக்கூடாது..
இந்தப் புலம்பலுக்கு பேரு தான் FOMO.
(Fearing Of Missing Out)

FOMO எப்படி நம்ம வாழ்க்கையில வந்திச்சி..
அடுத்தவன் வீட்டில் கலர் டிவி வாங்கிட்டா
நாமும் வாங்கினோம்.
அடுத்தவர் வீட்டில் MAC மடிக்கணினியா
அவர் வச்சிருக்கிறதா ஆப்பிள் போனா.. எந்த மாடல்…
இதுவரை ஒகே … அப்போ FOMO வரல.

ஆனா இப்போ அடுத்தவர் வீட்டில் என்ன சமையல்
என்பதிலிருந்து அவரு என்ன படம் பார்த்தாரு
எந்த ஊருக்குப் போனாரு
அவரோட கேர்ள் ப்ரண்ட் யாரு
அவ ஏன் விதம் விதமா போட்டோ போடறா
இப்படியாக அடுத்தவர் … அடுத்தவர் .. அடுத்தவருடன்
பயணிக்கும் வாழ்க்கையாக மாறி இருக்கிறது
இன்றைய வாழ்க்கை.
செல்ஃபியில் சிரிக்கிற போட்டோ போட்டுட்டு
அடுத்த நிமிடம் நாயும் பூனையுமா அடிச்சிக்கிற
வாழ்க்கை.
குடும்பமா உட்கார்ந்து பொதிகையில் சினிமா
பார்த்த காலம் மலையேறிவிட்ட து.
வீட்டில் நாலு பேரு இருந்தா நாலு பேருக்கும்
வேறு வேறு காட்சிகள் தேவைப்படுகிறது.
பிள்ளைகள் பெற்றோர்களிடம்
வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசுகிறார்கள்.
ஏன் .. பல வீடுகளில் கணவன் மனைவி இருவரும்
வாட்ஸ் அப்பில் ஐ லவ் யூ, ஐ மிஸ் யு சொல்லிக்கொள்வதில்
உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக நினைக்கிறார்கள்.
யாரும் யாரோடும் பேசுவதில்லை.
எல்லாமே மெசேஜ் தான்…
கொரொனா மாதிரி எதாவது ஒரு பூதம் வரனும்.
செல்போனை பயன்படுத்தினால் அவனுக்கு இழுப்பு
வந்திடும்னு .. எந்த சமூக வலைத்தளத்தில்
க்ளிக் செய்தாலும் உடம்பு நிறம் மாறி
கன்னங்க் கரென்னு போயிடுவாங்களாம்
அம்புட்டுத்தான் அப்படின்னு எதாவது ஒரு
பீதி கிளம்பனும்.
JOMO is missing in our liFe.
No photo description available.

Comments



Saturday, December 5, 2020

டிசம்பர் 06 அம்பேத்கர் நாள்

 இந்துவாக பிறந்த நான் இந்துவாக இறக்க மாட்டேன்”

1935 ல் ஒலித்த அம்பேத்கரின் குரல் காற்றில் கரைந்துவிடவில்லை.

அந்த மனிதருக்குள் அக்னிக்குஞ்சாக அணையாமல் இருந்த து.
அக்டோபர் 14, 1956 ஞாயிறு..
அன்று அசோகர் விஜயதசமி நாள்.
(அசோக சக்கரவர்த்தி பவுத்தம் தழுவிய நாள்)
நாக்பூரில் தான் அவரின் கனவு வரலாற்றி நிகழ்வானது.
உலக வரலாற்றில் ஒரே நாளில்
ஓரிட த்தில் கூடி 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்
முதல் முறையாக மதம் மாறினார்கள்.



நாக்பூர்.. பவுத்தம் வளர்த்த
பூமி. இந்திய தொல்குடி மக்களாகிய நாகர்களின் மண்.
அங்கிருந்து தான் அம்பேத்கர் தன் வாழ்வில்
தன் கனவை நிறைவேற்றினார்.
எழைகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு
மதம் தேவைப்படுகிறது. கடவுள் தேவைப்படுகிறார்”
என்பதை ஏற்றுக்கொண்ட சமூக விஞ் ஞானி.
அம்பேத்கர். கடவுளின் தேவை உளவியல் ரீதியானது.
இதை ஏற்றுக்கொள்வதில் அவர் அறிவு
அவருக்கு தடையாக இல்லை.
(For the poor, religion is a necessity. Religion is necessary
for people in distress. The poor man lives on hope. 'Hope!'- )
எப்போதும் தன்னை முன்னிலை படுத்தியே அவர்
பேசவில்லை. முடிவுகள் எடுக்கவில்லை.
ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையை அவர்
முன்னிலைப்படுத்தினார். அதற்காக அவர் எவருடனும்
சமரசம் செய்து கொள்ள முடியாமல் தவித்தார்.
பல தருணங்களில் அவன் தனிமரமாகவே நின்றார்.
அக்டோபர் 14, 1956.. அந்த நாள்..
அவரைப் பொறுத்தவரை.. எப்படி இருதிருக்கும்?
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ரங்கூனிலிருந்து வந்திருந்த பவுத்த துறவி
நமிட் பிக்கு சந்திரோமொனி
வழி நட த்த அம்பேத்கர் உறுதிமொழி ஏற்ற நிகழ்வு..
“I will not practice untouchability and will regard all human beings as equal”
கூட்டம் ஒரு கணம் சலனமின்றி ஸ்தம்பித்து நிற்கிறது,
அதே உறுதிமொழியை மராட்டி மொழியில்
அம்பேத்கர் சொல்ல சொல்ல அங்கே கூடியிருந்தவர்கள்
உறுதிமொழி ஏற்கிறார்கள்…
வரலாறு மவுனமாகி தன்னை
ஒரு சாட்சியமாக நிறுத்திக்கொள்கிறது..
.. நாக்பூரில் அந்த தீக்ஷாபூமிக்கு போயிருக்கிறேன்.
அந்த பெரிய மைதானம்.. அம்பேத்கர் .. பேசிய அந்த இடம்..
அந்தக்கூட்டம்.. அந்த மக்கள்… அவர்களின் நம்பிக்கை..
என்னை மெல்ல அசைத்துப்போட்ட து.
வாழ்வில் மிகப்பெரிய ஒரு முடிவு
எடுத்திருக்கிறார்.
அவர் பின்னால் அவரை நம்பிய மக்கள் கூட்டம்..
அவர் மன நிலை எப்படி இருந்திருக்கும்..?
அந்த மன எழுச்சியின் அலைகள் எனக்குள் ..
சற்றொப்ப 45 நிமிடங்களுக்கும் அதிகமாக அந்த நினைவு
மண்டபத்தில் உட்கார்ந்திருந்தேன்..
அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்த து.
அந்த மக்களின் முகங்கள் பேரலையாக எழுந்து வந்தன.
அழ வேண்டும் போலிருந்தது. அழவில்லை.
அழுதுவிட்டால் இந்த மனசின் கனம் இறங்கிவிடுமோ..
வேண்டாம். இந்தப் பூமி சுமந்த
கனம் எனக்குள்ளும் அப்படியே இருக்கட்டும்.




நாக்பூரில் அம்பேத்கர் தங்கியிருந்த
ஹோட்டல் சியாம்
(Hotel Shyam in Sitabuldi area of the city has historic importance as Dr Ambedkar had stayed here for four days, from October 11 to 16 in 1956,)
அந்த அறையில் அதன் பின் வேறு யாருமே
தங்குவதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளர்
அனுமதிக்கவில்லை. அந்த அறை அந்த மனிதரின்
தூக்கமில்லாத அந்த இரவுகளை
அப்படியே சுமந்து கொண்டிருக்கிறது.
அந்த ஹோட்டலை அரசுடமையாக்க
அம்பேத்கரியவாதிகள் எடுக்கும் முயற்சி
கைகூடவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள்

மாறிய பின் என்ன நிலவரம் என்பது தெரியவில்லை.
CERI கருத்தரங்கிற்காக நாக்பூர் போயிருந்தப்போது தான்
இந்த அனுபவம் கிட்டியது. கருத்தரங்கில்
காலை முதல் அமர்வில் கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்.
பவுத்தம் தழுவிய பின் மக்களின் வாழ்க்கையில்
என்ன மாறுதல் ? என்ற கேள்வியை முன்வைத்தேன்.
எனக்குப் பின் பேசியவர்..
(என்னை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்)
"புதியமாதவி..உங்களுக்குத் தெரியுமா..
என்ன நடந் த து என்று…
எம் அம்மாவிடம் கேளுங்கள்.
என்பாட்டியிடம் கேளுங்கள்.. என்ன நடந்த து என்று
அவர்கள் சொல்வார்கள் "என்றார்.
திருமணம் முடிந்தப் பின் அன்றிரவு மணப்பெண்ணை
அந்த ஊரிலிருக்கும் பண்ணையார் வீட்டுக்கு
அனுப்ப வேண்டும். அவன் அனுபவித்தப் பிறகுதான்
அந்தப்பெண் அவள் கணவனுக்கு உரியவள்.
பவுத்தம் தழுவிய பிறகு..
“போடா எங்க பொண்ண அனுப்பி வைக்க முடியாது “
என்று சொல்லும் சுயமரியாதையை
பவுத்தம் எங்களுக்கு கொடுத்திருக்கிறது
என்று முழங்கினார்.

நாக்பூரில் பலரைச் சந்தித்தேன். தோழி வின்னிமேஷ்ரம்
அவர் ஆரம்பித்திருக்கும் பவுத்த பள்ளிக்கூடம்
இதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன.
என் முதல் நாவல் பச்சைக்குதிரையில்
வின்னிமேஷ்ரமும் அவள் பவுத்தப்பள்ளியும்
தானே வந்து தன்னை எழுதிக்கொண்டன.
பவுத்தம் தழுவி 2 மாதங்களுக்குள்
அம்பேத்கர் மறைந்துவிட்டார்.
டிசம்பர் 1954 ல் ரங்கூனில் நிகழ்ந்த பவுத்த மா நாட்டில்
அவர் கலந்து கொண்ட தற்குப் பின் இந்த
மதமாற்ற முடிவை நோக்கி வேகமாக
பயணிக்கிறார். காலம் அவருக்கு அதற்கு மேல்
அவகாசம் கொடுக்கவில்லை.
அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால்
ராமச்சந்திர குஹா சொல்வது போல
அவருடைய பவுத்தம்.. அவர் கண்ட புத்தர்..
இன்னும் தெளிவாகி இருக்கலாம்.


டிசம்பர் 06 அவர் தன் மக்களிடமிருந்து விடை பெற்ற நாள்..

மாமனிதரைப் போற்றுவோம்.

#December6_Ambedkar